For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிச்சி உடல் எடையை குறைக்க இந்த வழிகள ஃபாலோ பண்ணா போதுமாம்!

ஆரோக்கியமாக இருக்க உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மிக முக்கியம். நீரேற்றப்பட்ட உடல் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதனால், நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும்

|

வளர்சிதை மாற்றமானது உடல் எடையை குறைக்க மிகவும் முக்கியமாகும் என்று நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். வேகமான வளர்சிதை மாற்றம் உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. நீங்கள் உண்ணும் ஊட்டச்சத்துக்கள், அவை உடலால் உறிஞ்சப்பட்டாலும், நீங்கள் உண்ணும் கலோரிகள் உடற்பயிற்சியின் மூலம் எரிக்கப்படுகின்றன என்றால், இவை அனைத்தும் உங்கள் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்தது.

Small changes to make in your daily routine to boost your metabolism in tamil

ஆரோக்கியமான மற்றும் வேகமான வளர்சிதை மாற்றம் உடல் எடையை குறைப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் அடிப்படை படியாகும். உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் சில தினசரி மாற்றங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரதம் மற்றும் நார்ச்சத்து சேர்க்கவும்

புரதம் மற்றும் நார்ச்சத்து சேர்க்கவும்

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்கள் உடலுக்கு நல்லது. புரதம் தசைகளை உருவாக்க உதவுகிறது மற்றும் நார்ச்சத்து உங்களை நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கிறது. இதனால் அதிகப்படியான உணவு உண்பதை தடுக்கிறது. உங்கள் தினசரி உணவில் புரதத்தின் அளவை அதிகரிப்பது உங்கள் அதிகப்படியான உணவை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

உங்களை நீரேற்றமாக வைத்திருங்கள்

உங்களை நீரேற்றமாக வைத்திருங்கள்

ஆரோக்கியமாக இருக்க உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மிக முக்கியம். நீரேற்றப்பட்ட உடல் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதனால், நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும் மற்றும் தேங்காய் நீர், எலுமிச்சை, காய்கறி சாறு மற்றும் பழச்சாறு போன்ற பானங்களை அருந்துவது உங்கள் உடலை நச்சுத்தன்மையற்றதாக மாற்றுகிறது.

பயிற்சி

பயிற்சி

நீண்ட நேரம் உட்கார்ந்த வாழ்க்கை முறையே உங்கள் ஆயுட்காலத்தை குறைக்கும். ஆம், நீங்கள் படித்தது சரிதான். நீங்கள் விரும்பும் எந்த வடிவத்திலும் ஒரு உடல் செயல்பாட்டைச் செய்ய வேண்டும். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது தினமும் 40-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்.

 தூங்குவது

தூங்குவது

உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க 6-8 மணி நேரம் தூங்குவது முக்கியம். தூக்கம் என்பது உங்கள் உடல் தன்னை சரிசெய்யும் நேரம். ஒரு நல்ல இரவு தூக்கம் அடுத்த நாளுக்கு போதுமான ஆற்றலை அளிக்கிறது. இரவில் சீக்கிரம் தூங்கவும், அதிகாலையில் எழுந்திருக்கவும் முயற்சி செய்யுங்கள். ஏனெனில் இது ஒரு வழக்கத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

அதிக தீவிரம் கொண்ட பயிற்சி செய்யுங்கள்

அதிக தீவிரம் கொண்ட பயிற்சி செய்யுங்கள்

அதிக தீவிரம் கொண்ட இடைவெளி பயிற்சி விரைவான மற்றும் தீவிரமான செயல்பாடுகளை உள்ளடக்கியது. நீங்கள் வொர்க்அவுட்டை முடித்த பிறகும், வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் அதிக கொழுப்பை எரிக்க உதவுகிறது. அதிக எடை கொண்ட ஆண்கள் 12 வாரங்கள் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சியால் பிஎம்ஐ 2 கிலோ மற்றும் தொப்பை கொழுப்பை 17 சதவிகிதம் குறைப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது.

காரமான உணவுகளை உண்ணுங்கள்

காரமான உணவுகளை உண்ணுங்கள்

மிளகாயில் கேப்சைசின் உள்ளது, இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். கேப்சைசின் சிறிய அளவுகளில் உணவுக்கு 10 கலோரிகளை எரிக்க உதவும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, உங்கள் உணவில் மசாலா சேர்ப்பதன் விளைவு அவ்வளவு குறிப்பிடத்தக்கதாக இல்லை. மற்ற வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உத்திகளுடன் இணைந்தால் இது ஒரு சிறிய நன்மைக்கு வழிவகுக்கும்.

சமையல் கொழுப்பை தேங்காய் எண்ணெயுடன் மாற்றவும்

சமையல் கொழுப்பை தேங்காய் எண்ணெயுடன் மாற்றவும்

தேங்காய் எண்ணெய் மற்ற நிறைவுற்ற கொழுப்புகளுடன் ஒப்பிடும்போது நடுத்தர சங்கிலி கொழுப்புகளில் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. நடுத்தர சங்கிலி கொழுப்புகள் வெண்ணெய் போன்ற உணவுகளில் காணப்படும் நீண்ட சங்கிலி கொழுப்புகளை விட உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.

நீண்ட சங்கிலி கொழுப்புகளுடன் ஒப்பிடும்போது நடுத்தர சங்கிலி கொழுப்புகள் வளர்சிதை மாற்றத்தை 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை 4 சதவீதம் மட்டுமே உயர்த்தியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Small changes to make in your daily routine to boost your metabolism in tamil

Here we are explain how to manifest true love in your life.
Story first published: Monday, October 18, 2021, 12:11 [IST]
Desktop Bottom Promotion