For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுநீரக கோளாறு உள்ளதா? விட்டமின் டி குறைவாக இருக்கலாம்..

|

விட்டமின் டி குறைபாட்டிற்கும், சிறுநீரக கோளாறுகளுக்கும் தொடர்பு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

சிறுநீரக கோளாறு உள்ள குழந்தைகளுக்கு விட்டமின் டி குறைவாகவே உள்ளது என சமீபத்திய ஆய்வு கூறுகின்றது.

Increase vitamin D to cut off kidney problems

விட்டமின் டி குறைபாடுள்ள மூன்றில் இரு குழந்தைக்கு, குளோமெருலோபதி, மற்றும் நெஃப்ரான் பாதிப்புகள் இருக்கின்றன.

பொதுவாகவே குளிர்காலத்தில் விட்டமின் டி சத்து குறைவாகவே இருக்கும். ஆகவே அந்த சமயங்களில் விட்டமின் டி சத்து மாத்திரைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது முக்கியம் என்று கூறுகின்றனர்.

விட்டமின் டி குறைபாட்டினால், ஆஸ்டியோ ஃபோரோஸிஸ், புற்றுநோய், மற்றும் இதய நோய்களும் வரும் என் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுநீரக பாதிப்பு இருக்கும் குழந்தைகளுக்கு மற்ற சாதரணமான குழந்தைகளை விட மிகக் குறைந்த அளவே விட்டமின் டி இருந்தது. பின்னர் விட்டமின் டி சத்து மாத்திரைகளை தந்த போது, அவர்களுக்கு விட்டமின் டி யின் அளவு மற்ற சிறு நீரக பாதிப்பு உள்ள குழந்தைகளைக் காட்டிலும் அதிகமாக காணப்பட்டது.

12 ஐரோப்பா நாடுகளில் சுமார் 500 குழந்தைகள் சிறுநீரக கோளாறால் பாதிப்படைந்துள்ளார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதனைப் பற்றிய தகவல்கள் அமெரிக்கன் சொஸைட்டி ஆஃப் நெஃப்ராலஜி என்ற இதழ்களில் வெளிவந்துள்ளது.

English summary

Increase vitamin D to cut off kidney problems

Increase vitamin D to cut off kidney problems
Story first published: Tuesday, July 19, 2016, 9:49 [IST]
Desktop Bottom Promotion