For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 7 பழங்கள் உங்கள் உடல் எடையை நீங்கள் எதிர்பார்ப்பதை விட வேகமாக குறைக்கும்... நம்பி சாப்பிடுங்க!

|

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு நாளைக்கு ஐந்து முறை பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுபவர்கள் நோய் வாழ்க்கையை வாழலாம் என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாகவே பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கையில் சீரான எடையை பராமரிப்பது என்பது முக்கியமான பங்கு வகிக்கிறது.

பழங்கள் எடை குறைக்க உதவும் மகத்தான நன்மைகளைக் கொண்ட இயற்கையின் சூப்பர் உணவுகளாகும். அவை நார்ச்சத்து அதிகம், இயற்கை சர்க்கரைகளைக் கொண்டிருக்கின்றன மற்றும் பசியைத் தடுக்க உதவுகின்றன. பழத்தின் ஒரு பகுதி 80 கிராமாக வரையறுக்கப்படுகிறது. எடை இழப்பிற்கு உத்திரவாதம் அளிக்கும் சிறந்த பழங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தர்பூசணி

தர்பூசணி

எடை இழப்புக்கு தர்பூசணி சிறந்த பழமாகும், இது அதிக அளவு நீர் உள்ளடக்கம் (90%) கொண்ட பழமாகும். 100 கிராம் பழத்தில் வெறும் 30 மட்டுமே உள்ளது. இது கொழுப்பை எரிக்க உதவும் அர்ஜினைன் எனப்படும் அமினோ அமிலங்களின் வளமான மூலமாகும். இருப்பினும், தர்பூசணியைப் பற்றிய மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், அது உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், இது உங்களுக்கு நீண்ட நேரம் பசியில்லாமல் பார்த்துக் கொள்ளும்.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம்

கொய்யா போர்த்துகீசியர்களால் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட பழமாகும், இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழம் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால் எடைகுறைப்பிற்கு மிகசிறந்த பழமாக இது கருதப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இது நமது குடல் இயக்கங்களை சீராக வைத்திருக்க உதவுறது, இது ஒட்டுமொத்த எடை இழப்பு செயல்முறைக்கு உதவுகிறது.

ஆப்பிள்

ஆப்பிள்

உங்கள் புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், பற்களை வெண்மையாக்கவும், உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலை கூட குணப்படுத்தும் பழமாக இருப்பது ஆப்பிள்தான். நீங்கள் எடை குறைக்கும் முயற்சியில் இருந்தால், நிச்சயமாக உங்கள் உணவு முறையில் ஆப்பிள் இருக்க வேண்டும். ஒரு நடுத்தர அளவிலான ஆப்பிளில் சுமார் 50 கலோரிகள் உள்ளன, அதில் கொழுப்பு அல்லது சோடியம் இல்லாமல் இருப்பது கூடுதல் நன்மையாகும்.

MOST READ: ஆக்ஸ்போர்டில் கொரோனா தடுப்பூசி எப்படி உருவாக்கப்பட்டது? எப்ப மக்களுக்கு கிடைக்கும் தெரியுமா?

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழமானது ஆற்றலின் சிறந்த ஆதாரமாகவும், சரியான ஒர்க்அவுட் உணவாகவும் உள்ளது. உடற்பயிற்சிக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது உங்களுக்கு சிறந்த பலன்களை வழங்கும். இது தசைப்பிடிப்புகளை வெல்ல உதவுகிறது, உங்கள் பி.பியைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது, அமிலத்தன்மையைத் தடுக்கிறது மற்றும் மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது.

பேரிக்காய்

பேரிக்காய்

பேரிக்காய் உங்கள் தினசரி ஃபைபர் தேவையின் கால் பகுதியை பூர்த்தி செய்கிறது மற்றும் உங்கள் செரிமான அமைப்புக்கு சிறந்த நன்மைகளை வழங்குகிறது. இது கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, கரோனரி இதய நோய்கள் மற்றும் வகை II நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது. ஃபைபர் உங்களை இயல்பை விட நீண்ட நேரம் திருப்திப்படுத்துகிறது மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் உடல் எடையை நன்கு குறைக்கிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சு சுவைக்க சிறந்தது மட்டுமல்ல, இந்த பழத்தின் 100 கிராம் 47 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. இது ஒரு கண்டிப்பான உணவுமுறையை பின்பற்றுபவர்களுக்கு சிறந்த சிற்றுண்டியாகும். இதில் இயற்கையாகவே நிறைந்துள்ள வைட்டமின் சி விரைவான எடைகுறைப்பிற்கு வழிவகுக்கிறது.

MOST READ: நமது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி ஆயுளை அதிகரிக்க இந்த சமையலறை பொருட்களே போதும்...!

தக்காளி

தக்காளி

உண்மைதான், தக்காளி காய்கறிகளில் சேராது அது பழவகையை சேர்ந்ததாகும். சுவையான இந்த பழங்கள் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவை மற்றும் நீர் தேக்கத்தைக் குறைக்கின்றன. லெப்டின் எதிர்ப்பையும் அவை தலைகீழாக மாற்றுகின்றன. லெப்டின் ஒரு வகை புரதம், இது நம் உடலை எடை இழப்பதைத் தடுக்கிறது, இதனால் தக்காளி உட்கொள்வது எடை இழப்பிற்கு வழிவகுக்கும். செயற்கை பொருட்கள் மற்றும் சர்க்கரைகள் நிறைந்த கெட்ச்அப் போன்றவற்றை தக்காளியாக நினைக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Fruits That Will Guarantee Weight Loss

Here is the list of top 7 fruits that will guarantee weight loss