For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் ஆயுளில் பல ஆண்டுகளை அதிகரிக்க தினமும் இந்த பொருட்களை இப்படி சாப்பிட்டால் போதும்...!

நீண்ட மற்றும் ஆரோக்கிய வாழ்விற்கான ஒரே அடிப்படை ரகசியம் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவதாகும்.

|

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். ஆனால் அதற்கான வழிகளைத்தான் யாரும் பின்பற்றுவதில்லை. நீண்ட மற்றும் ஆரோக்கிய வாழ்விற்கான ஒரே அடிப்படை ரகசியம் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவதாகும். வைட்டமின் மற்றும் தாது நிறைந்த உணவுகள் உங்கள் உள் அமைப்பை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்கும்.

The 2 Fruits and 3 Vegetables Diet For Longevity

ஆரோக்கியமான உணவுமுறையை உங்களை வாழ்க்கையை அனுபவிக்க முழுமையாக உதவுகிறது. அதிக கலோரி மற்றும் இறைச்சி மற்றும் முட்டை போன்ற அதிக புரத உணவுகளை சாப்பிடுவது நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு முக்கியம் என்று பொதுவாக நம்பப்பட்டாலும், ஹார்வர்டின் புதிய ஆய்வு இதற்கு நேர்மாறாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள்

ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, நீண்ட ஆயுளின் ரகசியம் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்ட உணவில் உள்ளது. இது நீண்ட காலம் வாழ உங்களுக்கு உதவும், இறைச்சி மற்றும் முட்டை அல்ல. இலை கீரைகள் மற்றும் பழங்கள் உங்கள் உள் அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்தவும், முன்கூட்டிய இறப்பைத் தடுக்கவும் உதவும்.

நீண்ட காலம் வாழ உதவும் டயட்

நீண்ட காலம் வாழ உதவும் டயட்

மார்ச் 2021 இல் அமெரிக்க சுகாதார சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வில், ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், சீரான அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நீண்ட காலம் வாழ உதவும் என்று தெரியவந்துள்ளது.தினமும் இரண்டு பழங்கள் மற்றும் மூன்று காய்கறிகள் சாப்பிடுவது இறப்பு விகிதத்தைக் குறைக்கும். இருப்பினும், அதை விட அதிகமாக சாப்பிடுவது கூடுதல் நன்மைகளை அளிக்காது. இரண்டு பழங்கள் மற்றும் மூனறு காய்கறிகளை தினமும் சாப்பிடுவது எந்தவொரு பெரிய நோய்களையும் உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க ஒருவர் எடுக்கக்கூடிய இயற்கை பொருட்களின் உகந்த அளவாகும்.

எல்லா பழங்களும் காய்கறிகளும் சமமானவை அல்ல

எல்லா பழங்களும் காய்கறிகளும் சமமானவை அல்ல

ஆயுட்காலம் அதிகரிக்க முன்னணி ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படி, எல்லா பழங்களும் காய்கறிகளும் பயனளிக்காது. சில பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றவற்றை விட சிறந்தவை மற்றும் நீண்ட ஆயுளை அதிகரிப்பதில் நன்றாக வேலை செய்யும். அதிக இலை பச்சை மற்றும் குறைவான மாவுச்சத்துள்ள காய்கறிகளும் கூழ்மங்களும் நாள்பட்ட நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

MOST READ: டீ குடிக்கும் போது இந்த பொருட்களை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க... இல்லனா பெரிய ஆபத்தாக மாறிடும்...!

பரிந்துரைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள்

பரிந்துரைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள்

பச்சை இலை காய்கறிகள்: கீரை, முட்டைக்கோஸ், டர்னிப் கீரைகள்.

பீட்டா கரோட்டின் நிறைந்த காய்கறிகள்: கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, ப்ரோக்கோலி

சிட்ரஸ் பழங்கள் மற்றும் பெர்ரி: ஆரஞ்சு, மல்பெரி, ஸ்ட்ராபெரி

தவிர்க்க வேண்டியவை

மாவுச்சத்துள்ள காய்கறிகள்: பட்டாணி, சோளம் மற்றும் உருளைக்கிழங்கு மற்றும் பழச்சாறுகள்

ஆய்வு என்ன சொல்கிறது?

ஆய்வு என்ன சொல்கிறது?

உலகெங்கிலும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வயதானவர்கள் மீது மேற்கொண்ட ஒரு பரிசோதனை ஆய்வின் பின்னர் 5 பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டிருப்பதன் நன்மைகள் தெரியவந்தன. பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உணவுமுறைப் பற்றிய கேள்வித்தாள்களை நிரப்பச் செய்தனர். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்வது ஆண்கள் மற்றும் பெண்களில் இறப்பு அபாயத்தை குறைக்கும் என்று பின்னர் கண்டறியப்பட்டது.

MOST READ: உங்கள் மனைவிக்கு உடலுறவு மேல் வெறுப்பு ஏற்படுவதற்கு இதில் ஒன்றுதான் காரணமாக இருக்குமாம் தெரியுமா?

ஆயுளை அதிகரிக்கும் மற்ற உணவுகள்

ஆயுளை அதிகரிக்கும் மற்ற உணவுகள்

இந்த 5 உணவுகள் ஆயுளை அதிகரிப்பதற்கான ஒரு வழியாகும். மெடிட்டேரினியன் டயட்டை பின்பற்றுவதும் உங்கள் ஆயுளை அதிகரிக்க உதவும் வழியாகும். மெடிட்டேரினியன் டயட் டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள் அபாயத்தை குறைக்கும் மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உடலுறவு இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Diet For Long Life: The 2 Fruits and 3 Vegetables Diet For Longevity

Try this 2 fruits and 3 vegetables per day diet for longevity.
Desktop Bottom Promotion