For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'இந்த' சத்து நிறைந்த உணவுகள அதிகமா சாப்பிட்டா உங்க எடை இருமடங்கு அதிகரிக்குமாம்...!

|

எடை இழப்பு என்பது மிகவும் சாவல் நிறைந்த பணி. சில நேரங்களில் எடையை இழக்க நீங்கள் செய்யும் சில விஷயங்கள் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். புரதம் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து மற்றும் அதை தவறாமல் எடுத்துக்கொள்வது முக்கியம். சரியான புரத உட்கொள்ளல் தசை வெகுஜனத்தை பராமரிக்க உதவுகிறது. அதிக நேரம் முழுமையாய் இருங்க உதவுகிறது. உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் ஆரோக்கியமான செயல்பாட்டை ஆதரிக்கிறது. மேலும் நீங்கள் உடல் எடையை குறைக்கும் பணியில் இருக்கும்போது பின்பற்றுவதற்கு அதிக புரத உணவு உட்கொள்வது மிக முக்கியம் என்றும் நம்பப்படுகிறது.

பருப்பு வகைகள், விதைகள், கோழி, டோஃபு உள்ளிட்ட புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதற்கு முன்னுரிமை அளிப்பது, நீங்கள் எடை இழப்பு திட்டத்தில் இருக்கும்போது உங்கள் கார்ப்ஸ் பசி வெல்ல உதவும். இருப்பினும், அவை மிதமாக இருக்கும்போது மட்டுமே உங்களுக்கு பயன்தரும். அதிக புரத உணவை எடுத்துக்கொள்வது, உங்கள் எடை இழப்பு இலக்குகளை அடைவதில் இருந்து உங்களை நிறுத்தி, அதற்கு பதிலாக உங்களின் எடையை அதிகரிக்கச் செய்யலாம். அது எப்படி நிகழும் என்பதற்கான வழிகளை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசைவ புரதத்தை அதிகமாக உட்கொள்வது

அசைவ புரதத்தை அதிகமாக உட்கொள்வது

ஒரு நாளில் அதிகப்படியான, அல்லது அளவிடப்படாத அளவு புரதத்தை உட்கொள்வது சிக்கல்களை ஏற்படுத்தும் மற்றும் எடை இழப்பை தக்கவைக்க உண்மையில் உங்களுக்கு உதவாது. கோழி மற்றும் இறைச்சி புரதத்தின் வளமான ஆதாரங்களாக இருக்கிறது. இவற்றில் மற்ற புரத மூலங்களை விட கணிசமாக அதிக கலோரிகள் உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, அசைவ புரத மூலங்களை மட்டுமே நம்பியிருப்பது உங்கள் எடை இழப்புக்கு தடையாக இருக்கலாம். பல்வேறு மற்றும் அதிக சத்தான ஆதாரங்களைத் தேர்வுசெய்ய வேண்டும்.

MOST READ: கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்க நீங்க சாப்பிட வேண்டிய வைரஸ் எதிர்ப்பு உணவுகள் என்னென்ன தெரியுமா?

தேவையானதை விட அதிக புரதத்தை உட்கொள்கிறீர்கள்

தேவையானதை விட அதிக புரதத்தை உட்கொள்கிறீர்கள்

சிறந்த புரத உட்கொள்ளல் தனி நபருக்கு வேறுபடுகிறது. இது அவர்களின் உடல் எடை, வாழ்க்கை முறை மற்றும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே, நீங்கள் உண்மையில் தேவைப்படுவதை விட அதிக புரதத்தை உட்கொண்டால், நீங்கள் நீண்ட காலத்திற்கு அதிக எடையுடன் இருக்க வேண்டியிருக்கும். மேலும் கூடுதலாக சுகாதார பிரச்சினைகள் மனநலக் கோளாறுகள், மலச்சிக்கல் போன்றவை ஏற்படக்கூடும்.

கார்ப்ஸ் மிகக் குறைவு

கார்ப்ஸ் மிகக் குறைவு

அதிக புரத உணவில் நீங்கள் கணிசமான அளவு புரத மூலங்களை எடுத்துக்கொள்ள வேண்டும், ஆனால் நீங்கள் கார்ப்ஸை முழுவதுமாக விட்டுவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. கார்ப்ஸ் மற்றும் உடலுக்குத் தேவையான ஆற்றல் மூலங்களை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது ஒரு புத்திசாலித்தனமான விஷயமல்ல. மிகக் குறைந்த கார்ப்ஸைக் கொண்டிருப்பது சர்க்கரை பசி, பிங்க்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருப்பதற்கான அதிக வாய்ப்பை உண்டாக்குகிறது. நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், இது எடையை அதிகரிக்கும். உங்களுக்கு தேவையான அளவு உங்கள் அன்றாட உணவில் சில நல்ல கார்ப்ஸை சேர்க்க வேண்டும்.

MOST READ: கொரோனாவிலிருந்து உங்கள விரைவாக மீட்க 'இந்த' பொருள் போதுமாம்... அது என்ன தெரியுமா?

வொர்க்அவுட்டுக்கு உங்களுக்கு குறைந்த ஆற்றல் உள்ளது

வொர்க்அவுட்டுக்கு உங்களுக்கு குறைந்த ஆற்றல் உள்ளது

புரதம் உங்கள் வொர்க்அவுட்டை எரிபொருளாக மாற்றுகிறது. இல்லையா? இருப்பினும், எல்லா நேரத்திலும் அப்படி இருக்கக்கூடாது. அதிக அளவு புரத உட்கொள்ளல் (பின்னர் குறைந்த ஆற்றலைக் கொடுக்கும் கார்ப்ஸ்) உங்களை சோர்வாகவும், அடிக்கடி சோர்வடையவும் செய்யும். மேலும், நன்கு பயிற்சி செய்ய முடியாமலும் போகலாம். மோசமான உடற்பயிற்சிகளும் எடை பராமரிப்பை பாதிக்கும் ஒரு காரணியாகும். எனவே, உங்கள் பயிற்சிக்கு முன்னும் பின்னும் நீங்கள் சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள்.

ஃபைபர் உட்கொள்ளலை அதிகரியுங்கள்

ஃபைபர் உட்கொள்ளலை அதிகரியுங்கள்

கார்ப்ஸைப் போலவே, உங்கள் உணவில் நார்ச்சத்து குறைவாக இருப்பதும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதிக புரத உணவில் பலரும் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினையாகவும் இது இருக்கலாம். ஃபைபர் செரிமானத்தை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் நல்ல குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, இது உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதற்கும் எடை இழப்பை விரைவுபடுத்துவதற்கும் முக்கியமாகும். எனவே, உங்கள் ஃபைபர் உட்கொள்ளலை அதிகரிப்பதில் கவனம் செலுத்துங்கள் மற்றும் உங்கள் உணவில் ஒவ்வொரு உணவுக் குழுவையும் சேர்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ways Your High Protein Diet Is Making You Gain Weight

Here we are talking about the Ways Your High Protein Diet Is Making You Gain Weight.
Story first published: Monday, May 31, 2021, 17:30 [IST]