For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த எளிய உணவு மாற்றங்கள் நீங்கள் நினைப்பதை விட விரைவாகவும், உறுதியாகவும் எடையை குறைக்குமாம்...!

|

உடல் எடையைக் குறைப்பது அல்லது உடலில் இருந்து கூடுதல் கிலோவை குறைப்பது தோற்றத்தை மேம்படுத்துவது முதல் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை மகத்தான நன்மைகளை கொண்டுள்ளது. இருப்பினும், பலர் சரியான எடையை அடைவதில் வெற்றி பெறுவதில்லை. இந்த தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்று உணவில் உள்ள சீரற்ற தன்மை ஆகும்.

ஒருவர் எப்படி உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருந்தாலும், எல்லாவற்றிலும் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒன்று உணவுமுறை மாற்றமாகும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பதை நீங்கள் கவனித்தால், எடை குறைப்புப் பயணத்தில் நீங்கள் பாதி வெற்றியை அடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். எடையைக் குறைக்கத் திட்டமிடுபவர்கள் அல்லது குறிப்பிட்ட எடையை இலக்காகக் கொண்டவர்கள், நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரோட்டின் உட்கொள்ளலை அதிகரிப்பது

புரோட்டின் உட்கொள்ளலை அதிகரிப்பது

தினசரி அடிப்படையில் உங்கள் புரத உட்கொள்ளலை அதிகரிக்கவும். கூடுதல் எடை குறையும் போது உங்கள் முக்கிய வலிமை மற்றும் தசை வெகுஜனத்தைத் தக்கவைக்க சரியான அளவு புரதம் மிகவும் அவசியம். ஆனால், அதிக புரத உணவு நீண்ட காலத்திற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. ஒரு உணவு நிபுணரைத் தொடர்புகொண்டு, அடிப்படை மருத்துவ நிலைமைகளைப் பற்றி விவாதித்து, தினசரி உட்கொள்ளக்கூடிய புரதத்தின் அளவு குறித்த பரிந்துரைகளைப் பெற வேண்டும். டயட்டரி ரெஃபரன்ஸ் இன்டேக் அறிக்கையின்படி, வயது வந்தோர் ஒரு கிலோ உடல் எடையில் 0.8 கிராம் புரதத்தை உட்கொள்ள வேண்டும். ஒரு வயது வந்த ஆண் ஒரு நாளைக்கு 56 கிராம் புரதத்தையும், வயது வந்த பெண் ஒரு நாளைக்கு 46 கிராம் புரதத்தையும் உட்கொள்ள வேண்டும் என்று அது கூறுகிறது.

நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பது

நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பது

நார்ச்சத்து எடை இழப்புக்கு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. ஜீரணமான உணவுப் பொருட்களை அகற்றவும், செரிமான அமைப்பை சுத்தப்படுத்தவும், குடல் இயக்கத்தை எளிதாக்கவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிபுணர் பரிந்துரையின்படி, ஒரு வயது வந்த ஆணும் பெண்ணும் ஒரு நாளைக்கு 38 கிராம் மற்றும் 25 கிராம் நார்ச்சத்து சாப்பிட வேண்டும்.

MOST READ: ஆண்களுக்கு இளம் வயதியிலேயே மாரடைப்பு ஏற்பட அவர்களின் இந்த அலட்சியமான தவறுகள்தான் காரணமாம் தெரியுமா?

உணவிற்கு முன் தண்ணீர் குடிப்பது

உணவிற்கு முன் தண்ணீர் குடிப்பது

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது, ​​பலர் அடிக்கடி தண்ணீர் உட்கொள்ளலைக் கண்காணிக்க மறந்து விடுகிறோம். உடல் எடையை குறைக்கும் போது தண்ணீர் ஒரு அதிசய திரவமாக செயல்படுகிறது. சராசரியாக ஒரு சாதாரண மனிதன் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமான நடவடிக்கைகளின் போது தண்ணீர் உட்கொள்வதைக் கண்காணிப்பதற்கான எளிதான வழிகளில் ஒன்று. உதாரணமாக, நீங்கள் மதிய உணவிற்கு உட்காரும்போது, சாப்பிடுவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.

கார்போஹைட்ரேட்டைக் குறைப்பது

கார்போஹைட்ரேட்டைக் குறைப்பது

கார்போஹைட்ரேட்டுகளை குறைப்பது உடலின் ஒட்டுமொத்த அமைப்பை சரியாக ஒழுங்குபடுத்துகிறது என்று ஆய்வுகள் கூட கூறுகின்றன. கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்தவும், அதற்குப் பதிலாக புரதங்கள் மற்றும் காய்கறிகளுடன் ஈடுசெய்ய வேண்டுமென்று மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் எப்போதும் பரிந்துரைத்துள்ளனர். உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் கூட எடை இழப்புக்கு கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை குறைக்க பரிந்துரைக்கின்றனர்.

MOST READ: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப பொறாமைப்படுவாங்களாம்... இவங்ககிட்ட இருந்து தூரமாவே இருங்க... அதான் நல்லது!

உணவை நன்கு மெல்லுவது

உணவை நன்கு மெல்லுவது

உயிரியலில் குறிப்பிடப்படும் மாஸ்டிகேஷன், உணவு வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் அவசியம். நல்ல வளர்சிதை மாற்றம் நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. தவறான வளர்சிதை மாற்றம் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது, அவற்றில் முக்கியமானது மலச்சிக்கல். எனவே ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் உணவை மெல்லும்போது, ​​உடல் வளர்சிதை மாற்றத்தை எளிதாக்குகிறீர்கள். உணவை விழுங்குவதற்கு முன் 32 முறை மெல்ல வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Diet Habits to Help You Lose Weight Quickly in Tamil

These diet habits that can promise visible weight loss.
Story first published: Wednesday, January 12, 2022, 11:15 [IST]