For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையைக் குறைக்க உதவும் ஹாலிவுட் டயட் பற்றி தெரியுமா?

மிகவும் பிரபலமான அவசியம் சொல்லப்பட வேண்டிய ஒரு டயட் தான் கிரேப்ஃபுரூட் டயட். இந்த கிரேப்ஃபுரூட் டயட்டானது சுமார் 1930-களில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த எடை குறைப்பு டயட்டை ஹாலிவுட் டயட் அல்

|

உடல் எடையைக் குறைக்க ஏராளமான டயட் முறைகள் உள்ளன. அதில் சிலவகை டயட்டுகளில் உட்கொள்ளும் கலோரிகள், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் அளவுகளில் கட்டுப்பாடுகள் இருக்கும். மற்றவை பசி உணர்வைக் குறைக்கும் படி வேலை செய்யும். அப்படி உடல் எடையைக் குறைக்கும் சில டயட்டுகளாவன வேகன் டயட், கீட்டோஜெனிக் டயட், பேலியோ டயட், அட்கின்ஸ் டயட் போன்றவை.

Grapefruit Diet For Weight Loss Meal Plan Benefits And Risks

ஆனால், அதில் மிகவும் பிரபலமான அவசியம் சொல்லப்பட வேண்டிய ஒரு டயட் தான் கிரேப்ஃபுரூட் டயட். இந்த கிரேப்ஃபுரூட் டயட்டானது சுமார் 1930-களில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த எடை குறைப்பு டயட்டை ஹாலிவுட் டயட் அல்லது மயோ டயட் என்றும் அழைப்பர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிரேப்ஃபுரூட் டயட் என்றால் என்ன?

கிரேப்ஃபுரூட் டயட் என்றால் என்ன?

கிரேப்ஃபுரூட் டயட் என்பது குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் மிதமான புரோட்டீன் கொண்ட உணவு முறையாகும். இந்த டயட்டில் கிரேப்ஃபுரூட்டுடன் இறைச்சி, முட்டைகள் மற்றும் இதர புரோட்டீன் உணவுகள் மற்றும் அதிகப்படியான டயட்டரி கொழுப்பு உணவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

பொதுவாக கிரேப்ஃபுரூட் டயட் 10 அல்லது 12 நாட்கள் பின்பற்றப்படுகிறது. அதன் பிறகு 2 நாட்கள் ஓய்வு கொடுக்க வேண்டும். இது மிகவும் கடுமையான டயட் திட்டத்தைக் கொண்டது. இந்த டயட்டில் ஒரு நாளைக்கு 1,000-த்திற்கும் குறைவான கலோரிகளை மட்டுமே உட்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

கிரேப்ஃபுரூட் டயட் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் உட்கொள்வதை கட்டுப்படுத்துகிறது.

கிரேப்ஃபுரூட் டயட் திட்டம் உடல் எடையைக் குறைக்க எப்படி செயல்படுகிறது?

கிரேப்ஃபுரூட் டயட் திட்டம் உடல் எடையைக் குறைக்க எப்படி செயல்படுகிறது?

கிரேப்ஃபுரூட் டயட் ஒரு குறைவான கலோரி டயட். இது உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு உதவும். ஏனெனில் கிரேப்ஃபுரூட்டில் கலோரிகள் குறைவு மற்றும் பாலூட்டிகளின் உயிரணுக்களில் AMP- அக்டிவேட்டட் புரோட்டினான கைனேஸ் எனப்படும் நொதி கிரேப்ஃபுரூட்டில் காணப்படும் நூட்கடோன் என்னும் கரிம பொருளால் செயல்படுத்தப்படுகிறது.

எப்போது ஒருவரது உடலில் கைனேஸ் செயல்படுத்தப்படுகிறதோ, அப்போது உடலில் ஆற்றல் உற்பத்தி தூண்டப்படுவதோடு, மெட்டபாலிசம் மேம்படவும் உதவும். இதன் விளைவாக உடல் எடை குறைவது ஊக்குவிக்கப்படுவதுடன், உடல் பருமன் அபாயமும் தடுக்கப்படுகிறது.

கிரேப்ஃபுரூட் டயட்டின் நன்மைகள்

கிரேப்ஃபுரூட் டயட்டின் நன்மைகள்

நன்மை #1

கிரேப்ஃபுரூட் டயட்டினால் கிடைக்கும் ஒரு நன்மை என்னவென்றால், சில நாட்களிலேயே நேர்மறையான முடிவுகளைப் பெறுவது தான். ஆய்வு ஒன்றில், உடல் பருமன் கொண்ட 91 நோயாளிகளுக்கு நற்பதமான கிரேப்ஃபுரூட் அல்லது கிரேப்ஃபுரூட் ஜூஸைக் கொடுத்ததில், கணிசமான அளவு எடை குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

நன்மை #2

நன்மை #2

கிரேப்ஃபுரூட் டயட் உடல் எடையைக் குறைப்பது மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதில் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவது, சர்க்கரை நோயைத் தடுப்பது, இதய ஆரோக்கியத்தை ஊக்குவிப்பது மற்றும் சிறுநீரக கற்களின் அபாயத்தைக் குறைப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

கிரேப்ஃபுரூட் டயட்டின் அபாயங்கள்

கிரேப்ஃபுரூட் டயட்டின் அபாயங்கள்

கிரேப்ஃபுரூட் டயட்டின் ஒரு அபாயம் என்னவென்றால், இது உயர் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்ப்பது தான். உணவு மற்றும் மருந்து நிறுவனத்தின் கூற்றுப்படி, கிரேப்ஃபுரூட் குறிப்பிட்ட மருந்துகளான ஸ்டாடின், நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒடுக்கும் மருந்துகள், இதயத் துடிப்பிற்கான மருந்துகள் மற்றும் கால்சியம் சேனல் தடுப்பான்கள் போன்ற சில மருந்துகளின் செயல்பாட்டில் இடையூறை உண்டாக்கும்.

கிரேப்ஃபுரூட் டயட் திட்டம்

கிரேப்ஃபுரூட் டயட் திட்டம்

காலை உணவு - இரண்டு வேக வைத்த முட்டை, 2 பேகன் துண்டுகள் மற்றும் 1/2 கிரேப்ஃபுரூட் அல்லது கிரேப்ஃபுரூட் ஜூஸ்.

மதிய உணவு - சாலட், இறைச்சி மற்றும் 1/2 கிரேப்ஃபுரூட் அல்லது கிரேப்ஃபுரூட் ஜூஸ்.

இரவு உணவு - சிவப்பு அல்லது பச்சை காய்கறிகள் (ஸ்டார்ச் காய்கறிகளான சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சோளம், பீன்ஸ் மற்றும் பட்டாணி கூடாது) சாலட், இறைச்சி அல்லது மீன் மற்றும் 1/2 கிரேப்ஃபுரூட் அல்லது கிரேப்ஃபுரூட் ஜூஸ்.

இரவு நேர ஸ்நாக்ஸ் - ஒரு டம்ளர் கொழுப்பு குறைவான பால்.

குறிப்பு : கிரேப்ஃபுரூட் ஜூஸில் சர்க்கரை ஏதும் சேர்க்கக்கூடாது.

முடிவு

முடிவு

கிரேப்ஃபுரூட் டயட் எடையைக் குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறப்பான ஒரு டயட். இந்த டயட்டை மேற்கொள்வதால் கட்டாயம் எதிர்பார்த்த அளவு உடல் எடையைக் குறைக்க முடியும். இருப்பினும், இதில் அபாயங்கள் இருப்பதால், இந்த டயட்டை நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து பின்பற்றாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Grapefruit Diet For Weight Loss Meal Plan Benefits And Risks

The grapefruit diet is a low carbohydrate and moderate protein diet that encourages you to consume meals which include grapefruits paired with meat, eggs and other protein-rich foods and foods high in dietary fat.
Story first published: Monday, December 16, 2019, 13:41 [IST]
Desktop Bottom Promotion