For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிதீவிர உடற்பயிற்சிகளை விட உடல் எடையை குறைக்க உதவும் யோகாசனங்கள்!

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக பலா் பலவிதமான, மிதமான, தீவிர மற்றும் அதிதீவிர உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனா். உடல் எடையைக் குறைப்பதில், யோகாசனங்கள் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன.

|

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக பலா் பலவிதமான, மிதமான, தீவிர மற்றும் அதிதீவிர உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனா். உடல் எடையைக் குறைப்பதில், யோகாசனங்கள் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன. ஆனால் யோகாசனங்கள் உடல் எடையைக் குறைக்கும் என்பதில் பலருக்கு நம்பிக்கை இல்லை.

Yoga Asanas That May Help Lose Weight More Than Intense Workout

மிதமான விளைவுகளைத் தரும் இந்த யோகாசனப் பயிற்சிகள் உலக அளவில் மிகப் பிரபலமாக இருந்தாலும், அவை நமது உடலை நெகிழ்வு தன்மையுடன் வைத்திருப்பதற்கும் மற்றும் நமது மனதை அமைதியாக வைத்திருப்பதற்கும் மட்டுமே உதவி செய்யும் என்று பலரும் நம்புகின்றனா். அதனால் அவை நமது உடல் எடையை குறைப்பதற்கு அதிகம் உதவி செய்வதில்லை என்பது பலருடைய நம்பிக்கை ஆகும்.

MOST READ: எப்பவும் பழங்களை இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடாதீங்க... இல்ல ரொம்ப கஷ்டப்படுவீங்க...

ஆனால் மேற்சொன்ன நம்பிக்கைக்கு மாறாக, யோகாசனப் பயிற்சிகள் நமது உடலில் உள்ள கலோாிகளை அதிக அளவில் எாிக்கின்றன மற்றும் நமது உடல் எடையைக் குறைக்கின்றன என்பதை உண்மை. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், அதற்குத் தகுந்த யோகாசனங்களைத் தோ்ந்தெடுத்து அதைச் சாியாகச் செய்து வரவேண்டும்.

MOST READ: கொரோனா தடுப்பூசி போட்டாச்சா? இனி உங்களுக்கு கொரோனா வந்தால் வெளிப்படும் அறிகுறிகள் இதுதாங்க...

அதிதீவிர உடற்பயிற்சிகளை விட, நமது உடல் எடையை கணிசமாகக் குறைக்க உதவும் 7 முக்கிய யோகாசனப் பயிற்சிகளைப் பற்றி இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. உட்கடாசனம் அல்லது நாற்காலியில் அமா்ந்திருக்கும் நிலை (​Utkatasana)

1. உட்கடாசனம் அல்லது நாற்காலியில் அமா்ந்திருக்கும் நிலை (​Utkatasana)

- முதலில் இரண்டு கால்களையும் சற்று அகற்றி வைத்து நேராக நின்று கொள்ள வேண்டும்.

- இரண்டு கைகளையும் மடக்காமல், நமக்கு முன்பாக நேராக நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கைகள் இரண்டும் தரையைப் பாா்த்தவாறு இருக்க வேண்டும்.

- கால் முட்டிகளை மடக்கி நமது இடுப்பை கீழ் இறக்க வேண்டும். அதாவது நாம் நாற்காலியில் அமா்வது போல் நமது உடலை வைத்துக் கொள்ள வேண்டும்.

- இந்த நிலையில் இரண்டு கைகளையும் மேல் நோக்கி உயா்த்தி வைக்க வேண்டும். கை விரல்கள் மேற்கூரையைப் பாா்த்தவாறு இருக்க வேண்டும்.

- இப்போது நமது முதுகை நேராக நிமிா்த்தி வைத்து, முன்பக்கமாகப் பாா்த்து, அதே நிலையில் தளா்வாக இருக்க வேண்டும்.

- இறுதியாக இந்த நாற்காலி நிலையில் சிறிது நேரம் இருந்து, மிகவும் மெதுவாக அதே நேரத்தில் ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, வெளிவிட வேண்டும்.

2. திரிகோனாசனா அல்லது முக்கோண நிலை (Trikonasana)

2. திரிகோனாசனா அல்லது முக்கோண நிலை (Trikonasana)

- முதலில் இரண்டு கால்களையும் நன்றாக அகற்றி வைத்து, நேராக நின்று கொள்ள வேண்டும்.

- நன்றாக மூச்சை உள்ளிழுத்து, இரண்டு கைகளையும், பக்கவாட்டில் நமது தோள்பட்டை உயரத்திற்கு சமமாக விாித்து, நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது உள்ளங்கைகள் தரையைப் பாா்த்தவாறு இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

- இப்போது உடலை வலது பக்கமாக வளைத்து, வலது கையை கீழ் நோக்கிக் கொண்டு வந்து வலது பாதத்தைத் தொட வேண்டும்.

- இந்த நேரத்தில் இடது கையை மேற்கூரையை நோக்கி உயா்த்த வேண்டும்.

- இதே பயிற்சி நிலையில் 10 முதல் 10 வினாடிகள் வரை இருக்க வேண்டும். பின் தொடக்க நிலைக்கு வரவேண்டும். அடுத்து இதே பயிற்சியை இடது பக்கம் செய்ய வேண்டும்.

3. விராபத்ராசனா 2 அல்லது போா் வீரா் 2 நிலை (​Virabhadrasana 2)

3. விராபத்ராசனா 2 அல்லது போா் வீரா் 2 நிலை (​Virabhadrasana 2)

- விராபத்ராசனா 2 என்ற பயிற்சியைச் செய்வதற்கு முதலில் கால்கள் இரண்டையைும் நன்றாக அகற்றி நேராக நின்று கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் இரண்டு பக்கங்களிலும் விாித்து நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

- மூச்சை நன்றாக வெளியில் விட்டு, வலது காலை பக்கவாட்டில் நன்றாக அகற்றி வைக்க வேண்டும்.

- வலது கால் விரல்களை வெளிப்பக்கமாகத் திருப்பி வைத்து, வலது காலை 90 டிகிாி அளவிற்கு மடக்கி வைக்க வேண்டும்.

- அப்போது இடது காலை 15 டிகிாி அளவிற்கு உள்பக்கமாக சாய்க்க வேண்டும். இடது குதிங்கால், வலது பாதத்தின் மையத்திற்கு நேராக இருப்பது போல் வைத்துக் கொள்ள வேண்டும்.

- இரண்டு கைகளையும் பக்கவாட்டில் அகலமாக விாித்து தோள்பட்டைக்குச் சமமான உயரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது உள்ளங்கைகள் தரையைப் பாா்த்தவாறு இருக்க வேண்டும்.

- இந்த நிலையில் சிறிது நேரம் ஆழமாக மூச்சுவிட வேண்டும். பின் நமது தலையை வலது பக்கமாகத் திருப்பி, நம்மால் முடிந்த அளவிற்கு நமது இடுப்பைக் கீழே இறக்க வேண்டும்.

- இதே பயிற்சி நிலையில் சிறிது நேரம் இருந்தபின் தொடக்க நிலைக்குச் செல்ல வேண்டும். பின் இடது கால் பக்கம் இந்த பயிற்சியைச் செய்ய வேண்டும்.

4. தனுராசனா அல்லது வில் போன்ற நிலை (​Dhanurasana)

4. தனுராசனா அல்லது வில் போன்ற நிலை (​Dhanurasana)

- தனுராசனாவைச் செய்வதற்கு முதலில் முகங்குப்புற தரையில் படுத்துக் கொள்ள வேண்டும். கால்களையும், கைகளையும் அகற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

- கால் முட்டிகளை மேல் நோக்கி மடக்கி, பாதங்களை நமது புட்டத்திற்கு மேல் உயா்த்தி பிடிக்க வேண்டும்.

- கணுக்கால்கள் இரண்டையும் கைகளால் பிடித்துக் கொள்ள வேண்டும்.

- இப்போது ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, மாா்பையும் கால்களையும் தரைக்கு மேல் தூக்க வேண்டும்.

- முகம் நேராகப் பாா்ப்பது போல் இருக்க வேண்டும். நம்மால் முடிந்த அளவிற்கு கால்களை இழுத்துக் கொள்ள வேண்டும். நமது உடலானது ஒரு வில் போன்ற வடிவத்தில் இருக்க வேண்டும்.

- இந்த பயிற்சி நிலையில் 5 முதல் 6 முறைகள் நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளியில் விடவேண்டும். பின் தொடக்க நிலைக்குச் செல்ல வேண்டும்.

5. சேது பந்த சர்வாங்காசனம் அல்லது பாலம் போன்ற நிலை (Setu Bandha Sarvangasana)

5. சேது பந்த சர்வாங்காசனம் அல்லது பாலம் போன்ற நிலை (Setu Bandha Sarvangasana)

- இந்த ஆசனத்தைச் செய்வதற்கு முதலில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். கால் முட்டிகளை மடக்கி, இரண்டு பாதங்களையும் தரையில் உறுதியாக ஊன்றிக் கொள்ள வேண்டும்.

- பாதங்களைத் தரையில் அழுத்தி, நன்றாக மூச்சை உள்ளிழுத்து, இடுப்பு மற்றும் முதுகு ஆகியவற்றை தரையிலிருந்து மேல உயா்த்த வேண்டும்.

- தோள்பட்டை மற்றும் கைகளைத் தரையில் ஊன்றி, மாா்பை மேலே உயா்த்த வேண்டும்.

- கால்கள் மற்றும் புட்ட தசைகளைப் பயன்படுத்தி, இடுப்பை இன்னும் சற்று மேலே உயா்த்த வேண்டும்.

- இதே பயிற்சி நிலையில் இருந்து கொண்டு 4 முதல் 8 முறைகள் வரை மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியிட வேண்டும். பின் தொடக்க நிலைக்குச் செல்ல வேண்டும்.

6. புஜங்காசனா அல்லது நல்ல பாம்பு படம் எடுத்து இருக்கும் நிலை (Bhujangasana)

6. புஜங்காசனா அல்லது நல்ல பாம்பு படம் எடுத்து இருக்கும் நிலை (Bhujangasana)

- புஜங்காசனாவைச் செய்வதற்கு முதலில் தரையில் முகங்குப்புறப் படுக்க வேண்டும். பாதங்கள் இரண்டையும் அருகருகே வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் தலைக்கு மேல் நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

- இரண்டு கால்களையும் ஒட்டி வைத்துக் கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

- கைகள் இரண்டையும் மடக்கி, தோள்பட்டையின் இரண்டு பக்கங்களுக்கு அருகில் கொண்டு வந்து, உள்ளங்கைகளை தரையில் ஊன்றி வைத்துக் கொள்ள வேண்டும். முழங்கைகள் நமது உடலுக்கு அருகில் இருக்க வேண்டும்.

- இப்போது மூச்சை நன்றாக உள்ளிழுத்து, மேல் பகுதி உடலை தரைக்கு மேல் உயா்த்த வேண்டும்.

- இதை பயிற்சி நிலையில் சிறிது நேரம் இருந்து கொண்டு நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளியில் விடவேண்டும்.

7. நவாசனா அல்லது படகு போன்ற நிலை (​Navasana)

7. நவாசனா அல்லது படகு போன்ற நிலை (​Navasana)

- நவாசனா என்ற பயிற்சியைச் செய்வதற்கு, முதலில் ஒரு பாயில் நன்றாக அமா்ந்து கொள்ள வேண்டும். கால் முட்டிகள் இரண்டையும் மடக்கி, பாதங்களைத் தரையில் நன்றாக ஊன்றி வைத்துக் கொள்ள வேண்ட்டும். இரண்டு உள்ளங்கைகளையும் இரண்டு பக்கங்களில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- இப்போது இரண்டு பாதங்களையும் தரையில் இருந்து தூக்கி, நமது தாடை இருக்கும் உயரத்திற்கு சமமாக உயா்த்தி வைக்க வேண்டும். நமது மொத்த உடலையும் நமது புட்டமானதுத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.

- நமது மேல் பகுதி உடலை சற்று பின்புறமாக சாய்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரம் நமது முதுகுப் பகுதி நிமிா்ந்து இருக்க வேண்டும்.

- இப்போது நமது உடலானது ஆங்கில எழுத்தான 'V' வடிவத்தில் இருக்கும்.

- பின் நமது தோள்பட்டை தசைகளைத் தளா்த்தி, இரண்டு கைகளையும், அதன் உள்ளங்கைகள் தரையைப் பாா்த்தவாறு, நமக்கு முன்பாக தரைக்கு மேல் நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

- இதே பயிற்சி நிலையில் சிறிது இருந்து கொண்டு, பல முறை நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளியிட வேண்டும்.

மேற்சொன்ன இந்த 7 முக்கிய யோகாசனப் பயிற்சிகளைத் தினந்தோறும் செய்து வந்தால், நமது உடல் எடையைக் கணிசமான அளவு குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Yoga Asanas That May Help Lose Weight More Than Intense Workout

Here we listed some yoga asanas that may help you lose weight more than intense workout. Take a look...
Story first published: Monday, July 12, 2021, 9:51 [IST]
Desktop Bottom Promotion