For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹோட்டலில் சாப்பிட்டாலும் எடை அதிகரிக்காமல் இருக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?

உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் சாதாரண விஷயம் அல்ல. அது மிகவும் சவாலான பணி. உடல் எடையை குறைப்பதில் மிகவும் கடினமான விஷயம் எதுவென்றால், பசியைக் கட்டுப்படுத்துவதாகும்.

|

உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் சாதாரண விஷயம் அல்ல. அது மிகவும் சவாலான பணி. உடல் எடையை குறைப்பதில் மிகவும் கடினமான விஷயம் எதுவென்றால், பசியைக் கட்டுப்படுத்துவதாகும். பல்வேறு மக்கள் தங்கள் உணவுத் திட்டத்தைப் பின்பற்றுகிறார்கள். வழக்கமான உடற்பயிற்சிகளையும் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பசி என்று வரும்போது அவர்களால் அதை கட்டுப்படுத்த முடியாது. இது அவர்களின் எடை இழப்பு இலக்குகளை சீர்குலைக்கிறது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தும்போது அது இன்னும் கடினமாகிறது.

smart tips to prevent gain weight while eating out

நீங்கள் ஒரு எடை இழப்பு திட்டத்தில் இருந்தால் மற்றும் நண்பர்களுடன் வெளியே செல்கிறீர்கள் என்றால், அந்த தேவையற்ற உணவு மற்றும் அதனால் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க சில உதவி குறிப்புகள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெறும் வயிற்றில் வெளியே செல்ல வேண்டாம்

வெறும் வயிற்றில் வெளியே செல்ல வேண்டாம்

குப்பை உணவுகளைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, உங்களை ஏற்கனவே நிறைவாக வைத்திருப்பதுதான். நீங்கள் ஏற்கனவே முழுதாக உணர்ந்தால், மிகவும் கவர்ச்சியான உணவு கூட உங்களைத் தூண்டாது. எனவே, அடுத்த முறை நீங்கள் வெளியே செல்லும்போது அல்லது விருந்துக்கு செல்லும்போது, நீங்கள் கிளம்புவதற்கு முன் வீட்டிலேயே சாப்பிடுங்கள். ஏனென்றால் நீங்கள் பசியுடன் இருக்கும்போது சுய கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள். அவசரமாக வெளியே செல்ல வேண்டயிருந்தால், நீங்கள் ஒரு புரதச்சத்து நிறைந்த ஜூஸை குடிக்கலாம்.

MOST READ: சமையலுக்கு பயன்படுத்தும் 'இந்த' ஒரு பொருள்... உங்க எடை குறைப்பில் அதிசியங்களை செய்யுமாம் தெரியுமா?

புரதம் சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள்

புரதம் சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள்

வேறு வழியே இல்லை, நீங்கள் ஏதாவது சாப்பிட வேண்டும் என்றால், வறுக்காத புரதத்தை சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் சிக்கன் டிக்கா, பனீர் டிக்கா அல்லது டோஃபு சாப்பிடலாம். வறுக்கப்பட்ட அல்லது வேகவைத்த ஒன்றைத் தேர்வு செய்யவும். காரமான சாஸைச் சேர்க்கவும், அதனால் நீங்கள் அதை அதிகம் சாப்பிடக்கூடாது. சாஸ்கள் கலோரிகள் நிறைந்தவை, எனவே மிதமாக உட்கொள்வது சிறந்தது.

ஆல்கஹால் வேண்டாம் என்று சொல்லுங்கள்

ஆல்கஹால் வேண்டாம் என்று சொல்லுங்கள்

ஆல்கஹால் உட்கொள்ளும்போது நீங்கள் உண்மையில் சுய கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். ஆல்கஹால் நீங்கள் பல நாட்கள் செய்த கடின உழைப்பை சேதப்படுத்தும். மது அருந்துவது அடுத்த நாள் உங்கள் உடற்பயிற்சியைத் தடுக்கும். ஆதலால், நீங்கள் நிச்சயமாக அதை விரும்பக்கூடாது. ஆல்கஹால் உட்கொள்வதைத் தடுக்க நீங்கள் சிறிது தண்ணீர், சோடா அல்லது எலுமிச்சை தண்ணீரைக் குடிக்கலாம்.

பொரியல் வேண்டாம்

பொரியல் வேண்டாம்

பொரியல் உங்கள் மேக்ரோ சமநிலையை தொந்தரவு செய்யலாம். பொரியலில் உள்ள கூடுதல் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆயிரக்கணக்கான கூடுதல் கலோரிகளை உங்களுக்கு ஏற்றும். அதற்கு பதிலாக ஒரு சுவையான சாலட்டைத் தேர்ந்தெடுங்கள், இது உங்கள் பசி உணர்வை கட்டுப்படுத்தும், எடை இழப்பு பயணத்திற்கு உதவும்.

MOST READ: சைவ உணவு மட்டும் சாப்பிடுறதால... உங்களுக்கு என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா?

உணவை எடுத்துச் செல்லுங்கள்

உணவை எடுத்துச் செல்லுங்கள்

நீங்கள் வெளியே செல்லும்போது, சிறிது உணவை எடுத்துசெல்லுங்கள். இது வேடிக்கையானது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இது ஒரு மீட்பர் தந்திரம். உங்களைச் சுற்றி கலோரி நிறைந்த உணவை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும் மற்றும் என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று கண்டுபிடிக்க முடியாமல் போகும்போது, உங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவே உங்களுக்கு சிறந்த மீட்பர்.

உங்கள் மேக்ரோக்களை எண்ணுங்கள்

உங்கள் மேக்ரோக்களை எண்ணுங்கள்

நீங்கள் கலோரி கட்டுப்படுத்தும் உணவை எடுத்துக்கொண்டால், விருந்துக்கு சில கலோரிகளைச் சேமிக்கலாம். உதாரணமாக, நீங்கள் 2000 கலோரி திட்டத்தில் இருந்தால், நீங்கள் நாள் முழுவதும் 800 கலோரிகளை உட்கொள்ளலாம் மற்றும் மீதமுள்ளதை விருந்தில் சாப்பிடலாம். 200 கிராம் எடையுள்ள கோழி மார்பகத்தில் சுமார் 250 கலோரிகள் இருக்கும். மசாலாப் பொருள்களைச் சேர்த்தால் கூட 300 கலோரிகளுக்கு மேல் ஆகாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

smart tips to prevent gain weight while eating out

Here we are talking about the smart tips to prevent gain weight while eating out.
Story first published: Friday, October 8, 2021, 12:00 [IST]
Desktop Bottom Promotion