Latest Updates
-
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்..
இந்த காய்கறிகளை வெயில் காலத்தில் சாப்பிடுவது ஆபத்தானதாம்... விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா...!
இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக கோடைகாலம் முன்கூட்டியே தொடங்கிவிட்டது. அதுவும் இந்த வருடம் கடந்த காலங்களை விட வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையங்கள் கணித்துள்ளது. குளிர்காலம் வந்தால் எப்படி குறிப்பிட்ட ஆரோக்கிய பிரச்சினைகள் வருகிறதோ, அதேபோல வெயில்காலம் வந்தால் சில ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பானதுதான்.
கோடைகாலம் தொடங்கும் போது நாம் ஆரோக்கியமாக இருக்க நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். காய்கறிகள் பொதுவாக ஆரோக்கிய உணவின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருந்தாலும் கோடைகாலத்தில் சில காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சில காய்கறிகள் உடல் உஷ்ணத்தை அதிகரித்து சில ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட காய்கறிகள் என்னென்ன என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா.

வேர் காய்கறிகள்
கேரட், பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற வேர் காய்கறிகள் நம் அன்றாட உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளாகும், அவை குறிப்பிடத்தக்க ஊட்டசத்தைக் கொண்டுள்ளன, ஆனால் கோடைகாலத்தில் அவற்றை அதிக அளவில் உட்கொள்ளும்போது அவை கனமாகவும் வெப்பத்தை உற்பத்தி செய்பவையாகவும் மாறும். மருத்துவரின் ஆலோசனையின் படி, உருளைக்கிழங்கு போன்ற வேர் காய்கறிகள் அதிக வெப்ப கடத்துத்திறனை வெளிப்படுத்துகின்றன, இதை அதிகமாக உட்கொள்ளும்போது உடலில் அதிக வெப்ப உற்பத்திக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இது உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
பூண்டு மற்றும் வெங்காயம்
இந்த இரண்டு பொருட்களும் இல்லாமல் சமைப்பது என்பது மிகவும் கடினமானது. ஒரு உணவின் சுவையை முழுமையாக்குவது இந்த காய்கறிகள்தான், ஆனால் அதேசமயம் இவை உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் குணமுடையவை. இவற்றை பயன்படுத்தாமல் சமைப்பது என்பது மிகவும் கடினம், ஆனால் கோடைகாலத்தில் அவற்றின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
பசலைக்கீரை
பொதுவாக கீரை வகைகள் ஆரோக்கியமான உணவுகளாகக் கருதப்படுகிறது ஆனால் அவற்றில் ஆக்சலேட்டுகளும் அதிகம் உள்ளது. கோடைகாலத்தில் இவற்றை அதிகமாக உட்கொள்வது உடலின் கால்சியம் உறிஞ்சும் திறனில் தலையிடக்கூடும் மற்றும் சிறுநீரக கல் உருவாவதற்கு வழிவகுக்கும். எனவே அவற்றை மிதமாக உட்கொள்வது நல்லது.
குடைமிளகாய்
குடைமிளகாய் பல உணவுகளில் கூடுதல் சுவைக்காக சேர்க்கப்படும் பிரதான காய்கறியாக இருக்கிறது, ஆனால் கோடைகாலத்தில் அவை ஜீரணிக்க கடினமான காய்கறியாக மாறலாம். கோடைகாலத்தில் அதனை மிதமாக உட்கொள்வது அல்லது முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ், காலிஃபிளவர் மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகள் அடிக்கடி வீட்டில் சமைக்கப்படுபவை மற்றும் சத்தானவை, ஆனால் அவை கோடைகாலத்தில் வீக்கம் மற்றும் செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தும் காய்கறிகளாக மாற வாய்ப்புள்ளது. கோடைகாலத்தில் அவற்றை மிதமாக சாப்பிடுவதுடன் நன்கு சமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
காளான்
காளான் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பொருளாக இருந்தாலும் அவை உடலில் வெப்பத்தை அதிகரிக்கக்கூடும். எனவே அதை கோடைகாலத்தில் மிதமாக உட்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இவை தவிர கோடைகாலத்தில் காரமான உணவுகளின் நுகர்வை குறைத்துக் கொள்வது நல்லது. எனவே பச்சை மிளகாய், வர மிளகாய் போன்றவற்றை குறைவாக பயன்படுத்த வேண்டும். அதற்குப் பதிலாக மிளகுத்தூளை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

