Just In
- 21 min ago
இந்த 5 ஆணவக்கார ராசிக்காரங்க அவங்க தவறை எப்பவும் ஒத்துக்க மாட்டாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 30 min ago
நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் பைல்ஸ் பிரச்சனையை உண்டாக்கும் தெரியுமா?
- 2 hrs ago
மிதுனம் செல்லும் புதனால் ஜூலை 17 வரை இந்த 4 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷார்...
- 3 hrs ago
சிறுநீரக பிரச்சினைகளை விரைவாக குணப்படுத்த இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிட்டால் போதும்...!
Don't Miss
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Technology
விரைவில் தமிழக ரேஷன் கடைகளிலும் நீங்கள் எதிர்பார்த்த 'இந்த" சேவை கிடைக்கும்: சூப்பர் தகவல்.!
- News
"ஓகே ஓகேவில்" உதயநிதியின் ரீல் லவ்வுக்கு சந்தானம்.. ரியல் லவ்வுக்கு பார்த்தாவான அன்பில் மகேஷ்!
- Movies
சின்னப் பையன் மாதிரி நடந்துக்காதீங்க... நடிகர் நட்டியை விஜய் ஏன் கண்டித்தார் தெரியுமா?
- Sports
"எப்போதும் இதே வேலை தான்.." கோலியுடன் அப்படி என்னதான் பிரச்சினை.. பேர்ஸ்டோ தந்த விளக்கம்!
- Finance
ஸ்டாலின் சொன்ன முக்கிய விஷயங்கள்.. சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடந்தது என்ன?
- Automobiles
பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு! படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள்ல டெலிவரி கொடுத்திருக்காங்க!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
இரவு உணவு என்பது உணவின் மிக முக்கியமான பகுதியாகும். இது உங்க உடல் ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது. முட்டை மற்றும் கோழி இரண்டும் உங்கள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரண்டிலும், பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருப்பதால், பெரும்பாலான மக்கள் இவற்றை உணவாக எடுத்துக்கொள்கிறார்கள். பொதுவாக முட்டை மற்றும் கோழி உணவுகள் பகல் நேரங்களில் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இரவு நேரங்களில் மிதமான உணவுகளையே எடுத்துக்கொள்ள பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நீங்கள் எடை குறைப்பு பயணத்தில் இருந்தால், இரவு உணவை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
ஒவ்வொரு உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலருக்கும், இரவு உணவு உணவின் மிக முக்கியமான பகுதியாகும். எப்பொழுதும் இரவு உணவை முடிந்தவரை இலகுவாக வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது, மறுபுறம் பல நிபுணர்கள் தனிநபரின் விருப்பத்திற்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட இரவு உணவு திட்டங்களை பரிந்துரைக்கின்றனர். இரவு உணவிற்கு முட்டை மற்றும் கோழி சாப்பிடுவது, இவற்றில் எது உடல் எடையை குறைக்க உதவும் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

இரவு உணவு ஏன் இலகுவாக இருக்க வேண்டும்?
இரவு உணவு குறைவாக எடுத்துக்கொள்வதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை எடை இழப்பை நோக்கிச் செல்கின்றன. உயிரியல் ரீதியாக, இரவு உணவை இலகுவாகவும், சீக்கிரமாக சாப்பிடுவதற்கும், அடுத்த உணவை உண்பதற்கு சுமார் 10 மணிநேரம் வரை அதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உங்கள் கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தும்.

2 நேரத்திற்கு முன்பு எடுத்துக்கொள்ள வேண்டும்
ஒரு நபரின் தூக்க நேரத்தைக் கருத்தில் கொண்டால், அது பெரும்பாலும் 8 மணிநேரம் ஆகும். இரவு உணவை உறங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட்டு முடித்துவிட்டால், உண்மையில் 10 மணிநேரம் கலோரி இல்லாத உணவை எடுத்துக்கொண்டதாக இருக்கும். இது கொழுப்பு இழப்புக்கு உதவுகிறது. உடலில் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பை ஆற்றலுக்காக பயன்படுத்தும் போது, கெட்டோசிஸின் ஒரு கட்டத்தில் உடலை வைக்கிறது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

ஆய்வு கூறுவது
எண்டோகிரைன் சொசைட்டியின் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி மற்றும் மெட்டபாலிசம் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மனித வளர்சிதை மாற்றம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கான அளவீடான டயட் தூண்டப்பட்ட தெர்மோஜெனீசிஸ் (டிஐடி) உணவு நேரத்தைப் பொறுத்தது என்பதைக் கண்டறிந்துள்ளது. ஒரு உணவை காலை உணவாக உண்ணப்படுகிறது. அதில் உள்ள கலோரிகளின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், இரவு உணவிற்கு உட்கொள்ளும் அதே உணவை விட இரண்டு மடங்கு அதிக உணவு தூண்டப்பட்ட தெர்மோஜெனீசிஸை உருவாக்குவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அதிக காலை உணவு மற்றும் இரவு உணவிற்கு இலகுவாக சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியது.

முட்டை மற்றும் கோழியின் ஊட்டச்சத்து மதிப்புகள்
முட்டை குறைந்த கலோரி உணவு. ஒரு முட்டையில் 75 கலோரிகள், 7 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு, 1.5 கிராம் நிறைவுற்ற கொழுப்பு, இரும்பு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளன.
கிட்டத்தட்ட 85 கிராம் எடை கொண்ட கோழி மார்பகத்தில் 122 கலோரிகள், 24 கிராம் புரதம், 3 கிராம் கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் இல்லை மற்றும் நியாசின், செலினியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6, வைட்டமின் பி12, ரிபோஃப்ளேவின் போன்ற அத்தியாவசிய கூறுகள் உள்ளன. மேலும், இவற்றில் துத்தநாகம், தியாமின், பொட்டாசியம் மற்றும் தாமிரம் உள்ளன.

சமைப்பதற்கு எளிதானது
எடை இழப்பு பயணத்தில், கோழி மற்றும் முட்டை உணவுகளை உலகம் முழுவதும் பரவலாக உண்ணப்படுகின்றன. ஏனெனில் அவை குறைந்த விலை உணவுகள் மற்றும் சமைக்க எளிதானவை. நிறைய சமையல் குறிப்புகள் இருப்பதால், ஒரு சில நிமிடங்களில் கோழி மார்பகம் அல்லது முட்டையை எளிதாக வேகவைக்கலாம்.

இரவு உணவிற்கு முட்டையா அல்லது கோழியா?
ஊட்டச்சத்து கலவை, எளிதில் ஜீரணிக்கக்கூடியது. உங்கள் உடல் அதை செயலாக்கும் விதம் மற்றும் நீங்கள் சமைக்கும் செய்முறையின் வகை ஆகியவற்றைப் பொறுத்து, இரவு உணவிற்கு முட்டை மற்றும் கோழியை சாப்பிடலாம். உதாரணமாக, சில பருவகால காய்கறிகளுடன் கோழி சமைத்து சாப்பிடுவது சூப்பர் ஆரோக்கியமான இரவு உணவாகும். அதே சமயம் வறுத்த கோழி அல்ல. சில காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கும் சிக்கன் செரிமானத்திற்கு நல்லது.

முட்டைகள்
முட்டைகளைப் பொறுத்தவரை, இது ஒரு சிறந்த இரவு உணவா? இல்லையா? என்பதில் பல கருத்துக்கள் உள்ளன. இந்த புரதம் அடர்த்தியான உணவு இரவு உணவிற்கு பலரால் பரிந்துரைக்கப்படவில்லை. முட்டைகள் குறைந்த கார்ப், குறைந்த கலோரி மற்றும் குறைந்த விலை கொண்ட புரதத்தின் மூலமாகும். இது அடிப்படையில் அவற்றை சிறந்த உணவாக ஆக்குகிறது. ஆனால் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் உள்ளவர்கள் முட்டையை சாப்பிடுவது அவர்களின் தூக்கத்தைக் கெடுக்கும். மறுபுறம், முட்டையில் உள்ள டிரிப்டோபன், மெலடோனின் மற்றும் வைட்டமின் டி ஆகியவை பலருக்கு தூக்கத்தைத் தூண்டுகின்றன. எனவே, உங்கள் உடல் முட்டைகளை எவ்வாறு கையாளும் என்பதைப் பொறுத்து, அதை உங்கள் உணவில் சேர்க்கலாம் அல்லது சேர்க்காமல் இருக்கலாம்.