For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஜப்பானிய முறை உடம்புல இருக்குற கொழுப்பை வேகமா குறைக்கும் தெரியுமா?

உடல் எடையைக் குறைக்க உதவும் ஒரு ஜப்பானிய வழி ஒன்று உள்ளது. அது வேறொன்றும் இல்லை, லாங்-ப்ரீத் டயட் (Long Breathe Diet) என்ற ஜப்பானிய முறை. இந்த வழியை மேற்கொண்டால், உடல் எடையை உடனடியாக குறைக்கலாம்.

|

உலகெங்கிலும் உடல் பருமனால் ஏராளமான மக்கள் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க நீங்கள் பல்வேறு டயட்டுகள் மற்றும் ஆயிரம் உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருக்கலாம். அதே சமயம் அவற்றால் எந்த ஒரு பலனும் கிடைக்காமல் ஏமாந்தும் போயிருக்கலாம். ஆனால் உடல் எடையை நொடியில் இழக்கச் செய்யும் ஒரு அற்புதமான வழி ஒன்று இருந்தால் அற்புதமாக இருக்கும் அல்லவா?

This 2-minute Japanese Technique Might Help You Get Rid Of Extra Kilos

அப்படி ஒரு ஈஸியான உடல் எடையைக் குறைக்க உதவும் ஒரு ஜப்பானிய வழி ஒன்று உள்ளது. அது வேறொன்றும் இல்லை, லாங்-ப்ரீத் டயட் (Long Breathe Diet) என்ற ஜப்பானிய முறை. இந்த வழியை மேற்கொண்டால், உடல் எடையை உடனடியாக குறைக்கலாம். இப்போது இந்த ஜப்பானிய எடை குறைக்கும் முறையைப் பற்றி விரிவாக காண்போம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜப்பானிய எடை இழப்பு முறை

ஜப்பானிய எடை இழப்பு முறை

மிகி ரியோசுக் என்ற நடிகர் தற்செயலாக இந்த இரண்டு நிமிட நீள சுவாச நுட்பத்தைக் கண்டுபிடித்தார். இந்த ஜப்பானிய எடை இழப்பு முறை சில வாரங்களில் 10 கிலோ வரை எடையைக் குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது. முக்கியமாக இந்த முறைக்கு கண்டிப்பான டயட்டை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. மொத்தத்தில் இது ஒரு எளிய மற்றும் பயனுள்ள சுவாச நுட்பம் ஆகும்.

எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது?

எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது?

திரு. ரியோசுக் முதுகு வலியால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மருத்துவர்கள் நிவாரணத்திற்காக சில உடற்பயிற்சிகளை பரிந்துரைத்தனர். அப்படி மருத்துவர்கள் பரிந்துரைத்த ஒரு உடற்பயிற்சியின் பக்க விளைவு தான் இந்த கண்டுபிடிப்பு. இதனால் இவர் சில வாரங்களுக்குள் 13 கிலோ வரை எடையை இழந்ததோடு, அவரது இடுப்பளவு 4.7 அங்குலம் குறைந்ததிருந்தது.

இந்த நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது?

இந்த நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது?

இந்த எளிய சுவாச நுட்பத்தில் மூன்று நொடிகள் மூச்சை உள்ளிழுப்பதும், ஏழு நொடிகளுக்கு வலுவாக சுவாசிப்பதும் அடங்கும். ஆனால் அது எவ்வாறு உதவுகிறது என்று நீங்கள் கேட்கலாம். எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ள முறைகளில் ஒன்றாக சுவாச பயிற்சிகள் கூறப்படுகின்றன. உடலில் உள்ள கொழுப்பில் ஆக்ஸிஜன், கார்பன் மற்றும் ஹைட்ரஜன் உள்ளன. நாம் சுவாசிக்கும் போது, ஆக்ஸிஜன் கொழுபு செல்களை அடைந்து பின்னர் அவற்றை கார்பன் மற்றும் தண்ணீராகப் பிரிக்கிறது. எளிமையாக கூற வேண்டுமானால், உடல் எவ்வளவு ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகிறதோ, அவ்வளவு கொழுப்பு உடலில் இருந்து கரைக்கப்படுகிறது.

இந்த ஜப்பானிய மூச்சு பயிற்சியை எவ்வாறு செய்வது?

இந்த ஜப்பானிய மூச்சு பயிற்சியை எவ்வாறு செய்வது?

இந்த ஜப்பானிய மூச்சு பயிற்சி உடலில் நீண்ட காலமாக தேங்கியுள்ள கொழுப்பை அகற்ற உதவுவது மட்டுமல்லாமல், உடலின் தசைகளை வலுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதற்கு இந்த பயிற்சியை பின்வருமாறு செய்ய வேண்டும்.

* ஒரு காலை முன்னோக்கி, மற்றொரு கால் பின்புறமாக வைத்து நேராக நிற்கவும்.

* ஒட்டுமொத்த உடல் எடையையும் பின்புற காலில் செலுத்தவும்.

* பின் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி மூச்சை 3 நொடிகள் மெதுவாக உள்ளிழுக்க வேண்டும்.

* பின்பு கைகளை முன்புறமாக நீட்டி வேகமாக மூச்சை 7 நொடிகள் வெளிவிட வேண்டும்.

நீங்கள் உடற்பயிற்சிக்கு புதிதானவரானால், இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 2 நிமிடம் செய்தால் போதும். இருப்பினும், இந்த பயிற்சியை 10 நிமிடம் செய்யும் திறமை இருந்தால் செய்யுங்கள். இதனால் சிறப்பான பலன் கிடைக்கும்.

நினைவில் கொள்ள வேண்டியவைகள்:

நினைவில் கொள்ள வேண்டியவைகள்:

உணவு மாற்றம் நல்லது

என்ன தான் மேலே கொடுக்கப்பட்டுள்ள மூச்சு பயிற்சியின் போது கடுமையான டயட்டை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், எடையைக் குறைக்க வேண்டுமானால், உணவு முறையில் சிறு மாற்றங்களை செய்வதால் சிறப்பான பலனைப் பெறலாம்.

அதிக நீர் குடிக்கவும்

அதிக நீர் குடிக்கவும்

உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது அதிகளவு நீரைக் குடிப்பது நல்லது. இதனால் உடலில் நீர்ச்சத்து சீரான அளவில் பராமரிக்கப்பட்டு, அடிக்கடி பசியுணர்வு ஏற்படுவது தடுக்கப்படும் மற்றும் உடல் வறட்சி ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும்.

நார்ச்சத்து உணவுகளை சேர்க்கவும்

நார்ச்சத்து உணவுகளை சேர்க்கவும்

எடையைக் குறைக்க வேண்டுமானால், நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும். முக்கியமாக நார்ச்சத்துள்ள உணவுகள் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

ஜங்க் உணவுகளைத் தவிர்க்கவும்

ஜங்க் உணவுகளைத் தவிர்க்கவும்

தற்போது பலரது உடல் பருமனுக்கு முக்கிய காரணமே ஜங்க் உணவுகளும், கார்பனேட்டட் பானங்களும் தான். எனவே எடையை குறைக்க நினைத்தால், முதலில் ஜங்க் உணவுகள் மற்றும் கார்பனேட்டட் பானங்கள், ஆல்கஹால் போன்றவற்றிற்கு குட்-பை சொல்ல வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள்

எடை இழப்பிற்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் இவற்றில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம் இருக்கும். அதோடு வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவைகளும் அதிகம் நிறைந்திருப்பதால், ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2-minute Japanese Breathing Technique for Weight Loss

Are you trying to shed the extra kilos? Try this effective 2-minute Japanese breathing technique for weight loss.
Desktop Bottom Promotion