ஆண்மை மற்றும் கருவளம் அதிகரிக்க அத்திப்பழம் எப்படி சாப்பிடலாம்?

Posted By:
Subscribe to Boldsky

உடல் வலிமை அதிகரிக்க என்று மட்டுமில்லாமல், தலை முதல் கால் வரை உடல் முழுக்க ஆரோக்கியத்திற்கு துணை நிற்கும் சிறந்த உணவுகளில் அத்திப்பழமும் ஒன்று. பார்க்கவும், ருசிக்கவும் அத்திப்பழம் சற்று வினோதமாக இருப்பினும், உடல் வலிமைக்கு அருமையானது.

இதையும் படிங்க: ஆண்களின் பாலுணர்ச்சி அதிகரிக்க ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைக்கும் உணவுகள்!

பெண்களின் மாதவிடாய் கோளாறுகளில் இருந்து, ஆண்களின் முடி உதிர்வு கோளாறுகள் வரை அனைத்திற்கும் தீர்வளிக்கும் சிறந்து குணம் கொண்டுள்ளது அத்திப்பழம். மேலும், அத்திப்பழத்தில் வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இனி, தினமும் அத்திப்பழம் உண்டு வந்தால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மை #1

நன்மை #1

அத்திப்பழத்தை 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும், ஆண்மை குறைபாடு நீங்கும்.

நன்மை #2

நன்மை #2

கருத்தரித்த பெண்களின் உடல் எடை குறைய அத்திப்பழம் மற்றும் பேரீச்சம்பழம், உலர் திராட்சை உண்டு வரலாம்.

நன்மை #3

நன்மை #3

உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்க அத்திப்பழத்துடன், பால் சேர்த்து குடித்து வாருங்கள். இதனால் இரத்தசோகையில் இருந்து குணமடையலாம்.

நன்மை #4

நன்மை #4

அத்திப்பழத்துடன் கீரை, பேரீச்சம்பழம், காய்ந்த திராட்சை போன்றவற்றை உணவில் சேர்த்து உண்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.

நன்மை #5

நன்மை #5

தினமும் ஐந்து அத்திப்பழம் உண்டு வந்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனையில் இருந்து தீர்வுக் காண முடியும்.

நன்மை #6

நன்மை #6

தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை அதிகரிக்கும்.

நன்மை #7

நன்மை #7

மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள், வலி அதிகமாக உணரும் பெண்கள் அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து உண்டு வந்தால் மாதவிடாய் வயிறு வலி குறையும்.

நன்மை #8

நன்மை #8

இதயத்தின் வலு அதிகரிக்க வேண்டுமா? அத்திப்பழத்தை உலர்த்தி பொடி செய்து , காலை, மாலை இரண்டு வேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை அடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Fig, Especially For Fertility and Pregnancy

இதயத்தின் வலு அதிகரிக்க வேண்டுமா? அத்திப்பழத்தை உலர்த்தி பொடி செய்து , காலை, மாலை இரண்டு வேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை அடையும்.
Story first published: Wednesday, July 27, 2016, 12:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter