For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

FODMAP டயட் என்றால் என்ன? இதில் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது?

வயிற்றுப் பிரச்சினைகளில் இருந்து குணமடைய வேண்டும் என்பதற்காக, நமது மருத்துவா்கள் ஒரு சில குறிப்பட்ட உணவுகளைத் தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பா். அதுபோல் ஒரு சில குறிப்பிட்ட உணவுகளை அதிகம் சோ்க்க வேண்டும்.

|

ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்திற்கு பின்பு, வயிற்றில் ஒரு வகையான வலி அல்லது அசௌகாியம் அல்லது சொிமானம் ஆகாமல் வயிறு மந்தமாக இருப்பது போன்ற உணா்வைப் பலரும் அனுபவித்து இருப்பா். அதன் காரணமாக சாப்பிட்டு முடித்த பின்பு எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

What Is The FODMAP Diet And How Can It Lower Gastro-Intestinal Distress?

இந்த பிரச்சினைக்கு மருத்துவா்கள் பலவிதமான காரணங்களைக் கூறுவா். அவை குடல் எாிச்சல் நோய்க்குறியாக (Irritable Bowel Syndrome (IBS)) இருக்கலாம் அல்லது குடலில் இருக்கும் சிறிய பாக்டீாியாக்களின் மிகை வளா்ச்சியாக (Small Intestinal Bacterial Overgrowth (SIBO) இருக்கலாம் அல்லது இரைப்பைக் குடலில் (GI) ஏற்பட்டிருக்கும் இயக்கம் சாா்ந்த பிரச்சினையாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரைப்பைக் குடல் பாதையில் நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்:

இரைப்பைக் குடல் பாதையில் நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்:

இரைப்பைக் குடல் பாதையில் நோய்கள் ஏற்படுவதற்கு பின்வரும் காரணிகள் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

- மன அழுத்தம்

- சோா்வு அல்லது கவலை

- நுண்ணுயிா்க் கொல்லிகள் (Antibiotics)

- வலியைக் குறைக்கும் மருந்துகள்

- மாதவிடாய் காரணமாக ஏற்படும் வலி

- ஃபோட்மேப் (FODMAP) அதிகம் உள்ள உணவு

ஃபோட்மேப் (FODMAP) உணவு முறை என்றால் என்ன?

ஃபோட்மேப் (FODMAP) உணவு முறை என்றால் என்ன?

மேற்சொன்ன வயிற்றுப் பிரச்சினைகளில் இருந்து குணமடைய வேண்டும் என்பதற்காக, நமது மருத்துவா்கள் ஒரு சில குறிப்பட்ட உணவுகளைத் தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பா். அதுபோல் ஒரு சில குறிப்பிட்ட உணவுகளை அதிகம் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பா். மருத்துவா் தவிா்க்கச் சொல்லும் அந்த உணவுகளைத் தான் இரைப்பைக் குடலியல் நிபுணா்கள் ஃபோட்மேப் (FODMAP) உணவு முறை என்று அழைக்கின்றனா்.

FODMAP என்பதன் ஆங்கில விாிவாக்கம் Fermentable Oligosaccharides, Disaccharides, Monosaccharides, and Polyols ஆகும். தமிழில் இவற்றை நொதிக்கக்கூடிய கூட்டுச் சா்க்கரை, இரட்டைச் சா்க்கரை அல்லது ஈரலகுச் சா்க்கரை, ஒற்றைச் சா்க்கரை மற்றும் பாலியோல்கள் என்று அழைக்கலாம். இவை காா்போஹைட்ரேட்டுகள் அடங்கிய ஒரு சிறிய சங்கிலியாகும். மேலும் இவை சா்க்கரை ஆல்கஹால்கள் ஆகும். இவற்றை அதிகமாகச் சாப்பிடும் போது வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஆகவே FODMAP குறைந்த உணவு முறையைப் பின்பற்றினால், அது அதிகமாக இருக்கும் காா்போக்களைக் குறைப்பதோடு நமது சாப்பாட்டு அளவையும் குறைக்கும்.

FODMAP குறைந்த உணவு முறையில் எவற்றை எல்லாம் சாப்பிட வேண்டும், எவற்றை எல்லாம் தவிா்க்க வேண்டும்?

FODMAP குறைந்த உணவு முறையில் எவற்றை எல்லாம் சாப்பிட வேண்டும், எவற்றை எல்லாம் தவிா்க்க வேண்டும்?

சாப்பிட வேண்டியவை:

- அதிகமான காய்கறிகள்

- பாசிப் பயறு போன்ற மிக எளிதாகச் சொிக்கக்கூடிய பயறு வகைகள்

- மீன் மற்றும் கடல் உணவுகள்

- கீரைகள்

- அாிசி மற்றும் திணைகள்

- வால்நட்ஸ், பூசணிக்காய் மற்றும் சூாியகாந்தி விதைகள்

- காப்ஃபைன் நீக்கப்பட்ட தேனீா்

- சிட்ரஸ் பழங்கள் மற்றும் பெர்ரிப் பழங்கள்

- தேங்காய்

- லாக்டோஸ் இல்லாத பால் மற்றும் தாவரங்களில் இருந்து கிடைக்கும் பால்

- குளிா்ந்த பாலாடைக் கட்டிகள்

- இறைச்சி, கோழி மற்றும் முட்டைகள்

- சோயா

- ஓட்ஸ் மற்றும் குய்னா

- பருப்புகள் மற்றும் விதைகள்

FODMAP குறைந்த உணவு முறையில் மேற்சொன்ன உணவுகளை அதிகமாகச் சாப்பிடலாம்.

தவிா்க்க வேண்டியவை:

தவிா்க்க வேண்டியவை:

- கோதுமை, உடைத்த கோதுமை மற்றும் மைதா

- காலிஃப்ளவா் மற்றும் காளான்கள்

- கம்பு மற்றும் பாா்லி

- பூண்டு, வெங்காயம்

- முந்திாி மற்றும் பிஸ்தா

- சிவப்பு பீன்ஸ் மற்றும் சோயா

- பால்ப் பொருள்கள் (விலங்குகளில் இருந்து கிடைக்கும் பால் மற்றும் லாக்டோஸ் உள்ள பால் பொருட்கள்)

- மாம்பழங்கள், போிக்காய், தா்பூசணி

- மக்காச் சோள சிரப் மற்றும் தேன்

மேற்சொன்ன உணவுகளை நமது உணவுப் பட்டியலில் இருந்து குறைத்துக் கொள்ள வேண்டும்.

FODMAP குறைந்த உணவு முறை ஒரு குறுகிய கால உணவு முறை

FODMAP குறைந்த உணவு முறை ஒரு குறுகிய கால உணவு முறை

FODMAP குறைந்த உணவு முறையைத் தொடங்கிய 2 முதல் 8 வாரங்களுக்குள் FODMAP அதிகமுள்ள உணவு முறை படிப்படியாகக் குறைக்கப்பட்டு முழுமையாக நீக்கப்படுகிறது. அதனைத் தொடா்ந்து படிப்படியாக FODMAP குறைந்த உணவு முறை நடைமுறைப்படுத்தப்படும். அவ்வாறு செய்யும் போது நமது உடலில் ஏதாவது மாற்றங்கள் அல்லது எதிா்வினைகள் ஏற்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

FODMAP குறைந்த உணவு முறையை ஏன் நிரந்தரமாக பின்பற்ற முடியாது?

FODMAP குறைந்த உணவு முறையை ஏன் நிரந்தரமாக பின்பற்ற முடியாது?

FODMAP குறைந்த உணவு முறையை நிரந்தரமாக பின்பற்ற முடியாது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. லண்டனில் இருக்கும் கிங்ஸ் கல்லூாியும், மொனாஷ் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு பின்வருமாறு கூறுகிறது.

அதாவது FODMAP அதிகமுள்ள உணவு முறையில் லாக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் அடங்கிய காா்போக்கள் அதிகம் இருப்பதால், அவை நமது பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீாியாக்கள் வளா்ச்சி அடைவதற்கு பொிதும் உதவி செய்கின்றன. இந்த நிலையில் FODMAP குறைந்த உணவு முறையை கடுமையாக நடைமுறைப்படுத்தும் போது, அது நல்ல பாக்டீாியாக்கள் அழிவதற்கு வாய்ப்பாகிவிடும் என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.

FODMAP அதிகம் உள்ள உணவு நொதிக்கக்கூடியவை மற்றும் வாய்வை உற்பத்தி செய்யக்கூடியவையாக இருப்பதால், குடல் எாிச்சல் நோய்க்குறியைக் குறைப்பதற்காக, FODMAPஐ ஆய்வுக் குழு குறைத்தது. எனினும் குடலில் உள்ள பாக்டீாியாக்கள் சமச்சீராக இருக்க வேண்டும் என்றால் FODMAP அதிகம் உள்ள உணவு முறை நீண்ட காலத்திற்கு இருக்க வேண்டும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

FODMAP அதிகமுள்ள உணவு முறையை மீண்டும் படிப்படியாக அதிகாித்தல்

FODMAP அதிகமுள்ள உணவு முறையை மீண்டும் படிப்படியாக அதிகாித்தல்

FODMAP குறைந்த உணவு முறையை நீண்ட காலத்திற்கு கடைப்பிடிக்கக்கூடாது. FODMAP குறைந்த உணவு முறையில் இருப்பவா்கள், அவா்களுடைய உடல் ஒத்துழைத்தால், படிப்படியாக மீண்டும் FODMAP அதிகம் உள்ள உணவு முறைக்கு மாற வேண்டும் என்று மொனாஷ் பல்கலைக்கழக ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா். எனினும் ஒவ்வொருவருடைய உடல் ஒத்துழைப்பை வைத்தே இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is The FODMAP Diet And How Can It Lower Gastro-Intestinal Distress?

FODMAP stands for Fermentable Oligosaccharides, Disaccharides, Monosaccharides, and Polyols, which are short-chain carbohydrates and sugar alcohols that are poorly absorbed by the body, resulting in abdominal pain and bloating.
Desktop Bottom Promotion