For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயிற்றிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஒரு ஜூஸ் !!

|

நீங்கள் அடிக்கடி வெளியில் சாப்பிடுபவர்களா? நாள்தோறும் மாசு புகையில் வெளியில் சுற்றுபவரா? உங்களுக்கு தெரியுமா உங்கள் வயிற்றில் எவ்வளவு நச்சுக்கள் இருக்குமென்று.

நீங்கள் சாப்பிடும் அனைத்து வகை உணவுகளிலுமே நச்சுக்கள் மிஞ்சியிருக்கும்,. அவை எல்லாம் சேர்ந்து, வயிற்றில்தான் ரூம் போட்டு தங்கி, வயிற்றிற்கு கேடு விளைவிக்கும்.

How to Detox your Stomach with this juice.

நமது உள்ளுறுப்புகளே முடிந்த வரை தங்களது நச்சுக்களை வெளியேற்றிவிடும்தான். ஆனால் கெட்டுப் போகாமல் இருக்க உண்வுகளில் ராசயனங்கள் கலப்பார்கள். அவை எளிதில் வெளியேறாமல் ஒட்டிக் கொண்டு பாதகத்தை உண்டாக்கும்.

அத்தகைய நச்சுக்களை எப்படி வெள்யேற்றுவது என நீங்கள் யோசித்தால், உங்கல் ஆரோக்கியத்தின் மீது அக்கறைப் படத் தொடங்கிவிட்டீர்கள். நச்சுக்களை நாம் இயற்கை முறையில் பக்க விளைவுகள் இல்லாமல் வெளியேற்றலாம்.

இதற்கு பலனளிக்கும் வகையில் நிறைய உணவுகள் உண்டு என்றாலும் இங்கே கூறப்பட்டிருக்கும் இரு உணவுப் பொருட்களுமே விசேஷ குணம் கொண்டவை.

அவை ஆளி மற்றொன்று பூண்டு. இரண்டிலுமே நிறைய விட்டமின் மற்றும் மினரல்கள் கொண்டவை. மேலும் அவைகளில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிகம் இருக்கின்றன. வயிற்றிற்கு ஊட்டம் அளிக்கிறது. பலப்படுத்துகிறது. அவைகளின் பாரத்தை குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையானவை :

ஆளி - 2 டீ ஸ்பூன்
பூண்டு - 2-3 பல்

இரண்டையும் முதலில் பொடி செய்து, அரை டம்ளர் நீரை விட்டு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை வடிகட்டி அதனுடன் அரை கப் நீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தினம் ஒரு முறை குடித்தால், நச்சுக்கள் வெளியேறி விடும். வீட்டு சாப்பாடு சாப்பிடுபவர்கள் வாரம் ஒரு முறை குடித்தால் போது. ஆரோக்கியமான உடலை பெறலாம்.

English summary

How to Detox your Stomach with this juice.

Home Remedy to flush out toxins from your stomach. read this to know more,
Story first published: Saturday, August 20, 2016, 16:01 [IST]
Desktop Bottom Promotion