For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உடலில் புரொட்டின் சத்து குறைந்தால் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தெரியுமா?

|

புரத சத்து இல்லையென்றால் நீங்கள் இல்லை. ஆமாம் உங்கள் உடலில் ஒவ்வொரு செல்லும், திசுக்களும், சதையும், ரத்தமும் புரதத்தினால் ஆனது. உங்கள் ஹார்மோன், என்சைம், நோய் எதிர்ப்பு செல்களும் உருவாக அடிப்படை தேவை புரதமே.

புரத சத்து சரியான அளவு இருந்தால் மட்டுமே உங்களால் இயங்க முடியும். ஆகவே புரத சத்துக்களின் நன்மைகள் பற்றியும் அதன் குறைபாட்டினாலும் நாம் சந்திக்கும் பிரச்சனைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரத உணவுகள் :

புரத உணவுகள் :

பீன்ஸ் வகைகள், பட்டாணி, போன்ற பருப்பு, பயிறு மற்றும் முளைக் கட்டிய பயிறு வகைகள், நட்ஸ், மீன், கொழுப்பற்ற இறைச்சி, பால், யோகர்ட், வெண்ணெய் ஆகியவை அதிக புரத சத்துக்களை கொண்டுள்ளன.

இவற்றில் தினமும் ஒரு பருப்பு, காய் ஆகியவை எடுத்துக் கொண்டால் உங்கள் அன்றாட தேவையை பூர்த்தி செய்து விடலாம்.

தேவையான அளவு :

தேவையான அளவு :

ஆண்களுக்கு 56 கிராம் புரதமும், பெண்களுக்கு 46 கிராம் அளவு புரதமும் அன்றாட உணவில் இருக்க வேண்டும்.

நன்மைகள் :

நன்மைகள் :

தினமும் தேவையான அளவு புரத உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் இளைக்கும். குளுகோஸ் கட்டுக்குள் தக்க வைக்கலாம். ஹார்மோன் சம நிலையில் இருக்கும்.

நன்மைகள் :

நன்மைகள் :

மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும். மன அழுத்தம் குறையும். தசைகள் வலுவுடன் இருக்கும். என்சைம் நல்ல நிலையில் சுரக்கும்.

இதயத்தை பலப்படுத்தும். கொழுப்பை குறைக்கும். ரத்த அழுத்தத்தை இயல்பாய் தக்க வைக்கும்.

 புரத அளவு குறைபாடு :

புரத அளவு குறைபாடு :

உங்கள் பிள்ளைகள் சரியாக படிக்க வில்லையென்றால் புரதச் சத்து குறைவாக இருக்கலாம். ஏனெனில் புரதக் குறைபாட்டினால் கவனக் குறைவு உண்டாகி படிப்பில் நாட்டம் குறையும்.

 புரத அளவு குறைபாடு :

புரத அளவு குறைபாடு :

உடல் வலுவிழக்கும். மன அழுத்தம் உண்டாகும். உடல் சோர்வு, மனச் சோர்வு , குறைவான வளர்சிதை மாற்றம் , நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், உடல் பருமன், குளுகோஸ் அளவில் மாற்றம் ஆகியவை உண்டாகும்.

அதிக அளவு புரதச் சத்து :

அதிக அளவு புரதச் சத்து :

மிக அதிக அளவு புரத சத்தும் பிரச்சனைகளை உண்டாக்கும். உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்து நெஞ்செரிச்சல், வாய்வு, வயிறு உப்புசம் ஆகியவற்றை தரும். குறிப்பாஉ குளிர்காலங்களில் மிதமான அளவில் புரத உணவுகள் எடுத்துக் கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nutritional benefits of Protein rich foods

Did you know the benefits of eating protein rich foods and Impacts of protein deficiency
Desktop Bottom Promotion