For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காயப்படுத்தினால் பலன் தரும் பெருங்காயம்

By Chakra
|

Asafoetida
தமிழ்நாட்டின் சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் பெருங்காயம். இது பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது."ஃபெருலா ஃபொட்டிடா" அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து பெருங்காயம் கிடைக்கிறது..

இந்த செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இலைகள் மூலத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதாவது, ஒரே இடத்திலிருந்து இலைகள் ஆரம்பிக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக வாசனையுள்ள பால் காணப்படுகிறது.

இந்த தாவரமானது இந்தியாவின் வடமேற்குப்பகுதியில் அதிகம் வளர்க்கப்படுகிறது. நான்கு ஆண்டுகள் வளர்ந்த தாவரத்தின் வேர்பகுதியில் இருந்து பெறப்படும் மணம் கொண்ட பிசின் போன்ற பொருளே பெருங்காயம் ஆகும்.

உயர்வகை பிசின்

தண்டு முதல் வேர்வரை வெட்டி காயப்படுத்தப்படும்போது இதிலிருந்து பிசின் போன்ற பொருள் வெளியேறி கெட்டியாகிறது. சிவப்பு வண்ணத்தில் உள்ள பிசின் சுரண்டி எடுக்கப்பட்டு தோல்பைகளில் சேகரிக்கப்படுகிறது. இதுவே பெருங்காயமாகும்.

ஜூன் மாதங்களில் பிசின் எடுக்கப்படும். வணிக ரீதியான பெருங்காயம் ஆப்கானிஸ்தானில் இருந்துதான் பெறப்படுகிறது. வேரின் மையத்தில் உள்ள இலை மொட்டில் இருந்து உயர்ந்த வகை பெருங்காயம் பெறப்படுகிறது. இது 'கந்தகாரி" பெருங்காயம் எனப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

பெருங்காயத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், ரெசின் மற்றும் பிசின் காணப்படுகிறது. இதில் டை- சல்பைட்கள் மற்றும் பெரூலிக் அமிலம், பிட்டிடன் ஆகியவற்றுடன் கௌமரின்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இவை பெருங்காயத்தின் மருத்துவ பயன்களுக்கு அடிப்படையாகின்றன.

ஃபெருலா என்றழைக்கப்படும் தாவரத்தின் இலைகள், தண்டு, வேர் மற்றும் பிசின் - ரெசின் ஆகியன மருத்துவ பயன் உடையவை.

பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.

கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதேசமயத்தில் அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும். இது சுவைக்காக மட்டுமின்றி, உணவு செரிக்கவும் உதவுகிறது. வயிற்றில் இருக்கும் நாடாப் புழுக்களையும் இது அழிக்கிறது.

நரம்பு கோளாறு நீங்கும்

வெங்காயம், பூண்டுக்கு உள்ள அதே மருத்துவக் குணங்கள் பெருங்காயத்திற்கும் உள்ளது. நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.

பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும். அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும். ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் உடனே தீரும்.

பெருங்காயம் வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது.

அஜீரணம் நீங்கும்

இலைகள் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும், வியர்வை மற்றும் ஜீரண தூண்டுவியாக பயன்படுகிறது. தண்டுப்பகுதி மூளை மற்றும் கல்லீரலை வலுப்படுத்துகின்றன.மத்திய கிழக்கு மற்றும் இந்தியாவில் பெருங்காயம் சாதாரண அஜீரணம், வாயு, உப்புசம், மலச்சிக்கல், ஆகியவற்றினை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல் - சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை இருமல் மூலம் வெளியேற்றுகிறது.

மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் ஆகியவற்றினை போக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது.

English summary

medicinal uses of Asafoetida | வாசனை மிக்க பெருங்காயம்

Asafoetida, is a gum, which is obtained from a perennial plant botanically, called as Ferulla foetida. The common name for this gum is Hing. This is widely used spice, which is known for its strong pungent smell. It is yellowish brown in color. It is used as a flavoring for many curries and spicy mixtures and it is also used in making pickles. Apart from adding a unique flavour to the dishes it also has some medicinal properties.
Story first published: Tuesday, May 17, 2011, 11:33 [IST]
Desktop Bottom Promotion