Just In
- 29 min ago இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- 3 hrs ago புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- 5 hrs ago உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- 6 hrs ago இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
Don't Miss
- News மன்னர் சார்லஸ் திடீரென உயிரிழப்பு? சர்வதேச ஊடகங்கள் சொல்லிடுச்சாம்.. உண்மையில் என்ன நடந்தது!
- Sports வரம்பு மீறிய ரோகித் ரசிகர்கள்.. அம்பானி குடும்பத்திற்கு தலை குனிவு.. X தளத்திற்கு வந்த சண்டை
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- Movies மீண்டும் பைக்கை எடுத்த அஜித்.. அப்போ விடாமுயற்சி அவ்ளோதானா?.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட செம பிக்!
தினமும் 10000 அடிகள் நடந்தால் எடையைக் குறைக்கலாம் என்பது உண்மையா? ஆய்வு சொல்லும் உண்மை என்ன?
பல எடை இழப்பு உத்திகளில், நடைபயிற்சி ஒரு குறைந்த தாக்க ஒர்க்அவுட் முறையாக கருதப்படுகிறது, இது செய்ய எளிதானது, பணச் செலவு தேவையில்லை மற்றும் எல்லா வயதினரும் செய்யலாம்.
தினமும் 10,000 அடிகள் நடப்பதில் என்ன தனித்தன்மை இருக்கிறது? 10,000 அடிகள் மட்டும் ஏன்? நீங்கள் குறைவாக நடந்தால் என்ன செய்வது? இன்னும் நடந்தால் என்ன? இந்த விதியின் அடிப்படை என்ன? தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறும்போது நிச்சயம் இந்த கேள்விகள் நம் மனதில் எழுந்திருக்கும்.
பல எடை இழப்பு உத்திகளில், நடைபயிற்சி ஒரு குறைந்த தாக்க ஒர்க்அவுட் முறையாக கருதப்படுகிறது, இது செய்ய எளிதானது, பணச் செலவு தேவையில்லை மற்றும் எல்லா வயதினரும் செய்யலாம். நடைபயிற்சிக்கு குறிப்பிட்ட வேகம் இல்லை, எனவே மக்கள் தங்கள் சொந்த வேகத்தில் நடக்க முடியும். நடைபயிற்சிக்கு ஆடம்பரமான அமைப்பு தேவையில்லை. உங்கள் மொட்டை மாடி, தோட்டம் அல்லது வெற்று சாலையில் கூட நீங்கள் நடக்கலாம். இருப்பினும், மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் ஒருவர் நடக்க வேண்டிய அடிகளின் எண்ணிக்கையை வலியுறுத்துகின்றனர். 10,000 படிகள் நடப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று பொதுவாக நம்பப்பட்டாலும், இந்தக் கூற்றில் இன்னும் பல உண்மைகள் உள்ளன.
ஒரு நாளைக்கு 10000 அடிகள் நடந்தால் உடல் எடையை குறைக்க முடியுமா?
இது சாத்தியம்தான், ஆனால் அதேசமயம் சாத்தியமில்லாமல் போகவும் வாய்ப்புள்ளது. ஒரு உடற்பயிற்சி அல்லது வொர்க்அவுட்டின் தாக்கம் தனி நபருக்கு வேறுபடும். ஒரு நபர் ஒரு நாளைக்கு 1000 அடிகள் நடப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும், அதே நேரத்தில் மற்றொரு நபருக்கு அதே முடிவுக்கு 1000 அடிகள் தேவைப்படலாம். பிரபலங்களின் எடை இழப்பு திட்டம் நம்மில் பலருக்கு ஏன் வேலை செய்யவில்லை என்பதை இது விளக்குகிறது. எனவே இந்த பொது விதி அனைவருக்கும் பொருந்தாது.
நடைபயிற்சி நம் உடலுக்கு வேறு என்ன நன்மைகளை அளிக்கிறது?
நடைப்பயிற்சி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும்,
-இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது அல்லது தாமதப்படுத்துகிறது.
-இது தசையின் சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது
-இது எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடலுக்கு போதுமான அளவு சூரிய ஒளி கிடைத்து விட்டமின் டியை ஒருங்கிணைக்கிறது.
-இது மன அழுத்தத்தை நீக்குகிறது
ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது நல்ல தீர்வா?
ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது பொதுவான நம்பிக்கை. வளர்ந்து வரும் உட்கார்ந்த வாழ்க்கை முறையைக் கருத்தில் கொண்டு, மக்கள் குறைந்த தாக்க உடற்பயிற்சிகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் மற்றும் நடைபயிற்சி அவற்றில் ஒன்றாகும். ஆனால் 10,000 அடிகள் என்ற இலக்கு உண்மையில் பலரை சில நூறு அடிகளில் தொடங்குவதைத் தடுக்கிறது. குறைவான அடிகள் நடப்பதால் எந்தப் பலனும் கிடைக்காது என்று மக்கள் நம்புகிறார்கள். மேலும் பலர் தினமும் 10,000 அடிகளை முடிக்க தங்களைத் சிரமப்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
ஆராய்ச்சியாளர்கள் இதற்கு கலவையான பதில்களைக் கூறுகின்றனர். பல ஆராய்ச்சி ஆய்வுகள் ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பதன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பேசுகின்றன, மேலும் பலர் அதில் பாதி நடப்பதும் அந்த நன்மையை அளிக்கும் என்று கூறியுள்ளனர். ஒரு நாளைக்கு 4,400 படிகள் நடப்பது பெண்களின் இறப்பு அபாயத்தைக் குறைக்கிறது என்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 3,000 அடிகளுக்கும் குறைவாக நடப்பதை ஒப்பிடுவதன் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல ஆய்வுகள் ஒரு வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பயிற்சிகளை வலியுறுத்துகின்றன, மேலும் பல ஆய்வுகள் குறைந்த தாக்க பயிற்சிகள் கூட உடலுக்கு நல்லது என்று கூறுகின்றன.
தீர்வு என்ன?
இந்த கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் அடிப்படையானது, உடல் செயல்பாடு அவசியம் மற்றும் மனித உடல் தொடர்ந்து நகர்வது முக்கியம். இப்போது நாம் வழிநடத்தும் வாழ்க்கை முறை நம்மை நகர்த்துவதற்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை, அதனால்தான் முன்பு வயதானவர்களிடம் காணப்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் இளைஞர்களிடையே காணப்படுகின்றன. எனவே ஆய்வுகள் மற்றும் கூற்றுகளிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியது என்னவென்றால், உடல் செயல்பாடு மனித ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது மற்றும் நடைபயிற்சி ஒரு வசதியான உடற்பயிற்சி வடிவமாகும். ஆனால் ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி உங்களைத் தள்ளாதீர்கள், ஆனால் ஒருவித உடற்பயிற்சியுடன் உங்கள் சுறுசுறுப்பாக இருங்கள்.