Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
தீபாவளிக்கு பலகாரத்தோடு இந்த தீபாவளி லேகியத்தையும் செஞ்சு சாப்பிடுங்க.. அதன் செய்முறை இதோ!
Diwali 2023: தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலரது வீடுகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு பலகாரங்களும், எண்ணெயில் பொரித்த முறுக்கு, சீடை, அதிரசம் போன்றவைகளும் செய்ய தொடங்கியிருப்பார்கள்.
தீபாவளி என்றால் வெறும் பட்டாசு மட்டுமின்றி, இந்த மாதிரியான பலகாரங்களும் தான் நினைவிற்கு வரும். தீபாவளி பண்டிகை என்னமோ ஒரு நாள் தான். ஆனால் இந்த பலகாரங்களை ஒரு வாரம் வைத்து சாதம் கூட சாப்பிடாமல் வெறுமனே இவற்றை மட்டுமே நிறைய பேர் சாப்பிடுவதுண்டு.

நீங்களும் அப்படி தீபாவளி பலகாரங்களை அதிகம் விரும்பி உண்பவராயின், நிச்சயம் இந்த பலகாரங்களால் அஜீரண கோளாறுகளை சந்திக்க நிறைய வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட அஜீரண கோளாறுகளை அவ்வளவு எளிதில் சரிசெய்யமுடியாது. எனவே நம் முன்னோர்கள் தீபாவளி பலகாரங்களை செய்யும் போதே , அந்த தீபாவளி பலகாரங்களை எளிதில் ஜீரணிக்கும் வகையில் தீபாவளி லேகியத்தையும் செய்வார்கள் என்பது தெரியுமா?
இந்த தீபாவளி லேகியத்தை சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள், வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம் போன்ற பல அஜீரண கோளாறுகளில் இருந்து நொடியில் விடுபடலாம்.
முக்கியமாக இந்த லேகியத்தில் மருத்துவ குணம் நிறைந்த மசாலா பொருட்கள் அதிகம் நிறைந்திருப்பதால், இது அஜீரண கோளாறுகளை சரிசெய்வதோடு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது. இது தவிர சுவாசப் பாதையில் உள்ள சளியை வெளியேற்றி, சுவாச பாதையை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
இப்படிப்பட்ட தீபாவளி லேகியம் கடைகளிலேயே எளிதில் கிடைத்தாலும், இந்த லேகியத்தை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இப்படி வீட்டில செய்யும் லேகியத்தை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம். உங்களுக்கு தீபாவளி லேகியத்தை எப்படி எளிய முறையில் வீடடில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.
தீபாவளி லேகியம் செய்ய தேவையான பொருட்கள்:
* வெல்லம் - 1/2 கப்
* மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
* ஓமம் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* சித்தரத்தை - 1/4 இன்ச்
* சுக்கு பொடி - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் - 1
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வெல்லத்தை நீரில் போட்டு அடுப்பில் வைத்து கரைந்து, தேன் போன்று கம்பி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, அதை வடிகட்டிவிட வேண்டும்.
* பின் சுக்கு பொடியைத் தவிர, மிளகு, மல்லி, ஓமம், சீரகம், சித்தரத்தை, ஏலக்காய் ஆகியவற்றை நீரில் போட்டு 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஒருவேளை உங்களிடம் சுக்கு கொடி இல்லாவிட்டால் சுக்கு துண்டுகளையும் நீரில் போட்டு ஊறவைக்க வேண்டும்.
* அதன் பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, அத்துடன் சுக்கு பொடியையும் சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை வெல்லப்பாகுவுடன் சேர்த்து கிளறி, அடுப்பில் வைத்து, 2 நிமிடம் கிளறி, பின் தீயைக் குறைத்து, சூறைவான தீயில் வைத்து, அல்வா பதத்திற்கு வரும் லரை வேக வைக்க வேண்டும்.
* லேகியம் அல்வா பதத்திற்கு வந்ததும், அதில் நல்லெண்ணெய் சேர்த்து கிளறி 3 நிமிடம் கிளறி விட்டு, இறுதியாக நெய் சேர்த்து இறக்கினால், சுவையான தீபாவளி லேகியம் தயார்.
இந்த தீபாவளி லேகியத்தை தீபாவளி நாளில் தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதை சாப்பிடுவதன் மூலம் செரிமான செயல்பாடு சிறப்பாக இருக்கும் மற்றும் உடல் நன்கு ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications