For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண்டிகை காலங்களில் இந்த விஷயங்கள நீங்க ஃ பாலோ பண்ணாததால தான் உங்க எடை அதிகரிக்குதாம்...!

நீங்கள் விருந்துக்கு முன் உண்ணாவிரதம் இருக்கும்போது, நீங்கள் மிகவும் பசியுடன் இருப்பீர்கள். மேலும் அதிகமாக சாப்பிடுவீர்கள், இதன் மூலம் உங்கள் உடல் அமைப்புகள் அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும்.

|

இந்தியாவில் பண்டிகைக் காலம் முழுவதும் எப்போதும் கொண்டாட்டமாக இருக்கும். பாரம்பரிய சுவையான உணவுகளை ருசிப்பதும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இனிப்பு வகைகளை சாப்பிடுவதும் பண்டிகைகளை மிகவும் சிறப்பானதாக்குகிறது. அப்படிச் செய்யும்போது, நம் மனதில் எப்போதும் ஒரு எண்ணம் இருக்கும்- நம் உடலுக்கு இடையூறு இல்லாமல் எவ்வளவு சாப்பிட வேண்டும் அல்லது இனிப்பு சாப்பிட்ட பிறகு எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிலர் எடை கூடும் என்ற பயத்தில் பண்டிகை உணவுகளை தவிர்த்து விடுவார்கள்.

Festive weight loss tips that you MUST NEVER follow

உங்கள் பசியை அடக்க நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளுங்கள். பண்டிகை உணவுகளில் கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ளது. எனவே, அவற்றை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இது உங்களை திருப்திப்படுத்தும் மற்றும் நிகழ்வில் நீங்கள் குறைவாக சாப்பிடுவீர்கள். நீங்கள் ஒருபோதும் பின்பற்றாத பண்டிகை கால விஷயங்களையும் எடை இழப்பு குறிப்புகள் பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இனிப்புகளை ஆர்டர் செய்யாதீர்கள்

இனிப்புகளை ஆர்டர் செய்யாதீர்கள்

ஆரோக்கியமான இனிப்புகள் என்று நீங்கள் பல இனிப்புகளை ஆர்டர் செய்யலாம். இதனால் நீங்கள் அதிகமான இனிப்புகளை சாப்பிட முனைகிறீர்கள். நீங்கள் சாப்பிடுவதில் சர்க்கரை அல்லது பசையம் அதிகம் இல்லை என்று மனதளவில் நிம்மதியடைகிறீர்கள். ஆனால் நீங்கள் சாப்பிட வேண்டியதை விட அதிகமாக சாப்பிடுகிறார்கள் என்பதை உணரவில்லை. எனவே கெட்டோ டெசர்ட் அல்லது குறைந்த கலோரி இனிப்புகளை சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மோட்டிச்சூர் லட்டு அல்லது ஒரு துண்டு மித்தாயை சாப்பிடுவது நல்லது.

விருந்துக்கு முன் உண்ணாவிரதம் இருக்காதீர்கள்

விருந்துக்கு முன் உண்ணாவிரதம் இருக்காதீர்கள்

இது ஒரு பெரிய தவறு. நீங்கள் விருந்துக்கு முன் உண்ணாவிரதம் இருக்கும்போது, நீங்கள் மிகவும் பசியுடன் இருப்பீர்கள். மேலும் அதிகமாக சாப்பிடுவீர்கள், இதன் மூலம் உங்கள் உடல் அமைப்புகள் அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும். 20 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு, மீதமுள்ள 4 மணிநேரங்களில் சாப்பிடுவது, செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும். இது மிகவும் ஆரோக்கியமற்றது. மேலும், இது அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும்.

குற்ற உணர்வை ஒதுக்கி வையுங்கள்

குற்ற உணர்வை ஒதுக்கி வையுங்கள்

இன்று நாம் விருந்தைக் குற்ற உணர்வோடு தொடர்புபடுத்த ஆரம்பித்துவிட்டோம். பண்டிகை உணவை உண்டு மகிழுங்கள். ஓரிரு நாட்கள் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது. இந்த வருடம் முழுவதும் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் நீங்கள் எடை கூடுவீர்களா அல்லது குறைப்பீர்களா என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த சில நாட்கள் கொண்டாட்டங்களால் மட்டும் உங்கள் உடல் எடை அதிகரிக்காது. மன நிறைவோடு அளவாக சாப்பிடுங்கள்.

 இடைப்பட்ட சிற்றுண்டிகளை மறந்துவிடாதீர்கள்

இடைப்பட்ட சிற்றுண்டிகளை மறந்துவிடாதீர்கள்

மக்கள் தங்கள் பண்டிகை காலங்களில் இரவு உணவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் இடையில் சாப்பிட வேண்டிய சிற்றுண்டியை மறந்துவிடுகிறார்கள். சிற்றுண்டியை தவிர்ப்பதால், இது அவர்களை அதிகமாக சாப்பிட வைக்கிறது. மேலும், உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள் மற்றும் அதீத பசி உணர்வுகளை தவிர்க்க இடையில் சிற்றுண்டியை எடுத்துக்கொள்ளுங்கள்.

நடனமாடி மகிழுங்கள்

நடனமாடி மகிழுங்கள்

பண்டிகையை கொண்டாடுவதற்கு பொருத்தமான வழிகளைக் கண்டறியவும். உங்கள் குடும்பத்துடன் நல்ல இசை மற்றும் நடனம் ஆடி மகிழ்ச்சியாக இந்த பண்டிகையை கொண்டாடுங்கள். தீபாவளி என்பது தனியாக சாப்பிடுவது அல்ல, நீங்கள் விரும்பும் நபர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவது!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Festive weight loss tips that you MUST NEVER follow

Here we are talking about the Festive weight loss tips that you MUST NEVER follow. Read on.
Story first published: Thursday, November 4, 2021, 10:45 [IST]
Desktop Bottom Promotion