For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செரிமானத்தை மேம்படுத்தும் சிறப்பான சில சூப்பர் உணவுகள்!!!

By Ashok CR
|

வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் உலகத்தோடு நாமும் இன்று வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். கூடவே ஒழுங்கற்ற வாழ்க்கை முறையையும் உணவு பழக்கத்தையும் பின்பற்ற தொடங்கி விட்டோம். அதனால் ஏற்படும் பிரச்சனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. சின்ன வயதிலேயே இன்று இளைஞர்கள் பல உடல்நல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. அதில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது செரிமான பிரச்சனை.

இதுப்போன்று வேறு: நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கான 10 சூப்பர் உணவுகள்!!!

ஒழுங்கற்ற செரிமானம் என்ற பொதுவான பிரச்சனையை வாழ்க்கையில் ஒரு முறையாவது அனைவரும் கடந்து வந்திருப்போம். மோசமான உணவருந்தும் பழக்கங்கள், வைரல் தொற்றுக்கள், சில வகையான மருந்து உட்கொள்ளல் மற்றும் இதர சில காரணங்களால் தான் ஒழுங்கற்ற செரிமானம் ஏற்படுகிறது.

இருப்பினும் இதனை நினைத்து நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை. செரிமான தரத்தை மேம்படுத்துவதற்கு உபயோகமாக இருக்கும் உணவு பட்டியலைப் பற்றி பார்க்கலாமா...?

நீரிழிவை வெற்றி கொள்ள சில அற்புதமான வழிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி

இஞ்சி

மிகவும் பழமை வாய்ந்த மசாலாவான இஞ்சி என்பது செரிமானத்தை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த உணவாகும். இதில் அழற்சி எதிர்ப்பி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பி குணங்கள் அடங்கியுள்ளது. இதனை வைத்து செரிமாமின்மை, குமட்டல், வாய்வு, வீங்கல் மற்றும் செரிமான பிடிப்பு போன்ற செரிமான பிரச்சனைகளை குறைக்கலாம்.

நற்பதமான இஞ்சி துண்டுகள் சிலவற்றை கொதிக்கும் நீரில் போட்டு, அதனை வடிகட்டி, அதில் தேநீர் செய்து தினமும் குடியுங்கள். செரிமானத்திற்கு தேவையான பித்தம், எச்சில் மற்றும் இரைப்பை நீர் உற்பத்தியாவதற்கு இந்த தேநீர் உதவும். மாற்றுவழியாக, ஒரு டீஸ்பூன் இஞ்சி சாற்றை அரை டீஸ்பூன் தேனுடன் கலந்து, உணவருந்துவதற்கு முன்பாக குடியுங்கள்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

உடல் எடை குறைப்புக்கு புகழ் பெற்ற உணவாக விளங்குகிறது ஓட்ஸ். அதில் வளமையான நார்ச்சத்து அடங்கியுள்ளதால் உடல் எடை குறைப்புக்கு மட்டுமல்லாமல் செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகிறது. நார்ச்சத்து, மலச்சிக்கலை தடுத்து சீரான மலங்கழித்தலை மேம்படுத்தும். ஓட்ஸ் கஞ்சியை போதுமான அளவில் உட்கொண்டு வந்தால், நெஞ்சு எரிச்சல் போன்ற கேஸ்ட்ரோ-ஈசோஃபேகல் ரிஃப்லக்ஸ் நோய்களின் அறிகுறிகளை குறைக்கும். உடல் அமைப்பின் ஒழுங்கான செயல்பாட்டிற்கு தேவையான அரியக் கனிமங்களான ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலீனியம் மற்றும் தியாமின் போன்றவற்றையும் ஓட்ஸ் அளிக்கிறது. உங்கள் உணவில் ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் பிஸ்கட், ஓட்ஸ் மாவு, மற்றும் ஓட்சை வைத்து தயார் செய்யப்பட உணவுகளை சேர்த்துக் கொண்டால் செரிமான அமைப்பு சீராக செயல்படும்.

புதினா

புதினா

புதினாவை மெல்லும் போது குளிர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்துவதால் உங்கள் சுவாசத்தை மேம்படுத்த அது உதவும். இதில் அழற்சி எதிர்ப்பி மற்றும் ஆன்டிசெப்டிக் குணங்கள் உள்ளதால், உங்கள் செரிமானம் சீராக நடக்க உதவும். உங்கள் சாலட் மற்றும் இதர உணவுகளில் புதினா இலைகளை தூவி விட்டால், உங்கள் வயிற்று பிரச்சனை நீங்கும். ஒரு கிளாஸ் நீரில் புதினா எண்ணெய்யை சிறிதளவு கலந்து சினமும் குடித்து வந்தால்,உங்கள் உடலில் உள்ள நச்சுகள் அனனித்தும் வெளியேறும். இது ஒரு க்ளென்சர் மற்றும் தூய்மையாக்கியாகவும் வேலை செய்கிறது.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட் சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல், மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் உணவு சகிப்பின்மை போன்ற சில செரிமான பிரச்சனைகள் நீங்கும். பீட்ரூட்டில் உள்ள வளமான நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், ஆரோக்கியமான செரிமான அமைப்பை மேம்படுத்த உறுதி செய்யும். அதிலுள்ள பீடைன் பொருட்கள் வயிற்றில் உண்டாகும் அசிடிட்டியை குறைக்கும். இந்த சிவப்பு நிற காய்கறியை சாறாக குடித்து அல்லது அப்படியே உட்கொண்டு பல உடல்நல பயன்களை பெற்று மகிழ்ந்திடுங்கள்.

ஆப்பிள்

ஆப்பிள்

நறுக் நறுக்கென இருக்கும் சுவைமிக்க ஆப்பிள் பழங்கள் சுவையில் மட்டும் வளமையாக இருப்பதில்லை; அது மலங்கழித்தல் பிரச்சனைகளை தீர்க்கவும் உதவும். கரையத்தக்க நாற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் என இரண்டுமே அடங்கியுள்ளதால் இது விசேஷமான ஒரு பழமாகும். ஆப்பிள் தோளில் 'செலுலோஸ்' எனும் கரையாத நார்ச்சத்து வளமையாக கிடைக்கும். அதனால் ஆப்பிள் பழத்தை உண்ணும் போது அதனை தோலோடு உண்ணுங்கள். செரிமான அமைப்புக்குள் வேகமாக நகர்த்த உதவி புரியும் செலுலோஸ். அதனால் மலச்சிக்கல் நீங்கும். அதிலுள்ள கரையத்தக்க நார்ச்சத்தாக விளங்குகிறது பெக்டின். இது நீரை ஈர்த்து ஜெல் உருவாக உதவும். அதனால் முழுமையை கொடுக்கும். ஆப்பிள் பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் சி, கனிமங்களான பாஸ்பரஸ் நாற்றும் பொட்டசியம் அடங்கியுள்ளது. மலச்சிக்கல் பிரச்சனைகளை குறைக்க இவையாவும் அவசியமாக தேவைப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Foods To Improve Your Digestion

Improper digestion is a common problem we have been for atleast once in our lives. Imperfect digestion occurs due to poor eating habits, viral infections, certain medications and some other reasons. Here we listed some the best foods to improve your digestion.
Desktop Bottom Promotion