For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கலோரி அளவை குறைத்து உடல் எடையை வேகமாக குறைக்க இந்த 5 பழங்கள் போதுமாம் தெரியுமா?

ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் இரும்புசத்து அதிகளவில் உள்ளது. இது எடை குறைப்புக்கு நன்மைகளை அளிக்கிறது. ஆப்பிள் பழம் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி உங்கள் தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகிறது. எடை இழப்புக்கு ஆப்ப

|

இன்றைய சூழலில் உடல் செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவு முறையாலும், பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். தற்போது, தங்களது அன்றாட செயல்களைக் கூட செய்ய முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, மக்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு எந்த ஒரு கஷ்டமான முயற்சிகளை மேற்கொள்ளவும் தயங்குவதில்லை. உடல் எடையை ஸ்மார்ட்டான வழியில் குறைக்க முயற்சிப்பதன் மூலம், உடல் எடை குறைவதோடு, உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

Fruits that can help you burn calories

உடல் எடையைக் குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன. அதில், ஒன்று சரியான பழங்களைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருவதன் மூலம், உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்கலாம். மேலும் பழங்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருப்பதால், இவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்கலாம். உங்கள் கலோரிகளை எரிக்க உதவும் பழங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் இரும்புசத்து அதிகளவில் உள்ளது. இது எடை குறைப்புக்கு நன்மைகளை அளிக்கிறது. ஆப்பிள் பழம் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி உங்கள் தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகிறது. எடை இழப்புக்கு ஆப்பிள் சிறந்தது.

MOST READ: உங்க உடலில் இயற்கையாகவே ஆக்சிஜன் அளவு அதிகரிக்க நீங்க 'இத' செஞ்சா போதுமாம்...!

பழங்கள் சாப்பிடுவது

பழங்கள் சாப்பிடுவது

ஆரோக்கியமான உணவின் முக்கியமான ஒரு பகுதியாக பழங்கள் உள்ளன. இது உங்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்குகிறது. பழங்கள் உங்கள் எடை இழப்பை ஊக்குவிக்க உதவுகிறது.

கலோரி அளவு

கலோரி அளவு

குறைந்த கலோரி மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள் சாப்பிடுவது நிச்சயமாக எடை குறைக்க உதவும். உங்கள் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவின் போது நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

பழங்களில் சர்க்கரை

பழங்களில் சர்க்கரை

பழங்களில் இருக்கும் சர்க்கரை உடலில் கொழுப்பை உண்டாக்கும் என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் அது அப்படி இல்லை. பழங்களில் இயற்கையான சர்க்கரை உள்ளது, இது ரசாயன மற்றும் செயற்கை இனிப்புகள் இல்லாதது. இது உங்கள் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்காது.

MOST READ: கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்க இஞ்சி, பூண்டுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து டீ போட்டு குடிங்க..!

எடை இழப்புக்கான பழங்கள்

எடை இழப்புக்கான பழங்கள்

பழங்கள் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதில், எடை குறைப்பும் ஒன்று. ஆனால், எல்லா பழங்களும் உங்க எடையை குறைக்க உதவாது. உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள் பற்றி இங்கே காணலாம்.

கிரேப்ஃபுரூட்

கிரேப்ஃபுரூட்

கிரேப்ஃபுரூட் குறைவான கலோரி கொண்ட ஒரு வகை பழம். இது உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு உதவும். இது உடலில் ஆற்றல் உற்பத்தியை தூண்டுவதோடு, மெட்டபாலிசம் மேம்படவும் உதவும். இதன் விளைவாக உடல் எடை குறைவது ஊக்குவிக்கப்படுவதுடன், உடல் பருமன் அபாயமும் தடுக்கப்படுகிறது. இதில், சர்க்கரை குறைவாக உள்ளதால் எடை இழப்பு உட்பட பல்வேறு சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அது தவறு. வாழைப்பழம் எதிர்ப்பு மாவுச்சத்தை கொண்டுள்ளது. இது கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் பசியைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் தசைக் கட்டமைப்பிலும் உதவுகிறது.

MOST READ: மாலை 5 மணிக்கு மேல நீங்க செய்யுற 'இந்த' தப்புதான் உங்க எடை அதிகரிக்க காரணமாம்...அது என்ன தெரியுமா?

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை பழத்தை நாம் சாறு வடிவில்தான் எடுத்துக்கொள்கிறோம். எலுமிச்சை சாறு பல எடை இழப்பு சமையல் குறிப்புகளில் சேர்க்கப்படுகிறது. அவை கல்லீரலை நச்சுத்தன்மையடையச் செய்து உடலைக் குறைக்க உதவுகின்றன. மேலும், இது உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்கிறது.

பெர்ரி

பெர்ரி

கலோரிகள் குறைவாக உள்ள பெர்ரியில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பெர்ரி கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இது அதிக எடை கொண்டவர்களுக்கு எடையை குறைக்க உதவியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fruits that can help you burn calories

Here we are talking about the fruits that can help you burn calories.
Desktop Bottom Promotion