Just In
- 22 min ago
கணைய புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...
- 1 hr ago
குழந்தைகளுக்கான அழகான காலணிகளை 76% அதிரடி தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்...!
- 1 hr ago
ஹர் கர் திரங்கா: தேசியக்கொடியை எப்படி மடிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் தெரியுமா?
- 2 hrs ago
இந்த உணவுகள் உங்களுக்கு அருமையான மூடை செட் பண்ணி கொடுக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
Don't Miss
- News
கிட்ட வாம்மா.. நீ என் தங்கச்சி..! தூய்மை பணியாளரை இறுக பற்றிய வைகைப் புயல்! உருகிப் போன பக்தர்கள்!
- Movies
அண்ணனா? ஃபிரண்டா?...விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் ஷாம் ரோல் இதுதானா?
- Automobiles
விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
- Technology
திடீர் விலைக்குறைப்பு.. அடிச்சு பிடிச்சு விற்பனையாகும் 6000mAh Samsung போன்!
- Finance
ஒருவர் எவ்வளவு தங்கம் வாங்கலாம்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..!!
- Education
ஃபர்ஸ்ட்டில் இருக்கும் கல்வி நிறுவனம் செய்த சாதனை தெரியம்?
- Sports
திடீரென பயணத்தை ரத்து செய்த தோனி??.. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஏமாற்றம்.. காரணம் என்ன?
இந்த சமையலறை இலைகள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட உங்க எடையை வேகமாக குறைக்குமாம்... ட்ரை பண்ணுங்க!
எடைப் பிரச்சினைகளைச் சரிசெய்வது கடினமான பணியாகும், நீங்கள் கலோரிகளைக் குறைப்பது, கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் கட்டுப்பாடான உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்றவற்றில் ஈடுபடுகிறீர்கள், இருப்பினும் நீங்கள் விரும்பும் எடையை அடையப் போராடுகிறீர்கள்.
ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் கிடைக்கும் பச்சை இலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வியக்கத்தக்க வகையில் எடைப் பிரச்சினைகளை செலவு குறைந்த முறையில் எளிதில் தீர்க்க முடியும் மற்றும் இவை குறிப்பிடத்தக்க வகையில் எடையைக் குறைக்க உதவுகிறது. இந்த கீரைகள் குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. பழங்காலத்திலிருந்தே நம் சமையலறையில் பயன்படுத்தப்படும் இலைகள் மற்றும் கொழுப்புகளை எரிக்க உதவுகின்றன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கறிவேப்பிலை
தென்னிந்திய உணவு வகைகளின் ஒரு முக்கிய மூலப்பொருள், திருப்திகரமான நறுமணம் நிறைந்தது, தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதனை மெல்லுவது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. கறிவேப்பிலையில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாவர அடிப்படையிலான சேர்மங்களான மஹானிம்பைன் என்னும் உடல் பருமன் எதிர்ப்பு மற்றும் லிப்பிட்-குறைக்கும் விளைவுகளைக் கொண்ட ஒரு ஆல்கலாய்டு உள்ளது. இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது, வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது மற்றும் உடலில் கொழுப்பு படிவதைக் குறைக்கிறது. இது சர்க்கரை நோயையும் குணப்படுத்துகிறது மற்றும் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

ஆர்கனோ
இத்தாலிய உணவுக்கு இணையான ஒரு மூலிகை. பாலிஃபீனால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற உயிர்வேதியியல் கலவைகள் நிறைந்த ஒரு அற்புதமான மூலிகை, உடலில் இன்சுலின் ஒழுங்குமுறைக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், உடலை வடிவமாகவும் வைத்திருக்கிறது. இது ஒரு சிறந்த மூலிகையாகும், இது எடை பிரச்சினைகளை நிர்வகிக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது.

பார்ஸ்லே
உடல் எடையை குறைக்க உதவும் ஒரு இயற்கை வழியாகும். பார்ஸ்லே உடல் எடையை குறைக்க உதவும் ஒரு எளிய வீட்டில் வளர்க்கப்படும் மூலிகையாகும். இது நீர் எடை, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் மற்றும் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இந்த இலைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமான பண்புகளால் அசௌகரியம் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரிசெய்கிறது.

கொத்தமல்லி
ஒவ்வொரு இந்திய சமையலின் முக்கிய மூலப்பொருளான 'தனியா', சுவையுடன் மட்டுமல்லாமல், தயாரிக்கப்பட்ட உணவுகளுக்கு கவர்ச்சியான வண்ணத்தையும் சேர்க்கிறது. தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த, கொத்தமல்லி இலைகள் எடை மற்றும் வளர்சிதை மாற்ற அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமானவையாக இருக்கிறது. மக்னீசியம், வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்த கொத்தமல்லி இலைகளை சாலட்களாகவோ அல்லது பச்சை சட்னியாகவோ உட்கொள்ளலாம். இந்த இலைகளில் உள்ள குவெர்செடின் என்ற முக்கிய உறுப்பு உடல் எடையை குறைப்பதில் அதிசயங்களை செய்கிறது.

ரோஸ்மேரி
ரோஸ்மேரி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது மற்றும் செல் மீளுருவாக்கம் செய்ய உதவுகிறது, இதன் இலைகள் வளர்சிதை மாற்ற நிலையை மேம்படுத்தவும் இரத்த சர்க்கரையை நிர்வகிக்கவும் உதவுகிறது, இது பாரம்பரிய மருந்துகளை தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படும் ஒரு பழங்கால மூலிகையாகும். இந்த இலைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், நீர் தேக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்த பச்சை இலைகளை மண் பானைகளில் வளர்ப்பதன் மூலம் உங்கள் வீட்டை வளப்படுத்தலாம். அவற்றை உங்கள் பால்கனிகள், லாபிகள் அல்லது தோட்டங்களில் வைக்கவும்.