For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழைப்பழம் Vs மாம்பழ மில்க் ஷேக் - இவற்றில் மிகவும் ஆரோக்கியமானது எது?

கோடை வெயிலைத் தணிக்க பெரும்பாலான மக்கள் விரும்பி தேர்ந்தெடுத்து குடிப்பது வாழைப்பழ ஷேக் மற்றும் மாம்பழ ஷேக் தான். இந்த இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டவை.

|

கொளுத்தும் கோடையில் ஒரு டம்ளர் குளிர்ச்சியான மில்க் ஷேக் உடலுக்கு இதத்தை அளிக்கும். அதிலும் நீங்கள் குடிக்கும் மில்க் ஷேக் உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவும் என்றால் அதை விட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது. பருவ காலங்களில் கோடைக்காலத்தில் தான் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும். கோடைக்காலத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த நற்பதமான மற்றம் சுவையான பழங்கள் அதிகம் கிடைக்கும். தர்பூசணியில் இருந்து மாம்பழம் வரை பல்வேறு சுவையான பழங்கள் கோடையில் அதிகம் கிடைக்கும்.

Banana Vs. Mango Shake: What To Include In Your Diet For Weight Loss

ஆனால் இவற்றை விட கோடை வெயிலைத் தணிக்க பெரும்பாலான மக்கள் விரும்பி தேர்ந்தெடுத்து குடிப்பது வாழைப்பழ ஷேக் மற்றும் மாம்பழ ஷேக் தான். இந்த இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டவை. அதோடு இவற்றில் நார்ச்சத்தும் உள்ளதால், இது எடையைக் குறைக்க நினைப்போருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இக்கட்டுரையில், வாழைப்பழ ஷேக் மற்றும் மாம்பழ ஷேக்- இவற்றில் சிறந்தது எது மற்றும் எவ்வளவு கலோரிகள் உள்ளன என்பனவற்றை விரிவாக காண்போம்.

MOST READ: உயர் இரத்த அழுத்தத்தை சட்டென்று கட்டுக்குள் கொண்டு வர சாப்பிட வேண்டிய உணவுகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாம்பழங்கள்

மாம்பழங்கள்

கோடைக்காலம் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது மணமணக்கும் மற்றும் நாவூற வைக்கும் மாம்பழங்களாகவே இருக்கும். பழங்களின் ராஜாவான மாம்பழத்தில் வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் உள்ளன. இவை ஆரோக்கியமான கொலாஜன் உருவாக்கத்திற்கும், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன. மாம்பழங்களில் கண்களின் ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கும் மற்றும் கண் நோய்களைத் தடுக்கும பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது.

மாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

மாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

165 கிராம் மாம்பழத் துண்டுகளில் பின்வரும் சத்துக்கள் உள்ளன.

* 99 கலோரிகள்

* புரோட்டீன் - 1.4 கிராம்

* கொழுப்பு - 0.6 கிராம்

* கார்போஹைட்ரேட் - 24.7 கிராம்

* சர்க்கரை - 22.5 கிராம்

* நார்ச்சத்து - 2.64 கிராம்

எடை இழப்பிற்கு மாம்பழம் எவ்வாறு உதவுகிறது?

எடை இழப்பிற்கு மாம்பழம் எவ்வாறு உதவுகிறது?

மாம்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலை ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. மாம்பழங்களில் குறைவான அளவில் கலோரிகளும், அதிகளவில் நார்ச்சத்துக்களும் உள்ளன. இதனால் இது வயிற்றை நிரப்புவதோடு, வயிறு நிறைந்த திருப்தியை அளிக்கிறது. அதோடு இப்பழத்தில் உள்ள இனிப்புச் சுவை, தேவையற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கிறது. 2014 ஆம் ஆண்டு ஜாப்பானிய ஆய்வின் படி, மாம்பழங்களை சாப்பிடுவது குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் இதயம், சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கும் நல்லதாம்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் எப்போதுமே சுவையான மற்றும் அற்புதமான பழம். இது அதிக ஊட்டச்சத்து நிறைந்த பழமும் கூட. ஏனெனில் இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் அதிகமாக உள்ளன. பலர் வாழைப்பழம் சாப்பிட்டால் குண்டாவதாக தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் வாழைப்பழத்தை ஒருவர் சரியான அளவில் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடையைப் பராமரிக்கலாம். மேலும் வாழைப்பழம் வயிற்று உப்புசத்தைக் குறைக்கிறது, வயிறு நிறைந்த உணர்வை மேம்படுத்துகிறது மற்றும் உடற்பயிற்சிக்கு பின் சாப்பிட ஏற்ற அற்புதமான பழம்.

வாழைப்பழத்தின் சத்துக்கள்

வாழைப்பழத்தின் சத்துக்கள்

100 கிராம் வாழைப்பழத்தில் பின்வரும் சத்துக்கள் உள்ளன.

* கலோரிகள் - 89

* புரோட்டீன் - 1.1 கிராம்

* கார்போஹைட்ரேட் - 22.8 கிராம்

* சர்க்கரை - 12.2 கிராம்

* நார்ச்சத்து - 2.6 கிராம்

* கொழுப்பு - 0.3 கிராம்

எடை இழப்பிற்கு வாழைப்பழம் எவ்வாறு உதவுகிறது?

எடை இழப்பிற்கு வாழைப்பழம் எவ்வாறு உதவுகிறது?

வாழைப்பழத்தில் நார்ச்சத்து உள்ளது. இது கழிவுகள் எளிதில் கடந்து செல்ல உதவி, மலச்சிக்கலைத் தடுக்கிறது. செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட்டால், உடலின் மெட்டபாலிசம் நன்கு வேலை செய்யும். அதன் விளைவாக உடல் எடையும் சிறப்பாக குறையும். இந்த மஞ்சள் நிற பழம் உடற்பயிற்சிக்கு பின் சாப்பிட ஏற்ற ஒரு சிறப்பான பழம். இதில் க்ளுக்கோஸ் அதிகம் உள்ளதால், இது உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம், உடற்பயிற்சிக்கு பின் தசைப் பிடிப்புகள் மற்றும் தலைச்சுற்றல் ஏற்படுவதைக் குறைக்கும். வாழைப்பழம் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுவதோடு, நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும்.

மாம்பழம் Vs வாழைப்பழ ஷேக்: எது சிறந்தது?

மாம்பழம் Vs வாழைப்பழ ஷேக்: எது சிறந்தது?

ஊட்டச்சத்து மதிப்புகள் மற்றும் எடை இழப்பில் அதன் பங்கு ஆகியவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, வாழைப்பழ ஷேக் தான் மாம்பழ ஷேக்கை விட சிறந்தது. கலோரி அளவில் கூட மாம்பழத்தை விட வாழைப்பழத்தில் கலோரிகளின் அளவு குறைவு. ஒரு டம்ளர் சர்க்கரை சேர்க்காத மாம்பழ ஷேக்கில் 170 கலோரிகள் உள்ளன. அதேப் போல் ஒரு டம்ளர் சர்க்கரை சேர்க்காத வாழைப்பழ ஷேக்கில் 150 கலோரிகள் உள்ளன. எனவே நீங்கள் கலோரி உட்கொள்ளவை கவனிப்பவராயின், வாழைப்பழ ஷேக் தான் சிறந்த தேர்வு. அதுவும் உடற்பயிற்சிக்கு பின் இந்த ஷேக்கை குடித்தால் விரைவில் உடல் குணமாகும். ஆனால் மாம்பழ ஷேக்கிலும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் சத்துக்கள் உள்ளதால், அவ்வப்போது இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியமான வழியில் ஷேக் தயாரிப்பது எப்படி?

ஆரோக்கியமான வழியில் ஷேக் தயாரிப்பது எப்படி?

நீங்கள் வீட்டில் ஷேக் தயாரிக்கும் போது, அவற்றை மிகவும் ஆரோக்கியமானதாக மாற்றும் ஒருசில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

* கொழுப்பு நீக்கப்பட்ட பாலை ஷேக் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

* சர்க்கரைக்கு மாற்றாக மாப்பிள் சிரப், தேன் அல்லது வெல்லத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

* ஷேக்கின் மீது நறுக்கிய நட்ஸ் மற்றும் விதைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Banana Vs. Mango Shake: What To Include In Your Diet For Weight Loss

Summer is a season of fresh and delicious fruits that offer extra dose of nutrients. Out of all, mango and banana shakes are the two most preferred choice of drinks among people to beat the heat. In the article, we will decide which one out of the two is better and how many calories they contain.
Desktop Bottom Promotion