For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு மாதத்துல நீங்க இவ்வளவு உடல் எடையை குறைப்பதுதான் நல்லதாம்...அதுக்கு மேல குறைக்கக்கூடாதாம்!

நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு வாரத்தில் சுமார் 0.5 கிலோ எடையைக் குறைப்பது சிறந்தது, இது ஒரு மாதத்தில் இரண்டு கிலோவாக இருக்கும். அவ்வாறு செய்ய, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுடன் கலோரி பற்றாக்குறை உணவை உட்கொ

|

எடை இழப்பு என்பது சாதாரணமான விஷயம் இல்லை. ஒரு நிலையான வழியில் எடை இழக்க ஊக்கம், பொறுமை மற்றும் நேரம் தேவைப்படுகிறது. இது எளிதான காரியம் அல்ல. அதனால்தான் பலர் விரைவாக உடல் எடையை குறைக்க ஃபேஷன் டயட்களை நாடுகின்றனர். ஆனால் வேகமாக இழக்கப்படும் எடை நிலையானது அல்ல, அவர்கள் பின்பற்றும் உணவை நிறுத்தியவுடன் மீண்டும் உடல் எடை அதிகரிக்கும். உங்கள் உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க வேண்டும். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு ஆகியவற்றால் உங்கள் உடல் எடையை குறைக்க முடியும்.

How much weight can you lose safely in a month?

விரைவான எடை இழப்பு ஆரோக்கியமானதல்ல. இது பல்வேறு சுகாதார நிலைகளின் ஆபத்தை உங்களுக்கு ஏற்படுத்தலாம். ஒரு மாதத்தில் நீங்கள் எவ்வளவு எடை இழப்பது உங்களுக்கு பாதுகாப்பானது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் எடையை நிர்வகிப்பது

உடல் எடையை நிர்வகிப்பது

முதன் முதலில், உங்கள் உடல் எடை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் குறிப்பான் அல்ல. ஒருவர் தங்கள் சிறந்த எடையை முயற்சி செய்து பராமரிக்க வேண்டும் என்றாலும், அவர்களால் அதைச் செய்ய முடியாவிட்டால், அவர்கள் ஆரோக்கியமற்றவர்கள் என்று அர்த்தமல்ல. படிப்படியாக உடல் எடையை குறைப்பது நீண்ட காலத்திற்கு உடல் எடையை சரியாக நிர்வகிக்க சிறந்த வழியாகும்.

MOST READ: இந்த சூப்பர்ஃபுட்டை நீங்க அதிகமா சாப்பிடும்போது உங்க ஆரோக்கியத்தை அது எப்படி பாதிக்கும் தெரியுமா?

ஒரு மாதத்தில் எவ்வளவு எடை குறைக்க முடியும்?

ஒரு மாதத்தில் எவ்வளவு எடை குறைக்க முடியும்?

நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு வாரத்தில் சுமார் 0.5 கிலோ எடையைக் குறைப்பது சிறந்தது, இது ஒரு மாதத்தில் இரண்டு கிலோவாக இருக்கும். அவ்வாறு செய்ய, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுடன் கலோரி பற்றாக்குறை உணவை உட்கொள்ளுங்கள். ஒரு மாதத்தில் 1.5 முதல் 2.5 கிலோ உடல் எடையை குறைப்பது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

சிறுநீரகத்தில் அழுத்தம்

சிறுநீரகத்தில் அழுத்தம்

இந்த எடையை விட அதிகமாக இழந்தால் உங்கள் உடல் செயல்பாடுகள் மற்றும் உள் உறுப்புகள், சிறுநீரகங்கள் மீது அழுத்தம் கொடுக்கிறீர்கள். உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது மக்கள் பொதுவாக அதிக புரத உணவை சாப்பிடுகிறார்கள், இது சிறுநீரகங்களுக்கு இன்னும் அதிக அழுத்தத்தை அளிக்கிறது.

MOST READ: பெண்களே! இந்த அறிகுறிகள் இருந்தா அத சாதாரணமா நினைக்காதீங்க...அது மாரடைப்பை ஏற்படுத்துமாம்...!

அதிகமாக எடை குறைந்தால் என்ன ஆகும்?

அதிகமாக எடை குறைந்தால் என்ன ஆகும்?

ஒரு மாதத்தில் பரிந்துரைக்கப்பட்ட கிலோவை விட அதிகமாக எடை இழப்பது ஆரோக்கியமானது இல்லை.

நீங்கள் ஒரு மாதத்தில் 5 கிலோ அல்லது அதற்கும் அதிகமாக இழந்தால், அது உங்களை பலவீனமாகவும், சோர்வாகவும், சோம்பலாகவும் உணர வைக்கும். இது உங்களுக்கு நடந்தால், நீங்கள் உங்கள் உணவை மறுபரிசீலனை செய்து உதவிக்காக ஒரு நிபுணரை அணுக வேண்டும்.

இறுதிகுறிப்பு

இறுதிகுறிப்பு

நீங்கள் ஆரோக்கியமான வழியில் எடை இழக்கும்போது, உங்கள் ஆற்றல் அளவுகள் போதுமானதாக இருக்க வேண்டும். அதேநேரத்தில் நீங்கள் உள்ளிருந்து ஆரோக்கியமாக உணர வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How much weight can you lose safely in a month?

Here we are talking about the How much weight can you lose safely in a month?
Desktop Bottom Promotion