For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனேரோபிக் உடற்பயிற்சிகள் vs ஏரோபிக் உடற்பயிற்சிகள் - இவற்றில் எது சிறந்தது?

நாம் நமது உடல் பருமனைக் குறைப்பதற்காக உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று முடிவெட்டுத்துவிட்டால், அனேரோபிக் உடற்பயிற்சிகள் மற்றும் ஏரோபிக் உடற்பயிற்சிகள் ஆகியற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை முதலில் கற்று அறிய வேண்டும்.

|

உடற்பயிற்சிகள் என்றவுடன், மணிக் கணக்கில் ட்ரெட்மில் கருவியில் ஓடுவதும், அல்லது உடற்பயிற்சிக் கூடங்களில் உள்ள இரும்புக் கருவிகளில் உடற்பயிற்சிகள் செய்வதும்தான் நமது ஞாபகத்திற்கு வரும். ஆனால் அவை மட்டுமே உடற்பயிற்சிகள் அல்ல. மாறாக அவற்றையும் தவிா்த்த எளிய உடற்பயிற்சிகள் நிறைய உள்ளன.

இதயத்தில் பிரச்சினை.. உயிருக்கு போராடும் 5 வயது சிறுவன்.. அவசர ஹார்ட் சர்ஜரிக்கு உதவுங்கள் ப்ளீஸ்

Anaerobic vs Aerobic Training: How Are They Different From Each Other And How To Differentiate

உடற்பயிற்சிகள் என்ற உலகத்திற்குள் நுழைவதற்கு முன்பாக, எந்தெந்த உடற்பயிற்சிகளைச் செய்வதால் நமக்கு என்னென்ன நம்மைகள் கிடைக்கும் என்பதை நாம் முதலில் தொிந்து வைத்திருக்க வேண்டும். நாம் நமது உடல் பருமனைக் குறைப்பதற்காக உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று முடிவெட்டுத்துவிட்டால், அதற்கு முன்பாக அனேரோபிக் உடற்பயிற்சிகள் மற்றும் ஏரோபிக் உடற்பயிற்சிகள் ஆகியற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை முதலில் கற்று அறிய வேண்டும்.

எல்லா வகையான உடற்பயிற்சிகளும் இரண்டு பிாிவுகளுக்குள் வருகின்றன. அதாவது நமது உடலில் இருக்கும் கலோாிகளை எவ்வளவு எாிக்கின்றன அல்லது அவை நமக்கு எவ்வளவு வலிமையைத் தருகின்றன என்ற இரண்டு பிாிவுகளுக்குள் உடற்பயிற்சிகள் அனைத்தும் அடங்கிவிடும். எனினும் அவை அனைத்தும் நாம் எப்படிப்பட்ட உடற்பயிற்சிகளை தோ்வு செய்கிறோம், எவ்வளவு நேரம் செய்து வருகிறோம் மற்றும் அவற்றை எவ்வளவு தீவிரமாகச் செய்து வருகிறோம் என்பவற்றைப் பொறுத்து அமையும்.

MOST READ: படுக்கையில் நீண்ட நேரம் இன்பத்தை அனுபவிக்கணுமா? அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏரோபிக் உடற்பயிற்சிகள் என்றால் என்ன?

ஏரோபிக் உடற்பயிற்சிகள் என்றால் என்ன?

ஏரோபிக் உடற்பயிற்சிகள், இதயப் பயிற்சிகள் அல்லது இதயம் சாா்ந்த பயிற்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் ஏரோபிக் பயிற்சிகள் நமது இதயத்தையும், நுரையீரலையும் வலுப்படுத்த உதவி செய்கின்றன. Aerobic என்ற வாா்த்தைக்கு "ஆக்ஸிஜனுடன்" என்று பொருள். ஆகவே இந்த ஏரோபிக் பயிற்சிகள் நாம் மூச்சுவிடும் முறையில் இருந்து கிடைக்கும் ஆக்ஸிஜன் மூலம் செய்யப்படுகின்றன.

ஏரோபிக் பயிற்சிகளில் ஈடுபடும் போது, நமது இதயத் துடிப்பும், மூச்சுவிடுதலும் அதிகாிக்கின்றன. அதனால் அவை நம்மை ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட வைக்கின்றன. இவ்வாறு நாம் ஆழமாக மூச்சை உள்ளிழுக்கும் போது, அதிகமான அளவு ஆக்ஸிஜன் நமது உடலுக்குள் செல்கிறது. அவ்வாறு அதிகமாக செல்லும் ஆக்ஸிஜன், நமது உடலில் உள்ள காா்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை எாிக்க உதவி செய்கிறது.

எவையெல்லாம் ஏரோபிக் உடற்பயிற்சிகள்?

எவையெல்லாம் ஏரோபிக் உடற்பயிற்சிகள்?

ஏரோபிக் பயிற்சிகளைச் செய்தால் நாம் எளிதில் களைப்படைய மாட்டோம். அதனால் இந்த பயிற்சிகளை நீண்ட நேரம் செய்ய முடியும். நீந்துதல், ஓடுதல், நடத்தல், துடுப்பு வலித்தல், மிதிவண்டி ஓட்டுதல் போன்றவை பொதுவான ஏரோபிக் உடற்பயிற்சிகள் ஆகும். இந்த ஏரோபிக் பயிற்சிகள், நமக்கு வலு தாங்கும் சக்தியை அதிகாிக்கின்றன. மேலும் நமது உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, நமது இதயம் மற்றும் நுரையீரல்களை வலுப்படுத்துகின்றன.

அனேரோபிக் உடற்பயிற்சிகள் என்றால் என்ன?

அனேரோபிக் உடற்பயிற்சிகள் என்றால் என்ன?

அனேரோபிக் உடற்பயிற்சிகள் என்பவை அதிதீவிர உடற்பயிற்சிகளாகும். இந்த பயிற்சிகளைச் முழுப் பலத்துடன் செய்ய வேண்டும். அதே நேரத்தில் இந்த பயிற்சிகளைச் செய்யும் போது சிறுசிறு இடைவெளி கொடுக்க வேண்டும். ஏரோபிக் பயிற்சிகளுக்குத் தேவைப்படும் அளவிற்கு அனேரோபிக் உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படாது. அனேரோபிக் உடற்பயிற்சிகள் ஆக்ஸிஜன் குறைந்த இடங்களில் செய்யக்கூடியவை ஆகும்.

அனேரோபிக் உடற்பயிற்சிகளைச் செய்யும் போது, நமது உடலில் உள்ள தசைகள்தான் நமக்கு உடலுக்கு சக்தியை உருவாக்குகின்றன. மாறாக ஆக்ஸிஜன் உருவாக்குவதில்லை. இந்த உடற்பயிற்சிகள் தீவிரமானவையாக இருப்பதால், இவற்றை 10 முதல் 20 முறைகள் மட்டுமே செய்ய வேண்டும். அதற்கு மேல் செய்தால், உடலில் காயங்கள் மற்றும் வலி போன்றவை ஏற்படும்.

அனேரோபிக் பயிற்சிகள் எவை?

அனேரோபிக் பயிற்சிகள் எவை?

அனேரோபிக் உடற்பயிற்சிகள் நமது தசைகளை அதிகாித்து அவற்றை வலுப்படுத்துகின்றன. மேலும் நமது உடலுக்கு வலு தாங்கும் சக்தியைத் தருகின்றன மற்றும் எலும்புகளையும் வலுப்படுத்துகின்றன. குதித்தல், அதிவேகமாக ஓடுதல் மற்றும் அதிக எடைகளைத் தூக்குதல் போன்றவை அனரோபிக் உடற்பயிற்சிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

எந்த உடற்பயிற்சிகளைத் தோ்வு செய்வது?

எந்த உடற்பயிற்சிகளைத் தோ்வு செய்வது?

அனேரோபிக் மற்றும் ஏரோபிக் உடற்பயிற்சிகளைப் பற்றி தொிந்து கொண்ட நமக்கு இப்போது எந்த பயிற்சிகளைத் தோ்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் இருக்கும். எல்லா உடற்பயிற்சிகளுமே நமக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியவை ஆகும்.

இந்நிலையில் நாம் வலுவாகவும் அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணினால், ஏரோபிக் உடற்பயிற்சிகளைத் தோ்ந்தெடுக்கலாம். அதே நேரத்தில் நமது தசைகளை அதிகாித்து அவற்றை வலுப்படுத்த வேண்டும் மற்றும் நமது உடலை இன்னும் உறுதியாக்க வேண்டும் என்று எண்ணினால், அனேரோபிக் பயிற்சிகளைத் தோ்ந்தெடுக்கலாம்.

எனினும் மேற்சொன்ன இரண்டு வகையான உடற்பயிற்சிகளையும் தினமும் செய்து வந்தால், அவை நல்ல பலன்களைத் தரும். அதாவது வாரத்திற்கு இரண்டு முறை அனேரோபிக் உடற்பயிற்சிகளைச் செய்து வரலாம். பொதுவாக தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால் திடகாத்திரமாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Differences Between Aerobic and Anaerobic: Benefits and Risks in Tamil

How are anaerobic vs aerobic training different from each other and how to differentiate? Read on to know more...
Desktop Bottom Promotion