For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க 'இந்த' 3 பானங்கள் போதுமாம்...!

உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகமாக இருந்தால், ஓய்வு மற்றும் செயல்பாட்டின் போது அதிக கலோரிகளை எரிப்பீர்கள், இது அதிக எடையைக் குறைக்க உதவும். அதிக வளர்சிதை மாற்றம் என்றால் உங்கள் எடையை பராமரிக்க அதிக கலோரிகள் தேவைப்படும்.heal

|

உடல் எடையை குறைப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆரோக்கியமாக சாப்பிடுவது, கலோரிகளை எண்ணுவது முதல் உடற்பயிற்சி செய்வது வரை, ஆரோக்கியமான மற்றும் நிலையான எடை இழப்புக்கு பல விஷயங்களை மனதில் வைத்து கவனம் செலுத்த வேண்டும். ஆனால் எளிமையான வழிகளும் உள்ளன என்று நாங்கள் உங்களுக்குச் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம். வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கிளாஸ் பானத்தை உட்கொள்வதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடை இழப்ப்புக்கு உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? வளர்சிதை மாற்றம் என்ற வார்த்தையை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் வளர்சிதை மாற்றம் என்றால் என்ன? அது எப்படி உடல் எடை குறைக்க உதவும்?

Weight Loss: Three Drinks To Spike Your Metabolism

வளர்சிதை மாற்றம் என்பது உயிரணுக்களின் வாழ்க்கை நிலையை பராமரிப்பதில் ஈடுபடும் இரசாயன எதிர்வினை ஆகும். வளர்சிதை மாற்றத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் - கேடபாலிசம் (ஆற்றலைப் பெற மூலக்கூறுகளை உடைத்தல்) மற்றும் அனபோலிசம் (செல்களுக்குத் தேவையான அனைத்து சேர்மங்களின் தொகுப்பு). இவை உங்கள் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ் உதவுகிறது. இக்கட்டுரையில் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் எடையை குறைக்க உதவும்

உடல் எடையை குறைக்க உதவும்

உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகமாக இருந்தால், ஓய்வு மற்றும் செயல்பாட்டின் போது அதிக கலோரிகளை எரிப்பீர்கள், இது அதிக எடையைக் குறைக்க உதவும். அதிக வளர்சிதை மாற்றம் என்றால் உங்கள் எடையை பராமரிக்க அதிக கலோரிகள் தேவைப்படும்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பானங்கள்

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பானங்கள்

வீட்டில் எளிதாக தயாரிக்கப்பட்ட பானங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலை சரியாகவும், வீக்கத்தை குறைக்கவும் உதவும், இவை அனைத்தும் எடை இழப்புக்கு உதவும். நீங்கள் வீட்டில் தயாரிக்கக்கூடிய மூன்று எளிய பானங்கள் பற்றி இங்கே காணலாம்.

இஞ்சி எலுமிச்சை தேன் பானம்

இஞ்சி எலுமிச்சை தேன் பானம்

பானம் தயாரிக்க உங்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீர், இரண்டு எலுமிச்சைபழம், ஒரு அங்குலம் இஞ்சி, அரை தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு தேவைப்படும். பானம் தயாரிக்க, முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர் வைக்கவும். இப்போது அதில் தோராயமாக நறுக்கிய இரண்டு எலுமிச்சை தோலை எடுத்து ஒரு எலுமிச்சை சாற்றை பிழியவும். இஞ்சி மற்றும் மிளகு சேர்க்கவும். எலுமிச்சை மென்மையாகும் வரை இதை கொதிக்க வைக்கவும். இப்போது அதை ஆறவைத்து, தண்ணீரை வடிகட்டி, தேன் சேர்த்து சூடாக அருந்தலாம்.

நன்மைகள்

நன்மைகள்

எலுமிச்சை எடை குறைப்பதில் அதிசயங்களைச் செய்யும். இது இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும் மற்றும் உடலில் சேமிக்கப்படும் கொழுப்பின் அளவையும் குறைக்கும். மறுபுறம், இஞ்சி பசியை குறைக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

 இலவங்கப்பட்டை சீரகம் கருப்பு மிளகு பானம்

இலவங்கப்பட்டை சீரகம் கருப்பு மிளகு பானம்

பானம் தயாரிக்க உங்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீர், 3 டீஸ்பூன் சீரகம், 2 அங்குல இலவங்கப்பட்டை, 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை தேவைப்படும். பானம் தயாரிக்க, ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றவும். சீரகம், கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து ஐந்து-ஏழு நிமிடங்கள் கொதிக்க விடவும். பானத்தை வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சேர்க்கவும். பின்னர், சூடாக அருந்தலாம்.

நன்மைகள்

நன்மைகள்

இலவங்கப்பட்டை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது மற்றும் எடை குறைக்க உதவுகிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. மறுபுறம், சீரகம் செரிமானத்திற்கும் நல்லது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கருப்பு மிளகுடன் இணைப்பதால், அது ஒரு சரியான எடை இழப்பு பானமாக அமைகிறது.

கிரீன் டீ மற்றும் புதினா பானம்

கிரீன் டீ மற்றும் புதினா பானம்

பானத்தை தயாரிக்க உங்களுக்கு இரண்டு தேக்கரண்டி பச்சை தேயிலை இலைகள், 6-7 புதினா இலைகள் மற்றும் ஒரு கப் சூடான தண்ணீர் தேவைப்படும். பானம் தயாரிக்க, ஒரு பாத்திரத்தை எடுத்து ஒரு கப் தண்ணீர் மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும். இதை ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். இப்போது பச்சை தேயிலை இலைகளை சேர்த்து மேலும் மூன்று நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். தேநீரை வடிகட்டி, சூடாக அருந்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weight Loss: Three Drinks To Spike Your Metabolism

Here we are talking about the Weight Loss: Three Drinks To Spike Your Metabolism.
Story first published: Saturday, October 30, 2021, 12:47 [IST]
Desktop Bottom Promotion