For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடற்பயிற்சினா ஓடற படுசோம்பேறியா நீங்க... இதோ படுத்துகிட்டே ஜாலியா பண்ற சில உடற்பயிற்சி உங்களுக்காகவே

சோம்பேறிப் பெண்கள் என்ன மாதிரி உடற்பயிற்சிகளைச் செய்யலாம் என்பது பற்றி இந்த பகுதியில் விளக்கமாகப் பார்க்கலாம். அதுபற்றிய ஒரு ஜாலியான தொகுப்பு.

|

இவருக்கு ஒவ்வொரு நாளில் இறுதியிலும் "எனக்கு மட்டும் ஏன் இது எதுவுமே நடப்பதில்லை?" என்ற கேள்வி எழும். எந்த ஒரு முயற்சியும் இல்லாமல் மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்த சோம்பேறிப் பெண்களை என்னவென்று சொல்வது? இந்த நிலை நீடிக்கும்போது அதிகப்படியான யோசனை, மனச்சோர்வு, தன்னம்பிக்கையில் குறைபாடு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். கவலை வேண்டாம்! இன்னும் தாமதிக்க வேண்டாம். இந்த பயிற்சிக்காக உங்களின் சில நிமிடங்களை மட்டும் ஒதுக்கினால் போதும்.

Lazy girl workouts

இவருக்கு ஒவ்வொரு நாளில் இறுதியிலும் "எனக்கு மட்டும் ஏன் இது எதுவுமே நடப்பதில்லை?" என்ற கேள்வி எழும். எந்த ஒரு முயற்சியும் இல்லாமல் மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்த சோம்பேறிப் பெண்களை என்னவென்று சொல்வது? இந்த நிலை நீடிக்கும்போது அதிகப்படியான யோசனை, மனச்சோர்வு, தன்னம்பிக்கையில் குறைபாடு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். கவலை வேண்டாம்! இன்னும் தாமதிக்க வேண்டாம். உங்களுக்கு ஏற்ற சில அற்புதமான உடற்பயிற்சிகளும் சில வொர்க் அவுட் குறிப்புகளும் இங்கே தரப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோம்பேறிகள்

சோம்பேறிகள்

சோம்பேறிப் பெண்களுக்கான உடற்பயிற்சி மற்றும் வொர்க் அவுட் டிப்ஸ் :

நாம் இங்கு சில சிறப்பான உடற்பயிற்சிகளைக் காணவிருக்கிறோம். நீங்கள் சோம்பேறியாக இருந்தாலும், இந்த பயிற்சிக்காக உங்களின் சில நிமிடங்களை மட்டும் ஒதுக்கினால் போதும்.

வாருங்கள் சோம்பேறிப் பெண்களே... உங்களுடைய சிறிய முயற்சி மிகப் பெரிய விளைவுகளை உங்களுக்குக் கொடுக்கும். இதற்காக நீங்கள் ஜிம் செல்ல வேண்டாம் . உங்கள் தூக்க நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், உங்கள் கைகளை உயர்த்தி, "நான் இதனைகே கற்றுக் கொள்ளத் தயார்" என்பது மட்டுமே ..

MOST READ: சாவு வீட்டில் பறை வாசிக்கும் பழக்கம் எப்படி வந்துச்சுனு தெரியுமா? கேட்டா ஆச்சர்யப்படுவீங்க...

க்லம்

க்லம்

Image Courtesy

இந்த உடற்பயிற்சி விதத்தைப் பார்க்கும்போது, இதை சோம்பேறிப் பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது போல் தோன்றும். தூங்கும் நிலையிலேயே இந்த உடற்பயிற்சியை நீங்கள் செய்யலாம். கால் தொடைப்பகுதியின் கொழுப்பு கரைந்து ஒல்லியான கால்கள் பெற இந்த பயிற்சியை நீங்கள் செய்து வரலாம். அழகான கால்களைப் பெற இந்த பயிற்சியை முயற்சித்து பாருங்கள். மாற்றம் நிச்சயம் உண்டு.

நீங்கள் செய்ய வேண்டிய முறை

1. உங்கள் தலையில் கைவைத்துக் கொண்டு ஒரு பக்கமாக கால் முட்டிகளை வளைத்துக் கொண்டு படுத்துக் கொள்ளுங்கள்.

2. வளைவாக இருக்கும் கால்களை அகலமாக மேலே விரித்து மறுபடி ஒன்றாக சேருங்கள்.

3. இதனை தொடர்ந்து 15 முறை செய்யுங்கள்.

4. மறுபக்கம் திரும்பி இதே முறையை பின்பற்றுங்கள்.

முழங்காலை நீட்டி மடக்குவது

முழங்காலை நீட்டி மடக்குவது

Image Courtesy

1. முதுகை நேராக வைத்துக் கொண்டு அமருங்கள் (முதுகை வளைத்து உட்கார வேண்டாம்)

2. கைகளை பின்புறமாக தரையில் வைத்துக் கொள்ளுங்கள்.

3. உங்கள் வயிற்றைச் சுருக்கி உங்கள் முழங்கால்களை உள்ளே இழுத்து பின்பு வெளியில் நீட்டி விடுங்கள்.

4. இப்படி முழங்கால்களை உள்ளே இழுத்தும் நீட்டியும் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.

லெக் லிப்ட்

லெக் லிப்ட்

Image Courtesy

அடிவயிறு மற்றும் முக்கிய தசைகளுக்கு மாற்றங்கள் ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கபட்டது இந்த கால் பயிற்சி . சில உடற்பயிற்சிகள் உங்கள் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும். அந்த விதத்தில் கால் பயிற்சியும் ஒன்று.

1. படுத்துக் கொண்டு ஏதாவது ஒரு புறம் திரும்பிக் கொள்ளுங்கள்.

2. கால்களை நேராக நீட்டிக் கொள்ளுங்கள்.

3. மேலே இருக்கும் காலை உயரமாக தூக்குங்கள்.

4. பின்பு அந்த காலை கீழே இறக்குங்கள்.

5. இப்படி காலைத் தூக்கி இறக்கி தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.

MOST READ: தண்ணீரில் மூழ்கியவர்களுக்கு என்ன முதலுதவி செய்தால் உயிர் பிழைக்க வைக்கலாம்?

மெர்மைடு க்ரன்ச்

மெர்மைடு க்ரன்ச்

Image Courtesy

இந்த பயிற்சியை நீங்கள் செய்வதால் உங்கள் உடல் வடிவம் மேம்படும் . தசைகள் வலிமையாகும். தசைகளின் நெகிழ்வுத்தன்மை வளர்வதற்கு இந்த பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்து வரலாம்.

1. படுத்துக் கொண்டு ஏதாவது ஒரு புறம் திரும்பிக் கொள்ளவும்.

2. கால்கள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

3. கை முட்டியை தரையில் ஆதரவுக்காக வைத்துக் கொள்ளவும்.

4. இப்போது இரண்டு கால்களையும் ஒன்றாக மேலே தூக்கி இறக்கவும்.

5. மறுபுறம் திரும்பியும் இதே பயிற்சியைத் தொடரலாம்.

ட்ரன்க் ட்விஸ்ட் பயிற்சி

ட்ரன்க் ட்விஸ்ட் பயிற்சி

Image Courtesy

இந்த பயிற்சியை செய்யும்போது உங்கள் அடிவயிறு மற்றும் கால்களை நீட்டிக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் ஒட்டுமொத்த உடலும் பிட்டாகும். சரியான உடல் செயல்பாடு இல்லாமல் எரியாமல் இருக்கும் கலோரிகளை எரிக்க இந்த பயிற்சி உதவும்.

1. கீழே படுத்து, கைகளை நீட்டிக் கொள்ளுங்கள்.

2. உங்கள் உடலை ஸ்திரமாக வைத்து கால்களை இணைத்து இடப்பக்கமாக கொண்டு செல்லுங்கள்.

3. பிறகு கால்களை வலப்பக்கமாக கொண்டு செல்லுங்கள்.

4. தொடர்ச்சியாக இந்த பயிற்சியை 5 முறை செய்யுங்கள்.

பிரிட்ஜ் பயிற்சி

பிரிட்ஜ் பயிற்சி

Image Courtesy

உங்கள் பிட்டப் பகுதியை வடிவமைக்க இந்த பயிற்சி உதவுகிறது. அழகான வடிவம் பெற மட்டுமில்லாமல், தசை வலிமையை அதிகரிக்கவும் இந்த பயிற்சி உதவுகிறது. இந்த பிரிட்ஜ் பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதால் முட்டி வலி குறையும். நீண்ட நேரம் உட்கார்ந்த படி வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்ற ஒரு பயிற்சி இது.

1. கீழே படுத்து உங்கள் கைகளை தரையில் படுமாறு வைத்துக் கொள்ளுங்கள்.

2. மெதுவாக உங்கள் பிட்டப் பகுதியை பூமியில் படாதவாறு உயர்த்துங்கள். (தேவைப்பட்டால் தோள்களின் உதவியுடன் இதனை செய்யலாம்)

3. பிறகு மெதுவாக பிட்டப் பகுதியை இறக்குங்கள்.

சிசர் கிக்

சிசர் கிக்

Image Courtesy

உங்கள் உடலின் கீழ் பகுதிகள் மற்றும் கால்கள் இந்த பயிற்சியால் பலம் பெறும். உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்க இது ஒரு மிகச் சிறந்த பயிற்சி. ஆகவே இதனை செய்யத் தவற வேண்டாம்.

உங்கள் உடல் வடிவத்தை மேம்படுத்துவதோடு, முதுகு வலியும் குறையும். இது ஒரு நன்மை தரும் பயிற்சியாகும்.

1. கீழே படுத்து உங்கள் கைகளை தரையில் வைத்துக் கொள்ளவும்.

2. கால்களை நீட்டிக் கொள்ளவும்.

3. இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் மேலே தூக்கி பின்பு இறக்கவும்.

4. பிறகு ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி தூக்கி இறக்கலாம்.

5. 15 முறை இதனை முயற்சிக்கலாம்.

MOST READ: பங்குனி வெயில் பட்டைய கௌப்புது... சூரிய பகவான் எந்த ராசிய காப்பாத்துவார்? யாரை கைவிடுவார்?

இசையுடன் பயிற்சி செய்யுங்கள்

இசையுடன் பயிற்சி செய்யுங்கள்

இசையுடன் செய்யும் எந்த ஒரு செயலும் தவறாக முடியாது. இசையும் உடற்பயிற்சியும் ஒரு சிறந்த ஜோடி ஆகும். இதனால் உங்கள் சந்தோஷம் அதிகரிக்கும். இதனால் மன அமைதி மற்றும் நெகிழ்ச்சி கிடைக்கும். நீங்கள் ஒரு இசைப்பிரியர் என்றால் இசை இல்லாமல் உங்களால் உடற்பயிற்சி பற்றி நினைக்கவும் முடியாது. இசையை ரசித்தபடி, உடற்பயிற்சியில் கவனம் செலுத்துங்கள்/

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lazy girl workouts - Fun and Fruitful Exercises for Lazy Girls

Workout schedules are just meant to be stuck on her wardrobe. She waits for that tomorrow to start the diet-She has no idea when that tomorrow comes. Alarms are set to switch off the sound but not the sleep.
Story first published: Monday, March 18, 2019, 14:38 [IST]
Desktop Bottom Promotion