For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரிய பெண்கள் உலகின் அழகான மற்றும் ஒல்லியான பெண்களாக இருப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

உலக புகழ்பெற்ற கொரியத் திரைப்படங்கள், இசை வீடியோக்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என அனைத்திலும் அனைவரும் கச்சிதமான உடலமைப்புடன் ஆரோக்கியமாக இருப்பதைக் காணலாம்.

|

உலக புகழ்பெற்ற கொரியத் திரைப்படங்கள், இசை வீடியோக்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என அனைத்திலும் அனைவரும் கச்சிதமான உடலமைப்புடன் ஆரோக்கியமாக இருப்பதைக் காணலாம். நடிகர்கள் இன்றி சாதாரண மக்கள் கூட அங்கு கச்சிதமான உடலமைப்புடன்தான் இருக்கின்றனர். கொரிய தெருக்களில் நீங்கள் பார்த்தால் கிட்டதட்ட பெரும்பாலானோர் ஒல்லியாகவும், கச்சிதமான உடலுடனும்தான் இருப்பார்கள்.

How Korean Women Stay Fit and Healthy

அது இளைஞர்களாக இருந்தாலும் சரி, நடுத்தர வயது ஆண்/பெண்ணாக இருந்தாலும் சரி, வயதான தாத்தா/பாட்டியாக இருந்தாலும் சரி அனைவரும் சிறந்த உடலமைப்புடன் இருக்கிறார்கள். குறிப்பாக கொரிய பெண்கள் கண்கவர் பொருத்தம் கொண்ட ஆளுமையைக் கொண்டுள்ளனர், இது உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் ஆர்வத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் அவர்களின் உணவுமுறைதான், அப்படி அவர்கள் என்ன ரகசிய உணவுமுறையை பின்பற்றுகிறாரார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீரான டயட்

சீரான டயட்

ஒரு குறிப்பிட்ட உணவுப் பொருளைக் குறைக்கும் டயட் முறைகளை போலல்லாமல், கொரிய உணவு சமநிலையைப் பற்றியது. கொரிய பெண்கள் சாப்பிடாதது எதுவுமில்லை. புரதம் தொடங்கி கார்ப்ஸ் முதல் கொழுப்புகள் வரை, ஆரோக்கியமான கொரிய உணவு அனைத்தையும் அவர்கள் சாப்பிடுகிறார்கள், ஆனால் நன்கு சீரான வடிவத்தில் சாப்பிடுகிறார்கள். தவிர, கொரியர்கள் உணவின் அளவுகளில் மிகவும் கட்டுப்பாடானவர்கள். அவர்கள் அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்த்து, அன்றாட வாழ்க்கையில் உடல் செயல்பாடுகளையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.

காய்கறிகளே பிரதானம்

காய்கறிகளே பிரதானம்

நீங்கள் எப்போதாவது ஒரு பாரம்பரிய கொரிய உணவை சாப்பிட நேர்ந்தால், மேஜையில் ஒரு பரந்த அளவிலான காய்கறிகளை நீங்கள் முதலில் பார்க்கலாம். கொரிய மக்கள் தங்கள் உணவில் காய்கறிகளை அதிகம் விரும்புகிறார்கள், இது அவர்களின் மெலிந்த, ஆரோக்கியமான உடலுக்கு பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பெரும்பாலான காய்கறிகள் நார்ச்சத்துள்ளவை, ஆரோக்கியமானவை மற்றும் குறைந்த கலோரி கொண்டவை என்பதால், இது எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. காய்கறிகளில் உள்ள நார் சத்துணர்வை உணர உதவுகிறது, மற்ற அதிக கலோரி உணவுகளைத் தடுக்கிறது.

MOST READ: இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் அதிர்ஷ்டமே இருக்காதாம்... இவங்க துரதிர்ஷ்டம் கூடவே பிறந்தவங்களாம்...!

புளித்த உணவுகள் இல்லாமல் உணவு இல்லை

புளித்த உணவுகள் இல்லாமல் உணவு இல்லை

கொரியப் பெண்களைப் பொறுத்த வரையில், அவர்களுடைய எல்லா உணவுகளும் ஒரு பக்க உணவோடு சேர்க்கப்படுகின்றன, இது பொதுவாக புளித்த உணவுகளின் தொடர்ச்சியாக இருக்கிறது. இத்தகைய உணவுகள் குடலுக்கு சிறந்தது மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், எடை இழப்பிற்கும் உதவுகிறது.

துரித உணவை விட வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு விரும்பப்படுகிறது

துரித உணவை விட வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு விரும்பப்படுகிறது

ஒரு கொரியப் பெண்ணின் உடல் பொருத்தமாக இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று அவர்கள் செய்யும் உணவுத் தேர்வுகள். நீங்கள் சில கிலோ எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை விட சிறந்தது எதுவுமில்லை. பதப்படுத்தப்பட்ட, ஆரோக்கியமற்ற உணவுகள், துரித உணவுகளை சாப்பிடுவது குறிப்பாக உங்கள் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நாள்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கும். கொரியப் பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் வெளியில் சாப்பிடுவதை விட, வீட்டிலேயே சாப்பிடுவார்கள். தங்கள் உடலுக்கு நல்ல உணவுகளை நன்கு அறிந்திருப்பதால், அவர்கள் அதற்கேற்ப ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்கிறார்கள்.

கடல் உணவை அதிகம் சாப்பிடுகிறார்கள்

கடல் உணவை அதிகம் சாப்பிடுகிறார்கள்

கடல் உணவுகள் கொரியாவின் முக்கிய உணவுகளில் ஒன்றாகும். உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறப்பான கொழுப்பு நிறைந்த மீன்களைத் தவிர, கடற்பாசி ஒரு பொதுவான கொரிய உணவுப் பொருளாகும், அவை வழக்கமான உணவிலிருந்து சூப் வரை அனைத்திலும் சேர்க்கப்படுகின்றன. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த கடற்பாசியில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு சிறந்தது மற்றும் நீண்ட காலத்திற்கு உங்களை முழுமையாக உணர வைக்கிறது.

MOST READ: இந்த வகை பெண்களை திருமணம் செய்து கொள்ள ஆண்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்களாம்.... ஏன் தெரியுமா?

எல்லா இடங்களுக்கும் நடந்து சென்று சுறுசுறுப்பான வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துகிறார்கள்

எல்லா இடங்களுக்கும் நடந்து சென்று சுறுசுறுப்பான வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துகிறார்கள்

பெரும்பாலான கொரியர்கள் நடப்பதை விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் இலக்கை அடைய பொதுப் போக்குவரத்தை விட, தங்கள் கால்களைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வழிநடத்துவதே பெரும்பாலான கொரிய பெண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது மற்றும் அவர்களின் எடையை கட்டுக்குள் வைத்திருக்கிறது. நாம் அனைவரும் அறிந்தபடி, உடல் செயல்பாடு மிகவும் முக்கியமானது, குறிப்பாக நமது உடல் எடை மற்றும் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Korean Women Stay Fit and Healthy

Read to know about the secret behind why Korean women don't gain weight.
Desktop Bottom Promotion