For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் சாப்பிடக் கூடாத உணவுகள்!!!

By Ashok CR
|

நம் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை பல நேரங்களில் நாம் குறை கூறி கொண்டிருப்போம். ஆனால் உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருக்கும் வேறு சில உணவுகளை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. ஜங்க் வகை உணவுகளை முழுவதுமாக தவிர்த்து புரதச்சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, நாம் நம் அன்றாட உணவு பழக்கங்களில் சில தவறுகளை செய்யத் தான் செய்வோம்.

அதனால் சரியான உணவு பழக்கங்களை கடைப்பிடித்து, உடல் எடையை சரியாக பராமரிக்க கீழ்கூறிய உணவு பட்டியலை தவிர்க்க வேண்டும்.

Foods You Shouldn't Eat Daily

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் மீது மக்களுக்கு உண்டான காதல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டது. உணவின் ருசியை கூட்டவோ அல்லது அளவை கூட்டவோ நாம் உருளைக்கிழங்கை பயன்படுத்துகிறோம். அதனால் அதனை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள தனியாக எந்த ஒரு காரணமும் தேவையில்லை. நாளடைவில் அது உங்கள் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். அதனால் அடுத்த முறை உருளைக்கிழங்கிற்கு பதில் நற்பதமான காய்கறிகளை பயன்படுத்துங்கள்.

பால்

பல பிரச்சனைகளுக்கும் பால் தீர்வாக இருப்பது உண்மை தான். ஆனால் அதனை அன்றாடம் பருகி வந்தால் அது உங்கள் வளர்ச்சியில் தடையாகவும் இருக்கும். தூங்கும் முன்பு, காலை உணவின் போது அல்லது மாலை வேளைகளில் நொறுக்குத் தீனி உண்ணும் போது பால் குடித்தால் கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். பால் குடிக்கவில்லை என்றால் உங்கள் சோம்பல் நீங்கி, உடல் எடை குறைந்து, சருமம் பொலிவடைகிறதா என்பதை கவனியுங்கள். இல்லையென்றால் பிரச்சனை பாலில் இல்லை, வேறு ஏதோ ஒரு உணவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உணவிற்கு பின்பு டெசெர்ட்

உணவருந்திய பிறகு இனிப்பு பண்டங்கள் ஏதாவது உண்ணுவது நம்மில் பல பேருக்கு உள்ள பழக்கமாகும். இது தேவையற்றது என்பதும் நமக்கும் தெரியும். நீங்கள் உண்ணும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் உங்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாய் போகும். தினமும் டெசெர்ட் வகை உணவுகள் உண்ணுவதை தவிர்த்தால் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம். வார இறுதி நாட்கள் அல்லது ஏதாவது விசேஷ நாட்களில் மட்டும் அவைகள் உண்ணுங்கள்.

மாலையில் உண்ண வேண்டிய நொறுக்குத் தீனிகள்

மாலை வேளைகளில் உண்ணும் நொறுக்குத் தீனிகளில் தான் அதிக கவனம் தேவை. மாலை வேளையில் பசி எடுக்கும் போது சாண்ட்விச் அல்லது சமோசா போன்ற நொறுக்குத் தீனிகளை உண்ண நம்மை தூண்டும். பசி நம்மை வாட்டும் போது நாம் எதனை உண்ணுகிறோம் என்பதை பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. இது அன்றாடம் நடக்கக் கூடியது என்றால் அது நம் உடல் நலத்தை நாம் நினைப்பதை விட வெகுவாக பாதித்து விடும். அதனால் நட்ஸ், வெண்ணெய் அல்லது தயிர் போன்றவற்றை உங்கள் மாலை வேளை நொறுக்குத் தீனியாக பயன்படுத்துங்கள்.

English summary

Foods You Shouldn't Eat Daily

While most of the time we conveniently hold the extra morsels we eat as culprit for our weight gain, we often forget that there are a few foods which we should not dig in too often. Even if you are downing a glass of protein shake and keeping junk out of your sight, there may be the small mistakes you maybe making every day in your diet. Hence here’s a list of foods that you must avoid for proper weight management.
Story first published: Wednesday, January 1, 2014, 15:29 [IST]
Desktop Bottom Promotion