Latest Updates
-
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை
இரவில் ஜீன்ஸ் அணிந்து தூங்கக்கூடாதாம் ஏன் தெரியுமா?
ஜீன்ஸ் நவீன உலகில் மிகவும் பிரபலமான ஃபேஷன் ஆடைகளில் ஒன்றாகும். ஆண், பெண், சிறியவர் அல்லது பெரியவர் என அனைத்து வயதினருக்கும் இது வசதியானது. அதனால் அனைவருமே ஜீன்ஸ் அணிய விரும்புகின்றனர். குறிப்பாக பெண்கள் ஜீன்ஸ் ஆடைகளை இன்றைய காலத்தில் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிலர் இரவில் ஜீன்ஸிலேயே தூங்கிவிடுகினனர்.. இப்படி செய்வதால் பல பிரச்சனைகள் வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள் எச்சரிக்கின்ரனர்..
உங்களுக்கும் ஜீன்ஸ் அணிந்து தூங்கும் பழக்கம் இருந்தால் இன்றே அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.. ஆம இல்லையெனில், இந்த கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படியென்றால் அந்த பிரச்சனைகள் என்ன என்பதையும், இரவில் படுக்கும் முன் ஜீன்ஸ் அணிவதால் என்ன நடக்கும் என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

1. பூஞ்சை தொற்று
ஜீன்ஸ் டெனிம் துணியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த துணி நம் உடலில் இருந்து வியர்வையை உறிஞ்சாது. எனவே, ஜீன்ஸ் அணியும் போது, வியர்வை நமது பிறப்புறுப்பு, தொடை மற்றும் கால்களில் தங்குகிறது. இரவில் இதை அணிவதால் பூஞ்சை தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இது இனப்பெருக்க ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. ஜர்னல் ஆஃப் டெர்மட்டாலஜியில் வெளியிடப்பட்ட 2018 ஆய்வின்படி, இறுக்கமான ஜீன்ஸ் அணிவது பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும். மேலும் காற்று கொன்சம்க்கூட உங்க உடலில் படாது..
2. தோல் வெடிப்பு
இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து உறங்குவதால் உடலுக்கு சரியான காற்று சுழற்சி கிடைக்காது. இதனால் தோலில் அரிப்பு, சொறி, சிவத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே முடிந்தவரை குறைந்த நேரம் ஜீன்ஸ் அணிவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். அதிக வியர்வை உள்ளவர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
3. உடல் வெப்பநிலை
பொதுவாக தூங்கிய சில மணிநேரங்களில் படிப்படியாக குறைகிறது. இருப்பினும், ஜீன்ஸ் அணிந்து உறங்கும்போது, காற்று சுழற்சி குறைவாகவும், உடல் வெப்பநிலை அதிகமாகவும், தூக்கத்தை சீர்குலைக்கும் என்று ஆய்வு கூறுகிறது.
4. கடுமையான வலி
ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடையில் உறங்குவதால், கருப்பை, வயிறு மற்றும் பிறப்புறுப்புகளில் அழுத்தம் ஏற்பட்டு, அந்த பகுதிகளில் ரத்த ஓட்டம் தடைபடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இவை அனைத்தும் மாதவிடாயின் போது வலியை அதிகரிக்கும். 2018 இல் பெயின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தளர்வான ஆடைகளை அணிந்த பெண்களை விட இறுக்கமான ஆடைகளை அணிந்த பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
5. செரிமான பிரச்சனை: இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து உறங்குவதால் சிலருக்கு வயிற்று வலி, அஜீரணக் கோளாறுகள், வாயுத் தொல்லை போன்ற செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே முடிந்தவரை ஜீன்ஸ் அணிந்து உறங்குவதை தவிர்த்து விட்டு, தளர்வான காட்டன் உடையில் உறங்குவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications