Just In
- 2 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
- 7 hrs ago
இந்த ராசிக்காரங்களுக்கு குருபகவான் முழு யோகங்களையும் வாரி வழங்குவார் தெரியுமா?
- 19 hrs ago
வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...!
- 19 hrs ago
ஆண்களே… உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?...தீர்வுகளை தெரிந்துகொள்ளுங்கள்…!
Don't Miss
- News
17 பேர் பலியாக காரணமான சுவர்.. 'தீண்டாமை சுவர்' என வழக்கு.. ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு
- Automobiles
மஹிந்திரா 2019 நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம்... பலேரோ, ஸ்கார்பியோ மாடல்கள் முன்னிலை...
- Movies
இவரும் இருக்காராமே... அஜித்தின் 'வலிமை'யில் விஜய்யின் ஒல்லி பெல்லி ஹீரோயின்
- Finance
ஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..!
- Technology
முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு
- Education
CBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு
- Sports
நம்பர் 1 இடத்தை அப்படிலாம் விட்ற முடியாது.. 7 சிக்ஸ் விளாசி ரோஹித்துடன் முட்டி மோதிய கேப்டன்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெறித்தனமா சாப்பிட்டேன்... ஆனா தினம் 2 கிளாஸ் இந்த டீ குடிச்சு ஒரே மாசத்துல 8 கிலோ குறைஞ்சேன்
உடல் பருமன் தான் உலகம் முழுவதும் உள்ளவர்களை அச்சுறுத்துகிற விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் இதய நோயால் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள். அந்த இதய நோய்க்கு மிக அடிப்படையான ஆதாரமாக இருப்பதே இந்த உடல் பருமன் தான். இதற்கு மருத்துவ சிகிச்சைகள் பல இருந்தாலும் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. அதனால் இயற்கையாக கிரீன் டீ போன்ற உணவக் கட்டுப்பாடுகள் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் குறைப்பது தான் நல்லது.

டயட்டுகள்
டயட் என்றால் நாம் ஏதோ பெரிய கஷ்டமான விஷயம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் டயட் என்பதன் பொருள் என்னவென்றால் உணவுக் கட்டுப்பாட்டு முறை என்பது தான். இன்றைய காலகட்டத்தில் டயட்டுக்கா பஞ்சம். எக்கச்சக்க டயட்டுகள் இருக்கின்றன. அதிலும் எடையைக் குறைப்பதற்கென்று மிலிட்டரி டயட், பேலியோ டயட், கீட்டோ டயட் என எக்கச்சக்க டயட்டுகள் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனாலும் அவ்வளவு பெரிய ரிசல்ட் நிரந்தரமாகக் கிடைப்பதில்லை.
MOST READ: தர்பூசணி விதைய தூக்கி வீசாதீங்க... அத வெச்சு இத்தன நோயை குணப்படுத்தலாம்

சிம்பிள் டீ
அப்படி சிலர் எல்லா டயட்டையும் ஃபாலோ பண்ணிட்டேன். ஆனா என் தொப்பை என்ன ஃபாலோ பண்ணிக்கிட்டே தான் இருக்கு என்று புலம்புபவர்கள் பலரையும் நாம் பார்த்திருப்போம். அவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாகவாகவும் அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு மேஜிக்கல் மாற்றத்தை இந்த மட்டுமே ஏற்படுத்தும். உங்களுக்குப் பிடித்த எல்லாவற்றையும் சாப்பிடலாம். ஆனா இந்த டீயை மடடும் ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை குடிங்க போதும். எப்பேர்ப்பட்ட பானை வயிறு ஒரே மாசத்துல குறைஞ்சு நீங்க சிக்குனு ஆயிடுவீங்க. இது சொந்த அனுபவத்துல சொல்றது. நம்பி இறங்குங்க.

கருஞ்சீரக டீ தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்
புதினா - ஒரு கைப்பிடியளவு
இஞ்சி - 1 இஞ்ச் அளவு
தேன் - 2 ஸ்பூன்

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
தண்ணீர் சூடேறியதும் அதில் 2 ஸ்பூன் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அப்படி கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இஞ்சியைத் தோல் சீவி நன்கு நசுக்கி (தட்டி) அதில் போட வேண்டும்.
அதன்பின் அடுப்பை சிறு தீயில் குறைத்துக் கொண்டு, அதில் புதினா இலைகளையும் கொஞ்சம் ஒன்றிரண்டாக நசுக்கியோ கசக்கியோ அதில் போட்டு கொதிக்க விட வேண்டும்.
புதினா போட்டு இரண்டு நிமிடங்களில் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.
MOST READ: விந்து கொஞ்சமா வர்றதுக்கு காரணம் என்ன தெரியுமா? நீங்க பண்ற இந்த ஒரே தப்புதான்...

எப்படி பருகுவது
இப்போது டீ பாதி தயாராகிவிட்டது. இதை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் டீக்கு அரை எலுமிச்சை போதுமானதான இருக்கும். அரை எலுமிச்சையை பிழிந்து விட்டு அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடியுங்கள்.
அதேபோல் மாலையோ இரவிலோ இன்னொரு கிளாஸ் குடிக்க வேண்டும்.
காலையிலேயே மொத்தமாகப் போட்டு வைத்துக் கொண்டு, குடிக்கிற பொழுது மட்டும் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம். தவறில்லை.
முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இதை சூடாக மட்டும் தான் குடிக்க வேண்டும். அதனால் ஏற்கனவே போட்டு வைத்த டீயை குடிப்பதாக இருந்தால் ஒவ்வொரு முறையும் சூடுபடுத்திக் குடிக்க வேண்டும்.

நோ டீ, காபி
இந்த எடை குறைக்கும் பானத்தைக் குடிக்கும் காலங்களில் டீ, காபியை எக்காரணத்தைக் கொண்டும் குடிக்கக் கூடாது.

கருஞ்சீரகம்
கருஞ்சீரகம் மிக அற்புதமான மூலிகை. தலைமுடி உதிர்தலைத் தடுப்பது முதல் சருமப் பிரச்சினை, உடல் எடை பராமரிப்பு, சிறுநீரகப் பிரச்சினை, இதயக் கோளாறுகளை சரி செய்வது, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த என ஏராளமான நன்மைகள் இதில் கொட்டிக் கிடக்கின்றன. இதனுடைய நன்மைகளைப் புரிந்து கொண்டாலே ஒரே மாதத்தில் 6 முதல் எட்டு கிலோ வரை எளிதாக எடையை குறைத்து பத்தியம் இல்லாமல் பிடித்ததை சாப்பிட்டு சிக்கென்று இருக்க முடியும்.