Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்க முகத்தில் இந்த பிரச்சனைகளை சந்திக்குறீங்களா? அப்ப உங்க கல்லீரல் ஆபத்துல இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
Fatty Liver Symptoms In Tamil: நமது உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த கல்லீரல் உடலில் பல முக்கியமான வேலையை செய்வதால், இதன் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் காரணமாக கல்லீரலில் நிறைய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
கல்லீரலில் பிரச்சனை இருந்தால், அது பல்வேறு அறிகுறிகளை வெளிக்காட்டும். குறிப்பாக முகத்தைக் கொண்டே கல்லீரலில் பிரச்சனை உள்ளதா என்பதை அறியலாம் தெரியுமா? என்ன நம்ப முடியவில்லையா?

ஆம், நமது முகத்தில் தோன்றும் சில பிரச்சனைகள் கல்லீரல் செயல்பாட்டில் உள்ள பிரச்சனையை உணர்த்தும். இப்போது ஒருவரது கல்லீரலில் பிரச்சனை இருப்பின், அது முகத்தில் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும் என்பதைக் காண்போம்.
கருவளையம்
நல்ல தூக்கத்தை மேற்கொண்டும் உங்கள் கண்களைச் சுற்றி கருவளையங்கள் வருகிறதா? அப்படியானால் உங்கள் கல்லீரலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். ஏனெனில் கல்லீரல் உடலை நச்சுத்தன்மையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த செயல்முறை குறையம் போது, உடலில் நச்சுக்கன் தேங்க ஆரம்பித்து, அதன் விளைவாக உடல் சோர்வு மற்றும் மோசமான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுத்து, கண்களைச் சுற்றி கருவளையங்களை உருவாக்கும்.
கன்னங்களில் தடிப்புகள்
உங்கள் கன்னங்களில் மட்டும் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் ஏற்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இப்படியான தடிப்புகள் அசாதாரண கல்லீரல் செயல்பாட்டினால் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்ததன் காரணமாக இருக்கலாம்.
வறண்ட தோல்
திடீரென்று உங்கள் முகத்தில் உள்ள சருமம் அதிகம் வறண்டு, திட்டுகளாக வந்தால், அதை சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். இது சருமத்தின் கீழ் படிந்துள்ள பித்த உப்புகள் அல்லது கல்லீரல் செயலிழப்பு காரணமாக அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு சுரக்காததால் ஏற்படலாம்.
சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது
சருமம் அல்லது கண்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது கல்லீரல் பிரச்சனையின் மிகவும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாகும். பொதுவாக இது கல்லீரல் செயல்படும் போது வெளியேறும் பிலிரூபின் என்னும் கழிவுப்பொருள் தேக்கத்தினால் ஏற்படுகிறது. மஞ்சள் காமாலை பெரும்பாலும் கொழுப்பு கல்லீரல் அல்லது பிற கல்லீரல் நோய்கள் போன்ற நிலைமைகளைக் குறிக்கிறது.
முகத்தில் வீக்கம்
முகத்தில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறதா? அப்படியானால் கல்லீரலில் பிரச்சனை தீவிரமாக உள்ளது என்று அர்த்தம். ஏனெனில் எப்போது கல்லீரல் திரவங்களை சமநிலைப்படுத்த முடியாமல் போராடுகிறதோ, அப்போது உடலில் திரவம் தேங்கி, வீக்கத்தை உண்டாக்கும். அதுவும் இப்படியான வீக்கம் முகத்தில் அதிகம் தெரியும்.
முகப்பரு
போதுமான சரும பராமரிப்புக்களை மேற்கொண்டும், முகத்தில் பருக்கள் அதிகமாக வருகிறதா? அதுவும் இப்படியான பருக்கள் தாடைப் பகுதிகள் மற்றும் கன்னங்களில் அதிகம் வருகிறதா? அப்படியானால் கல்லீரலில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். எனவே முகத்தில் பருக்கள் அதிகமாக வருமாயின், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
வெளிரிய சருமம்
முகச்சருமம் வெளுத்து போனது போல் உள்ளதா? அப்படியானால் அது கொழுப்பு கல்லீரலின் அறிகுறியாக இருக்கலாம். கல்லீரலானது சரியாக திறம்பட செயல்படாத போது, கல்லீரலின் முக்கியமான வேலையான நச்சுநீக்கம் மற்றும் மெட்டபாலிசம் போன்றவை பாதிக்கப்பட்டு, சருமம் அதன் இயற்கை பொலிவை இழக்கும். அதன் விளைவாக முகம் வெளுத்துப் போய் பொலிவிழந்து இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications