Just In
- 13 min ago எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- 45 min ago பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- 1 hr ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- 3 hrs ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
Don't Miss
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Movies அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
ரத்த சோகை இருக்கா? சீக்கிரம் குணமாக நீங்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!
ரத்த சோகையை குணப்படுத்த தேவையான அவசிய உணவுகளை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனி தன்மை உண்டு. எல்லா வகையான ஊட்டச்சத்துக்களையும் ஒரு சேர எடுத்துக் கொள்ளும்போது தான் உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது மூளையும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதனால் அறிவாற்றல் பெருகும்.
இரும்பு சத்து :
இந்த ஊட்டச்சத்துகளில் இரும்பு சத்துக்கு தனி முக்கியத்துவம் உண்டு. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கும் அதன் அதிகரிப்புக்கும் இரும்பு சத்து மிகவும் உதவுகிறது. தசைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. மூளையின் செயல்திறனை அதிகப்படுத்துகிறது. உடல் வெப்ப நிலையை கட்டுப்படுத்துகிறது. உடல் முழுதும் ஆக்சிஜென் ஓட்டத்திற்கு துணை செய்கிறது. ரத்தசோகையை குறைக்கிறது. நாட்பட்ட நோய்க்கு சிறந்த மருந்தாகிறது. கர்ப்பகாலத்தில் இரும்பு சத்து அதிகம் எடுத்துக்கொள்வது பெண்களுக்கு மிகவும் அவசியம்.
இரும்பு சத்து அதிக உள்ள உணவு என்று உலகம் முழுதும் கருதப்படுவது சிவப்பு இறைச்சியாகும். இந்த சிவப்பு இறைச்சியை விட அதிகம் இரும்பு சத்து நமது தாவர உணவுகளில் சிலவற்றில் உள்ளது. சைவ உணவை விரும்பி எடுத்துக் கொள்கிறவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளை தினசரி உணவில் இணைத்துக் கொள்ளும்போது இரும்பு சத்து அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.
இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளையும் அதன் பயனையும் இப்போது பார்க்கலாம்.
கீரை:
இரும்பு சத்தின் ஆதாரமாக கீரை பார்க்கப்படுகிறது. தினமும் கீரை சாப்பிடுவதால் சிறந்த ஆரோக்கியம் கிடைக்கிறது. 100கிராம் கீரையில் 2.7மிகி அளவு இரும்பு சத்து உள்ளது.
ப்ரோக்கோலி :
பச்சை காய்கறிகளில் ப்ரோக்கோலியில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. இரும்பு சத்தை தவிர அத்தியாவசிய ஊட்டச்சத்துகளான வைட்டமின் கே , மெக்னீசியம், வைட்டமின் சி போன்றவை ப்ரோக்கோலியில் அதிகம் உள்ளன. ப்ரோக்கோலியை உங்கள் தினசரி உணவில் தவறாமல் பயன்படுத்தலாம்.
பயறு வகைகள்:
எல்லா வகையான பயறுகளும் இரும்பு சத்து அதிகம் உள்ளவையாகும் . 100கிராம் பயறில் 3.3 மிகி அளவு இரும்பு சத்து உள்ளது. இவற்றில் நார்ச்சத்து , பொட்டாசியம் மற்றும் புரதம் அதிகம் இருப்பதால், உடல் ஆரோக்கியத்தின் ஒட்டு மொத்த நலனும் பயறு உணவை உண்பதால் நமக்கு கிடைக்கிறது.
பரட்டை கீரை:(காலே)
நகரங்களில் இந்த கீரையை அதிகம் காண முடிவதில்லை. கீரை வியாபாரிகளிடம் சொல்லி, இந்த கீரையை வாங்கி சமைத்து சாப்பிடுவதால் உடல் வலிமை அதிகரிக்கிறது. சூப் அல்லது சாலட் செய்து சாப்பிட்டு வருவதால் இரும்பு சத்து அதிகம் சேருகிறது.100 கிராம் பரட்டை கீரையில் 1.5 மி கி அளவு இரும்பு சத்து உள்ளது.
எள்ளு:
நாம் அதிகமாக எள்ளை நமது உணவில் எடுத்துக் கொள்வது இல்லை. ஆனால் அதில் இரும்பு சத்து மிகவும் அதிகமாக உள்ளது என்பதை நினைவில் கொள்வது மிகவும் அவசியம். 100 கிராம் எள்ளில் 14.6மிகி அளவு இரும்பு சத்து உள்ளது. ஆகவே உங்கள் தினசரி சாலட் அல்லது மற்ற உணவுகளில் எள்ளை சேர்த்துக் கொள்வது நல்லது.
மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ளலாம். ஆகவே இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டு ஆரோக்கியமான உடலை பெறலாம்.