For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பொருளை உங்க உணவில் சேர்த்துக்கிட்டா... உங்க உடல் எடை சீக்கிரமா குறையுமாம்...!

இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த உணவுப் பொருள் கொண்டைக்கடலை எனலாம். ஏனெனில் இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விரை

|

எடை இழப்பு என்பது மிகவும் சாவல் நிறைந்த பணி. பலரும் உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகளை முயற்சி செயகின்றனர். ஆனால், எல்லாரும் இதனால் பலன் அடைவதில்லை. உடல் எடையை குறைக்க முக்கியமானது உணவு முறை. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது உடல் எடைக்கும் உடலுக்கும் நல்லது. நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க எளிதான வழியை தேடுகிறீர்களா? ஆம் எனில், உங்கள் தினசரி உணவில் வறுத்த கொண்டைக்கடலையைச் சேர்க்கத் தொடங்கி மாற்றத்தைக் காணுங்கள். இது ஆரோக்கியமான சிற்றுண்டியாகும்.

Roasted Chana For Weight Loss: How it helps to lose extra weight in Tamil

இது உங்கள் எடை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், செரிமான அமைப்பையும் மேம்படுத்துகிறது. அதிகளவு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளடக்கம் இதை ஒரு சிறந்த சிற்றுண்டி பொருளாக மாற்றுகிறது. இது எளிதாக எடுத்துச் செல்லக்கூடியது மற்றும் எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். எடை இழப்புக்கு கொண்டைக்கடலை எவ்வாறு உதவுகிறது என்பதை தெரிந்துகொள்ள இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை குறைப்புக்கு உதவுகிறது

எடை குறைப்புக்கு உதவுகிறது

இது குறைந்த கலோரி சிற்றுண்டியாகும். கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியை கட்டுப்படுத்துவதோடு, உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும். மேலும், நீண்ட நேரத்திற்கு பசி உணர்வை தணிப்பதால், இது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே எடையைக் குறைக்க நினைப்போர் இதனை தங்களின் உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.

MOST READ: 'இந்த' உணவுகளோடு தயிரை சேர்த்து சாப்பிட்டா... உங்க உடலில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

புரத அதிகமாக உள்ளது

புரத அதிகமாக உள்ளது

நிபுணர்களின் கூற்றுப்படி, வறுத்த சானாவில் புரதம் அதிகம் நிறைந்துள்ளது, இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருப்பதால், மறைமுகமாக இது எடையைக் குறைக்க உதவுகிறது.

 நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. மேலும், நார்ச்சத்து இதில் அதிகம் நிறைந்துள்ளதால், இது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில், இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது எலும்பு ஆரோக்கியத்திற்கும் நல்லது. இரத்த அழுத்தத்தை உறுதிப்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது.

MOST READ: அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு! கொரோனாவின் 'இந்த' அறிகுறிகள் உங்களுக்கு நீண்ட காலத்திற்கு இருக்குமாம்!

இரத்த சோகை

இரத்த சோகை

இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த உணவுப் பொருள் கொண்டைக்கடலை எனலாம். ஏனெனில் இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வைத் தடுக்கும்

ஹார்மோன் ஏற்றத்தாழ்வைத் தடுக்கும்

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு உள்ள பெண்கள், கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், அந்த பிரச்சனை குணமாகும். மேலும் இது பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் உதவுகிறது.

சனா உங்களுக்கு எவ்வளவு நல்லது?

சனா உங்களுக்கு எவ்வளவு நல்லது?

நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளில் நீங்கள் சாப்பிடக்கூடிய சானாவின் சிறந்த அளவு 100 கிராம். பயனுள்ள செரிமானத்திற்கு சாப்பிட்ட பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் வரை தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Roasted Chana For Weight Loss: How it helps to lose extra weight in Tamil

Roasted Chana For Weight Loss: Want to lose weight effectively? A healthy snack that can easily be added in your weight loss diet is roasted chana.
Desktop Bottom Promotion