Just In
Don't Miss
- News
நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் தமிழை மறந்த மாணவர்கள்! ஃபெயில்கள் அதிகரிப்பு- டிஜிபி சைலேந்திர பாபு
- Movies
டயலாக்கை உளறி தள்ளும் ஆண்ட்ரியா.. என்ன செஞ்சாலும் ரொம்ப கியூட் நீங்க கொஞ்சும் ரசிகர்கள்!
- Sports
என்னுடைய பணிக்காலம் பிசிசிஐயின் பொற்காலம்.. எந்த சர்ச்சைகளுக்கும் இடமில்லை.. கங்குலி கருத்து
- Automobiles
இனி அதிவேகமாக வாகனம் ஓட்டினால் இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகமாகும்... வருகிறது புது ரூல்ஸ்...
- Technology
இன்று பூமியை நெருங்கும் ஆபத்தான சிறுகோள்: இறுதி நொடியில் கண்டுபிடித்த NASA- பூமிக்கு ஆபத்தா?
- Finance
தங்கம் தான் விமோசனம்.. 192% பணவீக்கத்தை குறைக்க இதுதான் ஓரே வழி..!
- Travel
ஆசியாவிலேயே மிக உயரமான பாராகிளைடிங் ஸ்பாட் – பிர் பில்லிங்கில் ஒரு சகாசச் சுற்றுலா!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பானை போன்று இருக்கும் தொப்பையை இருமடங்கு வேகத்தில் குறைக்கணுமா? அப்ப இத தினமும் 2 வேளை குடிங்க...
உலகில் பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டு வரும் ஓர் பிரச்சனையாக உடல் பருமன் அல்லது தொப்பை உள்ளது. இப்பிரச்சனையை சரிசெய்வதற்காக பலரும் பலவிதமான டயட்டுகள் மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அனைவராலுமே டயட்டை பின்பற்றுவது என்பது இயலாது. ஆனால் உடற்பயிற்சியுடன், சரியான உணவுமுறையை மேற்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம். இது தவிர, ஒருசில பானங்களும் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். குறிப்பாக டீ ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அதற்கு சரியான டீயைத் தேர்ந்தெடுத்து, சரியான நேரத்தில் குடிக்க வேண்டும்.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைக்க மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீ பெரிதும் உதவி புரியும். அதோடு இந்த வகையான டீ உடல் எடையை விரைவாக குறைக்க உதவி புரிவதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இப்போது உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில டீ வகைகள் குறித்து காண்போம். இவற்றில் ஒரு டீயை தினமும் 2 வேளை குடித்து வந்தால், நற்பலன்களை விரைவில் பெறலாம்.

மஞ்சள் டீ
மஞ்சளில் பொட்டாசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. அதோடு மஞ்சளில் குர்குமின் என்னும் முக்கியமான பொருள் உள்ளது. இது கொழுப்புக்களை எரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட மஞ்சளைக் கொண்டு டீ தயாரித்து தினமும் குடித்து வந்தால், எடை வேகமாக குறையும். இந்த டீ தயாரிப்பதற்கு 2 கப் நீரை கொதிக்க வைத்து இறக்கவும். பின் அந்த நீரில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, 5 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பின் அதை குடிக்க வேண்டும்.

இஞ்சி டீ
இஞ்சியை எந்த வடிவில் உட்கொண்டால், அது நேரடியாக உடலின் மெட்டபாலிசத்தை பாதித்து, எடை இழப்பிற்கு உதவும். அதுவும் இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்து, ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த இஞ்சி டீயை தயாரிப்பதற்கு 2 கப் நீரை ஒரு பாத்திரததில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சியை சேர்த்து குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, அதில் தேன் மற்றும் 1/2 எலுமிச்சையைப் பிழிந்து கலந்து குடிக்க வேண்டும்.

லெமன் டீ
எலுமிச்சை சாறு உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. எலுமிச்சையைக் கொண்டு டீ தயாரித்த குடித்து வந்தால், அது உடலில் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தி, உடல் கொழுப்பை எரிக்கும். இந்த டீ தயாரிப்பதற்கு ஒரு கப் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

பட்டை டீ
பட்டை டீ உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதோடு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பட்டை டீ மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால், இது உடலில் உள்ள கொழுப்பை வேகமாக குறைக்க உதவி புரிந்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். இந்த டீ தயாரிப்பதற்கு ஒரு கப் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அதில் சிறிது பட்டைத் தூளை சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து, பின் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

ப்ளாக் டீ
ப்ளாக் டி குடித்து வந்தால், இதய பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும். இந்த டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை நீக்கும். இந்த டீ தயாரிப்பதற்கு ஒரு கப் நீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் சிறிது டீ தூளை சிறிது சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

க்ரீன் டீ
க்ரீன் டீயில் கேட்டசின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது உடலின் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்துகிறது. ஒரு நாளைக்கு 2-3 முறை க்ரீன் டீயைக் குடித்து வந்தால், உடல் எடை வேகமாக குறைவதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.