For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சளி, காய்ச்சல் விரைவாக குணமடைய உதவும் சில ருசியான உணவுகள்!!

|

மழை என்றாலே மக்கள் முதலில் நடுங்குவது குளிரை நினைத்து அல்ல, மழையால் ஏற்படும் சளி, காய்ச்சலை நினைத்து தான். காய்ச்சலை கூட சமாளித்துவிடலாம். ஆனால், இந்த சளி சனியை போல பிடித்தால் போகும் வரை மனிதனை வாட்டி எடுத்துவிடும். சரியாக தூங்க முடியாது, சுவாசிக்க முடியாது.

எந்த உணவையும் ருசிக்க முடியாமல் செய்துவிடும் இந்த சளியும், காய்ச்சலும். மாத்திரை, மருந்து, ஊசி இன்றி மருத்துவரை காணமலேயே இந்த சளி, காய்ச்சல் தொல்லையில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. அது தான் நமது முன்னோர்கள் காட்டி சென்ற உணவே மருந்து என்னும் வழி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு

பூண்டு

பூண்டை உணவில் இரசமாக சேர்த்து சாப்பிடுவதால் சளி, கபம், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விரைவாக குணமைடைய முடியும். பூண்டில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு வலு சேர்க்கிறது.

மஞ்சள்

மஞ்சள்

காலை மாலை என இரு வேளையிலும் பாலில் கொஞ்சம் மஞ்சள்தூள் மற்றும் மிளகுப் பொடி சேர்த்து குடித்து வந்தால், சளி, காய்ச்சல் இரண்டே நாட்களில் காணாமல் போய்விடும்.

கோழி சூப்

கோழி சூப்

கோழி அல்லது ஆட்டுக்கால் சூப் வைத்து குடிப்பது சளி மற்றும் காய்ச்சலுக்கான சூப்பர் மருந்து. நெஞ்சு சளி இருப்பவர்கள் தவறாமல் குடிக்க வேண்டிய சூப் ஆட்டுக்கால் சூப்.

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் மிகுதியான வைட்டமின் ஏ சத்து உடலுக்கு வலு சேர்த்து, சளி, காய்ச்சல் தொல்லையில் இருந்து விரைவாக விடுபட உதவுகிறது.

வைட்டமின் டி உணவுகள்

வைட்டமின் டி உணவுகள்

வைட்டமின் டி சுவாச பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மீன், பால் போன்ற உணவுகளில் வைட்டமின் டி சத்து மிகுதியாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tasty Foods To Cure Cold And Flu Fast

These foods will cure cold and flu fast, read here in tamil.
Story first published: Thursday, December 3, 2015, 15:13 [IST]
Desktop Bottom Promotion