For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் உடல் பருமனால் அவதிப்பட போகிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

உடல் பருமன் என்பது கடந்த சில ஆண்டுகளாக தொற்றுநொய் போல எண்ணற்ற மக்களை பாதித்து வருகிறது.

|

உடல் பருமன் என்பது கடந்த சில ஆண்டுகளாக தொற்றுநொய் போல எண்ணற்ற மக்களை பாதித்து வருகிறது. இது முக்கியமாக இரண்டு காரணிகளால் ஏற்படுகிறது, ஒன்று மோசமான உணவுமுறை மற்றொன்று தவறான வாழ்க்கை முறை பழக்கங்கள். உடலை பிட்டாக வைத்திருப்பது, உங்களை கவர்ச்சியாக மாற்றுவது மட்டுமல்லாமல், நாள்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கவும் அவசியம்.

Signs That You Are Becoming Obese

நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் உடல் எடையை ஆரம்பத்தில் இருந்தே கவனித்துக்கொள்வதாகும், அதனால் சிறிது காலம் கழித்து எடையைக் குறைக்க முழு செயல்முறையையும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை. உங்கள் எடை அதிகரிப்பு தீவிரமான ஒன்றாக மாறுகிறது என்பதற்கான சில உறுதியான அறிகுறிகள் உள்ளன, மேலும் அது தீவிரமடைவதற்கு முன்பு அதைக் கட்டுப்படுத்த நீங்கள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான அறிகுறிகள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆடைகள் இறுக்கமடைவது

ஆடைகள் இறுக்கமடைவது

ஓரிரு மாதங்களில் உங்கள் எடையில் சிறிது ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது இயல்பு. பெண்களில், இது அவர்களின் மாதாந்திர மாதவிடாய் சுழற்சிக்கு மிகவும் பொதுவானது, இது முக்கியமாக ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் நீர் தேக்கம் காரணமாக ஏற்படுகிறது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் வாங்கி வந்த ஆடைகள் அல்லது புதிய ஆடைகளில் பொருத்துவது கடினம் என்று உங்களுக்குத் தோன்றினால், அது உங்களுக்கு எச்சரிக்கை அறிகுறியாகும். நீங்கள் பட்டன்களை மூட முடியாது, குறிப்பாக உடலின் நடுத்தர பகுதி அல்லது உங்கள் கைகள் இறுக்கமாக இருக்கும். இந்த அறிகுறிகளை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

வீங்கிய கால்கள் மற்றும் பாதங்கள்

வீங்கிய கால்கள் மற்றும் பாதங்கள்

அதிக எடை உங்கள் கால்கள் மற்றும் பாதங்களில் உள்ள நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்கிறது. எனவே நீங்கள் அதிக எடையுடன் இருக்கும்போது, நரம்புகளால் இரத்தத்தை சரியாக எடுத்துச் செல்ல முடியாமல் கால் மற்றும் விரல்களில் வீக்கம் ஏற்படும். கடுமையான சந்தர்ப்பங்களில், உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களுக்கு சுருள் சிரை நாளங்கள் அல்லது கட்டிகள் கூட ஏற்படலாம். கூடுதலாக, எடை அதிகரிப்பு மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்தும்.

சோர்வு

சோர்வு

நீங்கள் எப்போதுமே சோர்வாக உணர்ந்தால், கடந்த சில மாதங்களில் நீங்கள் எடை அதிகரித்தீர்களா என்று சோதிக்கவும். உடல் எடையை அதிகரிப்பவர்கள் முழு இரவில் தூங்கிய பிறகும் காலையில் சோர்வாக உணர்கிறார்கள். ஏனென்றால் உடல் பருமன் இரவில் சுவாச ஓட்டத்தை சீர்குலைக்கிறது, இது தூக்கத்தில் மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. இந்த மக்கள் இரவில் குறட்டை விடுகிறார்கள் மற்றும் அடிக்கடி எழுந்திருக்கிறார்கள், இது அவர்களின் தூக்கத்தின் தரத்தை பாதிக்கிறது மற்றும் பகல் நேரத்தில் சோர்வாக உணர்கிறது.

மூச்சுத் திணறல்

மூச்சுத் திணறல்

மூச்சுத் திணறல் பல உடல் நிலைகளுடன் தொடர்புடையது, அவற்றில் ஒன்று எடை அதிகரிப்பு. அதிக எடை கொண்டவர்கள் பெரும்பாலும் தங்கள் மார்பைச் சுற்றி நிறைய கொழுப்புகளைக் குவிக்கிறார்கள், இது அவர்களின் இயல்பான சுவாசத்தை தடுக்கிறது. எளிய வீட்டு வேலைகளைச் செய்தபிறகு அவர்களுக்கு மூச்சுத் திணறல் தொடங்குகிறது. நடைபயிற்சி மற்றும் அதிக எடையை தூக்கிய பிறகும் அவர்களுக்கு கடினமாக இருக்கும். கடுமையான சந்தர்ப்பங்களில், அவர்கள் படுக்கும் போது சரியாக மூச்சு விடுவது கூட கடினமாக இருக்கும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் மலச்சிக்கல்

ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் மலச்சிக்கல்

பெண்களில், எடை அதிகரிப்பு அவர்களின் மாதவிடாய் சுழற்சியை சீர்குலைக்கும் ஹார்மோன் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. மாதவிடாய் வலியையும் அதிகரிக்கும். அது தவிர, எடை அதிகரிப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு வழிவகுக்கும். மோசமான தூக்கம் வயிற்றை உணவை ஜீரணிக்க கடினமாக்குகிறது, இதன் விளைவாக, அந்த நபர் காலையில் மலச்சிக்கலை உணர்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs That You Are Becoming Obese

Check out the important signs you are becoming obese.
Story first published: Saturday, September 25, 2021, 14:01 [IST]
Desktop Bottom Promotion