For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதென்ன 7 நாள் மைண்ட் டயட்? அதுல மட்டும் எப்படி வேகமாக எடையும் சர்க்கரை நோயும் குறையுது?

|

மெடிடரேனியன்-டாஷ் இன்டர்வென்ஷன் ஃபார் ந்யுரோ டீஜெனரேடிவ் டிலே டயட் என்னும் டயட் பொதுவாக MIND(Mediterranean-Dash Intervention for Neurodegenerative Delay Diet) டயட் என்று அழைக்கப்படுகிறது. இந்த டயட் டாஷ் டயட் மற்றும் மெடிடரேனியன் டயட் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாகும். இந்த புத்தம் புதிய டயட் மூளை ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தும் உணவு வகைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கபட்டது என்பது வலியுறுத்தப்படுகிறது.

மெடிட்டரேனியன் மற்றும் டாஷ் டயட்டில் உள்ள இலைகளையுடைய காய்கறிகள், மற்றும் இதர காய்கறிகள், பெர்ரி, கொட்டைகள் மற்றும் விதைகள், முழு தானியங்கள், மீன், கோழி இறைச்சி, ஆலிவ் எண்ணெய், ஒயின் போன்ற உணவுகள் இவற்றுள் அடங்குகிறது.

What Is MIND Diet And Benefits

சிகாகோவில் உள்ள ரஷ்ய பல்கலைக்கழக மருத்துவ மையத்தைச் சேர்ந்த மார்த்தா கிளாரா மோர்ரிஸ் மற்றும் அவரின் குழுவால் கண்டறியப்பட்ட இந்த MIND டயட். மேம்படுத்தப்பட்ட அறிவாற்றல் செயல்பாடுகள் மற்றும் குறைக்கபட்ட அல்சைமர் அபாயங்கள் போன்ற நேர்மறைத் தாக்கத்தின் காரணமாக மக்களிடையே நல்ல புகழைப் பெற்று வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டயட் முறை

டயட் முறை

மனிதர்களின் வயது அதிகரிக்கும்போது அவர்களை அதிகம் பாதிக்கும் டிமென்ஷியா மற்றும் மூளை ஆரோக்கியத்தில் குறைபாடு போன்றவற்றை குறைக்கும் நோக்கத்திலேயே இந்த டயட் உருவாக்கப்பட்டது. இரண்டு விதமான டயட்டின் ஒருங்கிணைப்பின் காரணமாக, MIND டயட் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய் பாதிப்பைக் தடுக்கவும் நல்ல முறையில் உதவுகின்றன. நீரிழிவு மற்றும் இதர பல்வேறு நோய்களுக்கான ஒரு தீர்வாகவும் MIND டயட் விளங்குகிறது. மெடிட்டரேனியன் மற்றும் டாஷ் ஆகிய இரண்டு டயட்டும் தனித்தனியாக மனித உடலுக்கு பல்வறு நன்மைகளைப் புரிந்தாலும், ஒரு நபரின் அறிவாற்றல் மற்றும் மூளை செயல்பாடுகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்படுவதில்லை.

MOST READ: ஒரு வாரத்துல நீங்க கலராகணுமா? கொய்யாப்பழ தோலை இப்படி அப்ளை பண்ணுங்க...

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம்

எனவே, மூளை செயல்பாடுகளை மேம்படுத்தவும், டிமேன்ஷயாவைத் தடுக்கவும் குறிப்பாக ஒரு டயட் உருவாக்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் நினைத்தனர். இந்த இரண்டு வகை டயட்களும் பொதுவாக முழு தானியங்கள், அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. ஆகவே MIND டயட் குறைந்த அளவு சோடியம், சர்க்கரை மற்றும் சுத்தீகரிக்கப்பட்ட தானியம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. மேலும் உயர் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், துரித உணவுகள் மற்றும் பொரித்த உணவுகளை மிகக் குறைந்த அளவில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

MIND டயட்டில் தினசரி கலோரி உட்கொள்ளல் அளவு அல்லது குறிக்கோள் என்று எதுவும் விதிக்கப்படவில்லை. மேலும், குறிப்பிட்ட நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும் என்ற விதி இல்லை. ஒரு தனி நபர் தனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதே நேரத்தில் அவர் தான் சாப்பிடும் உணவு குறித்த ஒரு சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இந்த MIND டயட் உணர்த்துகிறது.

கட்டுப்பாடுகள் அற்றது

கட்டுப்பாடுகள் அற்றது

மற்றுமொரு சந்தோஷமான செய்தி என்னவென்றால், இந்த டயட் பின்பற்றப்படும்போது, உங்களுக்கு மிகவும் விருப்பமான சிற்றுண்டிகளை உண்பது தவிர்க்கபடுவதில்லை. ஏனென்றால், இந்த டயட்டில் எல்லா வித உணவுகளும் பரிந்துரைக்கப்படுகிறது. மூளையின் செயல்பாடுகள் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் உணவுகளை உட்கொள்ளும் அளவைக் குறைப்பது மற்றும் அறிவாற்றல் அளவை மேம்படுத்தும் உணவு வகைகளை அதிகரிப்பது போன்றவை இந்த டயட்டின் முக்கிய நோக்கமாக உள்ளது.

ஒரு நபர் அதிக அளவு இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ளவும், ஆரோக்கியமற்ற கொழுப்பு உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சி போன்ற உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும் இந்த ஆரோக்கியமான டயட்

ஊக்குவிக்கிறது. இந்த டயட்டை ஒரு பக்தி மார்க்கத்தைப் பின்பற்றும் அதே சிரத்தையோடு பின்பற்றுவதால் எளிமயான முறையில் உங்கள் மூளையை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடியும். இதனால் உங்கள் மூளை, வயது முதிர்வு மற்றும் இதர காரணிகளின் அறிகுறி மற்றும் அடையாளங்களால் பாதிக்கப்படுவதில்லை.

இலையுடைய பச்சைக் காய்கறிகள்

இலையுடைய பச்சைக் காய்கறிகள்

பரட்டைக்கீரை, ப்ரோகோலி, பசலைக் கீரை, கொலார்ட் போன்றவற்றை ஒரு வாரத்தில் 6 அல்லது அதற்கு அதிகமான தடவை உட்கொள்ளலாம்.

மற்ற காய்கறிகள்

மற்ற காய்கறிகள்

அதிக ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் குறைந்த கலோரிகள் காரணமாக, மாவுச்சத்து அல்லாத உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இவற்றை ஒரு நாளில் ஒரு முறை உட்கொள்ளலாம்.

MOST READ: 4 சொட்டு நல்லெண்ணெய உங்க சிறுநீர்ல விடுங்க... என்ன நோய் இருக்குனு தெரிஞ்சிடும்...

பெர்ரி

பெர்ரி

ஸ்ட்ரா பெர்ரி, ப்ளுபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளக் பெர்ரி (அன்டி ஆக்சிடென்ட்) போன்ற பழங்களை ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.

நட்ஸ்

நட்ஸ்

குறிப்பிட்ட எந்த ஒரு வகை நட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த டயட் பரிந்துரைக்கவில்லை. எனவே, பல வகையான நட்ஸ் எடுத்துக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஒரு வாரத்தில் 5 அல்லது அதற்கு அதிகமான முறை இந்த நட்ஸை எடுத்துக் கொள்ளலாம்.

முழு தானியம்

முழு தானியம்

முழு தானியங்களான ஓட்ஸ், கம்பு, பழுப்பு அரிசி, முழு கோதுமை பாஸ்தா, 100% முழு கோதுமை பிரட் போன்றவற்றை உங்கள் உணவில் இணைத்துக் கொள்ளலாம். ஒரு நாளில் மூன்று முறை இதனை எடுத்துக் கொள்ளலாம்.

பீன்ஸ்

பீன்ஸ்

பயறு, சோயா பீன்ஸ், பச்சைப் பயறு போன்ற எல்லா வகையான பயறு வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கு முறை இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

கோழி இறைச்சி

கோழி இறைச்சி

ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு முறை கோழி இறைச்சி எடுத்துக் கொள்ளலாம். வான்கோழியும் நீங்கள் விருப்பபட்டால் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பொரித்த கோழியை உட்கொள்வதை MIND டயட் பரிந்துரைக்கவில்லை.

MOST READ: இதுல தினம் ஒரு பூவ பாலில் போட்டு குடித்தால் விந்து பெருகும்... வீரியமும் அதிகரிக்குமாம்...

மீன்

மீன்

சாலமன், சார்டின்,டூனா, திரௌட், கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு மீன்களைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ளலாம். இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மிக அதிக அளவு நிறைந்துள்ளது. ஒரு வாரத்தில் குறைந்தது ஒரு முறை மீன் சாப்பிடலாம்.

ஒயின்

ஒயின்

ரெட் ஒயின் பருகலாம். சிவப்பு ஒயினில் உள்ள ரிசர்வடால் என்னும் கூறு அல்சைமர் -பாதிப்பில் இருந்து மூளையைப் பாதுகாக்கிறது. ஆனால் ஒரு நாளில் ஒரு கிளாஸ் ரெட் ஒயின் மட்டுமே பருக வேண்டும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

உங்கள் சமையலில் முக்கியமான எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்யை மட்டுமே பயன்படுத்தவும்.

சீஸ்

சீஸ்

ஒரு மாதத்தில் மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே சீஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.

MOST READ: சாப்பிட்டதும் வயிற பிசையுதா? சும்மா விட்றாதீங்க... அது வைப்பிள் நோயாகூட இருக்கலாம்...

வெண்ணெய் மற்றும் தாவர வெண்ணெய்

வெண்ணெய் மற்றும் தாவர வெண்ணெய்

சமையலில் வெண்ணெய்க்கு மாற்றாக ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். தினமும் ஒரு ஸ்பூன் அளவிற்கு குறைவாக வெண்ணையை உட்கொள்ளலாம்.

பொரித்த உணவுகள்

பொரித்த உணவுகள்

ஒரு மாதத்தில் மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே பொரித்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாஸ்ட்ரி மற்றும் இனிப்புகள்

பாஸ்ட்ரி மற்றும் இனிப்புகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள், மற்றும் இனிப்பு வகைகளான ஐஸ் க்ரீம், ப்ரௌனி , குக்கி, டோனட், கேன்டி போன்றவற்றைத் தவிர்க்கவும். ஒரு வாரத்தில் நான்கு முறைகளுக்கு குறைவாக இவற்றை மிகக் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளலாம்.

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, செம்மறி ஆட்டிறைச்சி ஆகியவை சிவப்பு இறைச்சி வகையைச் சேரும். ஒவ்வொரு வாரமும் மூன்று முறைக்கு மேல் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

MOST READ: மீன் சாப்பிடாதவங்க அதே சத்துக்களை பெறணுமா? இந்த 5 பொருள சாப்பிடுங்க...

MIND டயட்டின் நன்மைகள்

MIND டயட்டின் நன்மைகள்

2015ம் ஆண்டு இந்த டயட் கண்டறியப்பட்டது. அன்று முதல் இன்று வரை வயது முதிர்ந்தவர்களுக்கான அறிவாற்றல் செயலிழப்பில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும் ஒரு வெற்றிகரமான டயட் திட்டமாக இந்த டயட் இருந்து வருகிறது. MIND டயட்டின் தாக்கம் குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில், இந்த டயட் பின்பற்றாதவர்களை ஒப்பிடும்போது, இந்த டயட்டை கடுமையாக பின்பற்றுகிறவர்கள் 7.5 வயது இளமையாக இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டது.

அறிவாற்றல் செயல்பாடுகளில் உண்டாகும் குறைகளைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், இன்னும் பல்வேறு நன்மைகளைத் தருகிறது MIND டயட். அவற்றுள் சில நன்மைகளை இப்போது காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is MIND Diet And Benefits

The MIND diet is a hybrid of the Mediterranean and DASH diets with its goal to reduce dementia and the decline in brain health that usually occurs as we age. Foods emphasized on the MIND diet include whole grains, berries, green, leafy vegetables, other vegetables, olive oil, poultry and fish.
Story first published: Friday, May 17, 2019, 15:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more