Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Exclusive: மூச்சிரைப்பு என்பது என்ன? இது ஒருவரை எப்படி பாதிக்கிறது? - விளக்குகிறார் நுரையீரல் நிபுணர்!
Wheezing: இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சுவாச பிரச்சனை தான் வீசிங் என்னும் மூச்சிரைப்பு. இந்த வீசிங் பிரச்சனையை கொண்டவர்களுக்கு தூசி சிறிது மூக்கில் ஏறினாலும், அது மூச்சிரைப்பை தூண்டிவிடும். எனவே இந்த பிரச்சனையைக் கொண்டவர்கள் சுத்தமான சூழலிலும், மிகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட மூச்சிரைப்பு என்பது என்ன, இது எப்படி ஒருவரை பாதிக்கிறது மற்றும் இதற்கான காரணங்கள் என்னவென்பது குறித்து அடையாரில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவனையின் நுரையீரல் மருத்துவத்தின் முதுநிலை ஆலோசகரான டாக்டர். சி. அம்மையப்பன் பழனிசுவாமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார். விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மூச்சிரைப்பு என்பது என்ன?
மூச்சிரைப்பு (Wheezing) என்பது சுவாசிக்கும் போது கேட்கக்கூடிய விசிலடிப்பது போன்ற ஒரு சப்தத்தை குறிக்கிறது. இதனை ஒரு ஸ்டெதஸ்கோப் மூலம் கேட்க முடியும். தீவிர நிலையில் இது இருக்குமானால் ஸ்டெதஸ்கோப் உதவி இல்லாமலேயே இந்த சத்தத்தை கேட்க இயலும். சுவாசப்பாதையை பாதிக்கிற சில நோய்களின் காரணமாக அவைகள் சுருங்கி குறுகலாகும் போது மூச்சிரைப்பு ஏற்படுகிறது; அல்லது அந்நிய பொருளானது ஒரு குறிப்பிட்ட சுவாசப் பாதையில் அடைப்பை ஏற்படுத்தியிருந்தாலும் இது உருவாகும்.
மூச்சிரைப்புக்கான காரணங்கள்
மூச்சிரைப்பிற்கு மிக பொதுவான காரணமாக இருப்பது ஈளை நோய் எனப்படும் ஆஸ்துமா. மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுக்குழாய் விரிவு, மூச்சுநுண்குழாய் அழற்சி, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD), காற்றுப்பாதையில் உள்ள அந்நிய பொருள் போன்றவை மூச்சிரைப்பிற்கான பிற காரணங்களாக இருக்கலாம்.
ஆஸ்துமா நிலையில் மூச்சிரைப்பு மற்றும் நாள்பட்ட நுரையீரல் அடைப்புநோய் ஆகியவற்றில் சுவாசிப்பதில் சிரமம் அல்லது மார்பு இறுக்கம் மற்றும் இருமல் ஆகியவை சேர்ந்திருக்கும். மூச்சிரைப்பிற்கு மிகப்பொதுவான காரணமாக ஆஸ்துமா இருப்பதால், தனக்கு மூச்சிரைப்பு பிரச்சனை இருப்பதாக ஒரு நபர் கூறினால் அவருக்கு ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது என்று கருதலாம்.
இலேசான மூச்சிரைப்பு மோசமாவதற்கு முன்பு அதற்கு எப்படி சிகிச்சையளிப்பது?
ஆஸ்துமா/மூச்சிரைப்பு என்பது ஒரு நோய் பாதிப்பு நிலையாகும். இந்நோயின் தீவிரத்தன்மையும் மற்றும் ஆஸ்துமா தாக்குதல்களின் எண்ணிக்கையும்/காலஅளவும் நபருக்கு நபர் மாறுபடலாம். ஆஸ்துமா இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள பெரும்பாலான நோயாளிகள், இப்பாதிப்பிற்கான சுயஉதவி நடவடிக்கைகள் மற்றும் நிவாரணங்களை ஏற்கனவே அறிந்திருப்பார்கள் அல்லது நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும். ஆஸ்துமாவின் மிதமான தாக்குதல் அறிகுறிகள் தோன்றும்போதே கீழ்கண்ட நடவடிக்கைகளை நோயாளிகள் எடுக்க வேண்டும்.
• குறுகிய கால நிவாரண சிகிச்சை: வழக்கமாக சல்பூட்டமால் / லெவோசல்புடமால் இன்ஹேலரின் மூலம் இச்சிகிச்சை இருக்கும்.
• மாண்டெலுகாஸ்ட் மற்றும் ஹிஸ்டமைன் எதிர்ப்பு மருந்து ஆகியவற்றின் கலவையை உள்ளடக்கிய ஒரு மாத்திரை
• மருந்துகளின் வழியான சிகிச்சை தவிர, வலுவான வாசனை / தூசி / புகை / சமையலறையின் புகை மற்றும் ஆவிகள் /அல்லது நாற்றமடிக்கும் அறைகள் போன்ற இடங்களிலிருந்து நோயாளி தள்ளியிருக்க வேண்டும்.
• மூச்சிரைப்பு அறிகுறிகள் குறையவில்லையென்றால் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இன்ஹேலரை பயன்படுத்தலாம். அத்துடன் மருத்துவமனைக்குச் சென்று உதவியைக் கோரலாம்.
இன்ஹேலர்கள் இல்லாமல் மிதமான மூச்சிரைப்பை எப்படி குணப்படுத்துவது அல்லது கட்டுப்படுத்துவது?
உறிஞ்சப்படும் இன்ஹேலர் மருந்துகளில் பெரும்பாலானவை பொதுவாக நன்கு பலனளிக்கக்கூடியவை. உறிஞ்சப்படும் மருந்துகள் எதனையும் ஏற்றுக்கொள்ள/சகித்துக்கொள்ள இயலாத நோயாளிகளை காண்பது அரிதானது. அரிதாகவே (ஒரு அல்லது இரண்டு ஆண்டில் ஒரு இலேசான தாக்குதல்) மூச்சிரைப்பு ஏற்படும் ஒரு ஆஸ்துமா பாதிப்புள்ள நபர், ஆஸ்துமாவிலிருந்து நிவாரணமளிக்கும் மருந்துகள் கைவசமில்லாத ஒரு தொலைதூர பகுதியில்/கிராமத்தில் இருக்கும்போது மூச்சிரைப்பு அவருக்கு வருமானால் அவர் என்ன செய்யலாம்?
• ஆஸ்துமா தாக்குதல் எங்கு அவருக்கு ஏற்பட்டதோ அந்த வாசனை இருக்கிற/தூசியான/குளிர்சாதன வசதியுள்ள அறையிலிருந்து தள்ளி இருக்க வேண்டும்.
• மெதுவாக சுவாசிக்கவும். அதாவது நாசித்துவாரங்கள் வழியாக மெதுவாக காற்றை உள்ளிழுத்து, திறந்த உதடுகள் வழியாக மெதுவாக வெளியேற்றவும். இது சிறிதளவு நிவாரணத்தை வழங்கும்.
• ஈரமான உள்ளாடைகள் மற்றும் ஆடைகளை அகற்றிவிட்டு உலர்ந்த ஆடைகளை அணியவும்.
• காற்றுப்பாதை அடைப்பிற்கு மருந்தியல் ரீதியாக காப்ஃபைன் நிவாரணமளிக்கும் என்பதால், சூடான/மிதமான சூட்டில் காபியை அருந்தவும்.
• யூகலிப்டஸ் எண்ணெய் வாசனையை உள்ளிழுப்பது பயனளிக்கக்கூடும்.
• மேற்கண்ட வழிமுறைகள் எதுவும் பலனளிக்கவில்லையென்றால் அருகிலுள்ள மருத்துவமனை/கிளினிக்கிற்கு செல்லவும்.
நினைவில் கொள்ள வேண்டியவை
மூச்சிழுத்து உறிஞ்சும் இன்ஹேலர் மருந்துகள் ஒரு நோயாளிக்கு ஒத்துக்கொள்ள இயலாத அசாதாரண சூழ்நிலைகளில் சுவாசப்பாதை அழற்சியை கட்டுப்படுத்த வாய்வழியாக உட்கொள்ளும் மருந்துகளின் மூலம் சிகிச்சை அளிக்கலாம். இதற்கு பக்கவிளைவுகள் ஏற்படுகின்றனவா என்பதை ஒருவர் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
ஆஸ்துமா தாக்குதலை/மூச்சிரைப்பை தூண்டிவிடும் காரணிகளை அடையாளம் காண்பதும் மற்றும் அவைகளை தவிர்ப்பதும் ஆஸ்துமா மேலாண்மையில் மிக முக்கியமான அம்சமாகும். வெறுமனே மருந்துகளின் பரிந்துரைப்பு சீட்டை வழங்குவது மட்டும் நுரையீரல் மருத்துவ நிபுணருடனான கலந்தாலோசனையில் போதுமானதாக இருக்காது. நோயாளியின் குடியிருப்பு மற்றும் பணியிட சூழல்கள் மற்றும் அந்நபரின் பழக்கவழக்கங்கள் குறித்து விரிவான நேர்காணலை நடத்தி விவரங்களை அறிவது மிக முக்கியமானது.
ஆஸ்துமா என்பது சுவாசப்பாதையில் கடுமையான ஒவ்வாமை எதிர்வினைகளை உருவாக்குகிற ஒரு பாதிப்பாகவே காணப்படுகிறது. இதுவரை ஆஸ்துமா அறிகுறிகளை ஒருபோதும் அனுபவித்திராத ஒரு நபருக்கும், அவருக்கு பொருத்தமற்ற ஒரு பணியை/தொழிலை தேர்வு செய்வாரானால், ஆஸ்துமா உருவாகக்கூடும். அதைப்போலவே பல ஆண்டுகளாக அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் இருந்த ஆஸ்துமா, வேறு அலுவலகம் அல்லது வீட்டிற்கு இடம் மாறி செல்லும்போது, மீண்டும் தலைதூக்கக்கூடும் என்று மருத்துவர் கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











