Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
அதிகமாக உடற்பயிற்சி செய்தால் கல்லீரல் பாதிக்கப்படுமாம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Exercise And Liver Enzymes: உடற்பயிற்சி செய்வது நம் உடலுக்கு நன்மை என்றாலும்கூட அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது நமக்கு பிரச்சினைகளை உண்டு பண்ண வாய்ப்பு உள்ளது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப உடற்பயிற்சியை அதிகளவு செய்வது உங்க கல்லீரல் என்சைம்களை பாதிக்க வாய்ப்புள்ளது. அதீத உடற்பயிற்சி உங்கள் கல்லீரல் என்சைம்களை தூண்ட வாய்ப்பு உள்ளது.
அதிகமாக உடற்பயிற்சி செய்தவர்களை ஆராய்ச்சி செய்த போது அவர்களுக்கு உயர்ந்த அளவில் அலனைன் அமினோ டிரான்ஸ்ஃபரேஸ் (ALT) இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ALT கல்லீரல், தசை மற்றும் சிறுநீரக செல்களில் காணப்படுகிறது. சரி வாங்க உடற்பயிற்சி எப்படி கல்லீரல் என்சைம்களை பாதிக்கிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

கல்லீரல் என்சைம்களில் உடற்பயிற்சியின் பங்கு என்ன?
வழக்கமான உடற்பயிற்சி என்பது உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. இது கொழுப்பு அல்லாத கல்லீரல் நோய் அபாயத்தை குறைக்கிறது. ஆனால் அதுவே பளு தூக்குதல் மற்றும் அதீத உடற்பயிற்சியில் ஈடுபடும் போது அவர்களின் கல்லீரல் நொதிகள் அதிகளவில் அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது இந்த கல்லீரல் நொதிகள் அதிகளவில் அதிகரிக்கிறது. இந்த கல்லீரல் நொதிகள் பழைய நிலைக்கு வர குறைந்தது ஏழு முதல் பத்து நாட்கள் வரை ஆகும். இந்த கல்லீரல் நொதிகள் அதிகரிப்பால் உங்களுக்கு தசை சேதம் ஏற்படலாம்.
கல்லீரல் செயல்பாடு
நம் கல்லீரலானது அடிவயிற்றின் வலது மேல் பகுதியில் அமைந்துள்ளது. இது உடலின் பல முக்கிய செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. இரத்தம் உறைதல், சில ஹார்மோன்கள் உள்ளிட்ட புரதங்களை உற்பத்தி செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களின் சேமிப்பு ஆகியவற்றிலும் கல்லீரல் பங்கேற்கிறது. நம்முடைய கல்லீரலில் நாம் உண்ணும் மருந்துகள் மற்றும் நச்சுக்களை உடைக்கும் பல்வேறு நொதி அமைப்புகள் உள்ளன. கல்லீரல் தான் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
அதீத உடற்பயிற்சியால் தசை சேதம்
கடினமான உடற்பயிற்சிகள் உங்களுக்கு தசை சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கடினமான உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்களை ஆராய்ச்சி செய்த போது அவர்களிடம் கிரியேட்டின் கைனேஸ் மற்றும் மயோகுளோபின் போன்ற தசை குறிப்பிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் AST மற்றும் ALT நொதிகளில் குறுகிய கால உயர்வு இருப்பது தெரிய வந்தது.
உடற்பயிற்சி செய்த 3-4 நாட்களில் இந்த நொதிகள் உச்சத்தை அடைகின்றன. இந்த உயர்வு தொடர்ந்து அதிகரித்தால் கல்லீரலில் காயம் அல்லது கல்லீரல் அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது. ALT மற்றும் AST அளவு அதிகரிப்பால் பாலிமயோசிடிஸ், ஸ்டேடின் தூண்டப்பட்ட தசை காயங்கள், கடுமையான ராப்டோமயோலிசிஸ் போன்ற தசை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
2008 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் படி, பளு தூக்குதல் போன்ற உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தது 7 நாட்களுக்கு ALT மற்றும் AST அதிகரித்தன. இதனால் தசை சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது ஆராய்ச்சி. எனவே இந்த மாதிரியான கடுமையான உடற்பயிற்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கல்லீரல் நொதிகளின் அளவு:
AST: 36 U/Lக்கு கீழ் இருக்க வேண்டும்
ALP: 20 மற்றும் 140 U/L இடையே இருக்க வேண்டும்
ALT: பெண்களுக்கு 25 U/Lக்கு கீழும் அல்லது ஆண்களுக்கு 33 U/Lக்கு கீழும் இருக்க வேண்டும்.
அல்புமின்: 35 மற்றும் 50 U/L இடையே இருக்க வேண்டும்
பிலிரூபின்: 0.1 மற்றும் 1.2 mg/dl இடையே இருக்க வேண்டும்.
கல்லீரல் என்சைம் அளவை குறைக்க வழிகள்:
பொதுவாக கல்லீரல் நொதிகள் ஒரு மாதத்திற்குள் அதுவாகவே பழைய நிலைக்கு வந்து விடும். ஒரு வேளை நிலைமை மோசமாக இருந்தால் நீங்கள் பரிசோதனை செய்து பார்க்கலாம். இரத்த பரிசோதனை மற்றும் இமேஜிங் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். கீழ்க்கண்ட வாழ்க்கை முறை மாற்றங்களை செய்து வரலாம்.
* மது அருந்துதலை குறைத்துக் கொள்ளுங்கள்.
* நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் மற்றும் மாத்திரைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* மிதமான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவது நல்லது.
* உங்கள் கல்லீரலுக்கு ஏற்ற உணவுகளை எடுத்துக் கொண்டு வாருங்கள்.
* உங்கள் எடையை பராமரிப்பது மிகவும் அவசியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications