For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

3 வாரத்தில் 7 கிலோ எடையைக் குறைத்த கிம் கர்தாஷியன்.. இதுக்கு எந்த டயட்டை ஃபாலோ பண்ணாங்க தெரியுமா?

மெட் கலாவிற்கு மெர்லின் மன்றோ உடையை அணிவதற்காக கிம் கர்தாஷியன் 3 வாரங்களில் 7 கிலோ எடையைக் குறைத்ததாக கூறப்படுகிறது.

|

உலகளவில் தனது அழகான உடலமைப்பாலும், கவர்ச்சிகரமான தோற்றத்தாலும் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட கவர்ச்சி கடல் என்றால் அது கிம் கர்தாஷியன் தான். 4 குழந்தைகளுக்கு தாயான பின்னரும் கிம் தனது உடலமைப்பை அழகாக பராமரித்து வருகிறார். ஃபேஷனுக்காக எந்த உயரத்துக்கும் செல்லக்கூடியவர் என்றால் அது கிம் கர்தாஷியனாகத் தான் இருக்கும். 2022 ஆம் ஆண்டின் மெட் கலா நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் பல அழகான மற்றும் கவர்ச்சிகரமான உடைகளில் வந்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள்.

Kim Kardashian Lost 7 Kilos In 3 Weeks

அப்படி தான் கிம் கர்தாஷியன் மெட் கலாவிற்கு வரும் போது 1962 ஆம் ஆண்டு மர்லின் மன்றோ முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடிக்கு 'ஹேப்பி பர்த்டே' பாடுவதற்காக அணிந்து வந்த உடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடையானது 6,000 க்கும் மேற்பட்ட கையால் தைக்கப்பட்ட படிகங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அற்புதமான ஸ்கின்டைட் கவுன் ஆகும். இந்த உடைக்கு கிம் பிளாட்டினம் பொன்னிற முடி மற்றும் ஒரு வெள்ளை நிற மென்மையான ஷ்ரக் அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடைக்காக எடையைக் குறைத்த கிம்

உடைக்காக எடையைக் குறைத்த கிம்

கிம் கர்தாஷியன் இந்த மெர்லின் மன்றோ உடையை அணிவதற்கான ஒரு கடுமையான டயட்டை மேற்கொள்ள வேண்டியிருந்ததாம். அறிக்கைகளின் படி, மெட் கலாவிற்கு மெர்லின் மன்றோ உடையை அணிவதற்காக கிம் கர்தாஷியன் 3 வாரங்களில் 7 கிலோ எடையைக் குறைத்ததாக கூறப்படுகிறது. கிம் இப்படி ஒரு உடையை அணிவதற்காக குறுகிய காலத்தில் எடையைக் குறைத்திருப்பது என்பது முதல் முறை அல்ல.

கிம் மேற்கொண்ட டயட் என்ன?

கிம் மேற்கொண்ட டயட் என்ன?

41 வயதான கிம், அழகான உடல் வளைவுகளுக்காக நன்கு அறியப்பட்டவர். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இன்டர்வியூ ஒன்றில், அவர் தனது இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர் அட்கின்ஸ் டயட்டை பின்பற்றியதாக கூறினார். அதுவும் கடுமையான அட்கின்ஸ் டயட்டை மேற்கொண்டதாக கூறினார். அறிக்கைகளின் படி, இவர் அட்கின்ஸ் 40 திட்டத்தைப் பின்பற்றி சுமார் 70 பவுண்ட்டுகள் உடல் எடையைக் குறைத்துள்ளார்.

அட்கின்ஸ் டயட் என்பது என்ன?

அட்கின்ஸ் டயட் என்பது என்ன?

அட்கின்ஸ் டயட் என்பது கார்டியலஜிஸ்ட் ராபர்ட் சி அட்கின்ஸ் என்பவரால் 1960-களில் ட்ரெண்டில் கொண்டு வரப்பட்ட குறைந்த கார்ப் உணவுமுறை ஆகும். டாக்டர். அட்கின்ஸ் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கணிசமாகக் குறைக்க இந்த அட்கின்ஸ் டயட்டை வடிவமைத்தார். அட்கின்ஸ் டயட்டில் நான்கு அடிப்படைக் கொள்கைகள் உள்ளன. அவை எடையைக் குறைப்பது, எடை இழப்பை பராமரிப்பது, நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மற்றும் நோய்கள் வராத அளவு உடலில் நல்ல பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவது.

டாக்டர் அட்கின்ஸின் கருத்துப்படி, ஒருவரது உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அல்லது கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை, உயர் ஃப்ருக்டோஸ் கார்ன் சிரப் மற்றும் மாவு ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது ஆகும்.

அட்கின்ஸ் டயட் எப்படி செயல்படுகிறது?

அட்கின்ஸ் டயட் எப்படி செயல்படுகிறது?

அட்கின்ஸ் டயட்டை ஒருவர் பின்பற்றும் போது, அவர்களின் மெட்டபாலிசம் குளுக்கோஸ் அல்லது சர்க்கரையை எரிபொருளாக பயன்படுத்தாமல் உடலில் தேங்கியுள்ள கொழுப்பை எரிபொருளாக பயன்படுத்துகிறது. இது தான் கெட்டோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. உடலில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருக்கும் போது, இன்சுலின் அளவும் குறைவாக இருக்கும். இந்நிலையில் கெட்டோசிஸ் ஏற்படுகிறது. சுருக்கமாக கூற வேண்டுமானால், உடலில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருக்கும் போது, உடல் கொழுப்புக்களை ஆற்றலுக்காக பயன்படுத்துகிறது. இதன் விளைவாக உடலில் உள்ள கொழுப்புக்கள் குறைந்து உடல் எடை குறையும்.

அட்கின்ஸ் 40 திட்டம்

அட்கின்ஸ் 40 திட்டம்

இந்த வகை உணவுத் திட்டத்தில் ஒரு நாளைக்கு 20 கிராமிற்கு பதிலாக 40 கிராம் கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, ஒரு நாளுக்கான டயட்

காலை உணவு: குறைந்த கார்போஹைட்ரேட்டுகளுடன் ஒரு சீஸ் ஆம்லெட்

மதியம்: நட்ஸ் உடன் கூடிய சிக்கன் சாலட் மற்றும் சிறிது செர்ரி தக்காளி மற்றும் வெள்ளரிக்காய்

இரவு: குறைந்தது ஒரு கப் காய்கறிகளுடன் மீட்பால்ஸ், ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

ஸ்நாக்ஸ்: வேக வைத்த ஒரு முட்டை, க்ரீக் யோகர்ட் அல்லது நட்ஸ்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

* சோளம், உருளைக்கிழங்கு போன்ற ஸ்டார்ச் காய்கறிகள்

* அன்னாசி, மாம்பழம், பப்பாளி மற்றும் வாழைப்பழம் போன்ற சர்க்கரை அதிகம் நிறைந்த பழங்கள்

* குக்கீஸ், மிட்டாய், கேட் மற்றும் குளிர்பானங்கள்

* சுத்திகரிக்கப்பட்ட அல்லது சிம்பிள் கார்போஹைட்ரேட்டுகள் நிறந்த உணவுகளான வெள்ளை பிரட், பாஸ்தா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kim Kardashian Lost 7 Kilos In 3 Weeks

In order to fit in the Marilyn Monroe dress, Kim had to go through a rigorous ritual. Reportedly, she lost 7 kilos in three weeks for her Met Gala appearance in the dress.
Desktop Bottom Promotion