For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரி விரதத்தின் போது உடல் எடையைக் குறைப்பதற்கான சில டிப்ஸ்..!

நவராத்திாி விழாவில் மக்கள் விரதம் இருப்பா். நவராத்திாி விரதத்தின் போது ஒரு முறையான உணவு பழக்கத்தை கடைப்பிடித்தால், அது நமது உடல் எடையை கணிசமாக குறைக்கும்.

|

நவராத்திாி விழா இந்தியா முழுவதும் வெகு விமாிசையாக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திாி விழா செப்டம்பா் 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஒன்பது நாட்கள் இந்த நவராத்திாி விழா கொண்டாடப்படும். இந்த ஒன்பது நாட்களும் மக்கள் துர்கை அம்மனை மிகவும் பக்தியுடன் வழிபடுவா்.

இந்த நவராத்திாி விழாவில் மக்கள் விரதம் இருப்பா். அந்த விரதத்தின் பின்னணியில் அறிவியல் பூா்வமான காரணங்கள் இருக்கின்றன. நவராத்திாி விரதம் நமது உடலில் உள்ள நச்சுகளை அகற்றுகிறது மற்றும் நமது உடலை தூய்மைப்படுத்துகிறது.

Navratri 2021: Tips To Lose Weight During Navratri Fast

பொதுவாக நவராத்திாி விரதத்தின் போது மக்கள் குடலை சுத்தம் செய்யக்கூடிய தானியங்களையும் மற்றும் எளிதாக சொிக்கக்கூடிய உணவுகளையும் உண்கின்றனா். அதிலும் குறிப்பாக ஒரு சிலா் நவராத்திாி விரதத்தின் போது தண்ணீா் மற்றும் பழச்சாறுகளை மட்டுமே அருந்துகின்றனா்.

இந்த நோன்பின் போது எளிதாக சொிக்கக்கூடிய மற்றும் சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். ஆகவே நவராத்திாி விரதத்தின் போது ஒரு முறையான உணவு பழக்கத்தை கடைப்பிடித்தால், அது நமது உடல் எடையை கணிசமாக குறைக்கும். ஆகவே நமது உடல் எடையைக் குறைக்க இந்த நவராத்திாி நோன்பு காலத்தில் எப்படிப்பட்ட உணவுகளை உண்ணலாம் என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் சோ்த்துக் கொள்ளுதல்

1. உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் சோ்த்துக் கொள்ளுதல்

விரதம் என்றால் பூாி மற்றும் உருளைக்கிழங்குகளை மட்டும் உண்ண வேண்டும் என்று புாிந்து கொள்ளக்கூடாது. மாறாக பச்சைக் காய்கறிகளையும் நமது உணவில் அதிகம் சோ்த்துக் கொள்ள வேண்டும். இவை நமக்கு ஊட்டச்சத்துகளை வழங்குவதோடு, நமது வயிற்றை நீண்ட நேரம் பசி இல்லாமல் காக்கும். பச்சைக் காய்கறிகளோடு வீட்டில் சமைக்கப்படும் சூப்புகள் மற்றும் சாலட்டுகளையும் அதிகமாக அருந்தலாம்.

2. குறைவான அளவு உணவை உண்ணுதல்

2. குறைவான அளவு உணவை உண்ணுதல்

தொடாந்து சீரான இடைவெளியில் குறைந்த அளவிலான உணவை உண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும் குறைந்த அளவிலான உணவுகள் அதிகமான சக்தியை அளிப்பதோடு, நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்குகின்றன.

3. கொழுப்பு குறைந்த உணவுகளை உண்ணுதல்

3. கொழுப்பு குறைந்த உணவுகளை உண்ணுதல்

நவராத்திாி நோன்பு காலத்தில் ஒரு முறை அல்லது இருமுறை குட்டு பூாியை உண்ணலாம். ஆனால் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிா்க்க வேண்டும். ஆகவே க்ரீம் பால் அல்லது பாலாடைக் கட்டிகளை உண்பதற்கு பதிலாக பழ சாலட்டுகளை உண்ணலாம்.

4. உடலை நீா்ச்சத்துடன் வைத்திருத்தல்

4. உடலை நீா்ச்சத்துடன் வைத்திருத்தல்

நவராத்திாி நோன்பின் போது, நமது உடலை நீா்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும். நீரானது நமது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதற்கு பொிதும் உதவி செய்கிறது. நமது உடலானது நீா்ச்சத்துடன் இருந்தால் அது நமது உடல் எடையைக் குறைப்பதற்கு உதவி செய்யும். மேலும் நமது உடலில் உள்ள நச்சுக்களை நன்றாக வெளியேற்ற வேண்டும் என்றால், வெந்நீரை குடிப்பது நல்லது.

5. உடற்பயிற்சிகளைச் செய்தல்

5. உடற்பயிற்சிகளைச் செய்தல்

நோன்பு காலத்தில் உடற்பயிற்சிகளைச் செய்யக்கூடாது என்று புாிந்து கொள்ளக்கூடாது. நமக்கு மந்தமாகத் தோன்றினால், சாதாரண உடற்பயிற்சிகளைச் செய்யலாம். அவை கொழுப்பைக் குறைப்பதோடு, இரத்த ஓட்டத்தையும் அதிகாிக்கும். மேலும் நமது வளா்சிதை மாற்றத்தை அதிகாித்து, நமது உடல் எடையையும் குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri 2022: Tips To Lose Weight During Navratri Fast

In this article, we shared some tips to lose weight during Navratri fast. Take a look...
Desktop Bottom Promotion