For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை குறைத்து கச்சிதமாக வைக்க உதவும் 10 சூப் வகைகள்!!

சுவையான 10 வகை சூப்களை பயன்படுத்தி உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு.

|

சுடச்சுட சூடான சூப் என்றாலே எல்லார்க்கும் ரொம்ப பிடிக்கும். அதிலும் அது எடையை குறைக்கும் சூப் என்றால் சொல்லவே வேண்டாம் இனி நம்ம டயட்டில் அதுவும் அடங்கி விடும்.

இந்த வகை சூப்களில் ஊட்டச்சத்துக்களோடு நமது உடலை கச்சிதமாக வைக்கும் பொருட்களும் அடங்கியது தான் இதன் சிறப்பு.

Top 10 Best Soups for Weight Loss

எனவே அப்படிப்பட்ட எடையை குறைக்கும் 10 வகையான சூப் வகைகளை பற்றி தான் இக்கட்டுரையில் காண உள்ளோம். இதை தினமும் உங்கள் உணவில் சேர்த்து பயன் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொத்தமல்லி மற்றும் லெமன் சூப்

கொத்தமல்லி மற்றும் லெமன் சூப்

இந்த சூப் செய்வதற்கு ரெம்ப எளிதான விட்டமின் சி அதிகமாக அடங்கிய சூப் வகையாகும். ஒரு பெளல் கொத்தமல்லி மற்றும் லெமன் சூப் ஆரோக்கியத்தை பரிசளிக்கும் மிகச் சிறந்த உணவாகும். இவைகள் நமது உடலில் உள்ள இரத்த வெள்ளையணுக்களை அதிகரித்து ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது.

இதனுடன் லேசான கலோரி உணவையும் தினமும் எடுத்துக் கொண்டு வந்தால் உங்கள் எடை குறைவது நிச்சயம்.

(சூப் ரெசிபியை இங்கே காணவும்)

இன்டோ சைனீஸ் மான்செவ் சூப்

இன்டோ சைனீஸ் மான்செவ் சூப்

நீங்கள் இதுவரை மான்செவ் சூப் சாப்பிட்டது இல்லை என்றால் கண்டிப்பாக இந்த யம்மியான டேஸ்டியான சூப்பை சாப்பிடுங்க. உலகளவில் சுவையான சூப் என்றால் இந்த மான்செவ் சூப் தான்.

இந்த சூப்பின் மேல் அப்படியே வறுத்த நூடுல்ஸ் போட்டு நாவை ஊற வைக்கும் சுவையுடன் இதை பரிமாறுவார்கள்.

இந்த சுவையான சூப் குறைந்த கலோரியை கொண்டு இருப்பதால் நீங்கள் இதை உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ளலாம். ஆனால் அதிகளவில் நூடுல்ஸ் எடுப்பதை தவிர்க்கவும்.

(சூப் ரெசிபியை இங்கே காணவும்)

மேக்ஸிகன் டார்டிலா சூப்

மேக்ஸிகன் டார்டிலா சூப்

மேக்ஸிகன் சூப் எல்லாருக்கும் விருப்பமான சூப் ஆகும். இது கரம் மிளகு, அவகேடா மற்றும் மேக்ஸிகன் தக்காளியை கொண்டு செய்யப்படும் ஒரு அருமையான சூப் ஆகும்.

சமைத்த டார்டிலா கார்ன சிப்ஸ், வெஜ்ஜூஸ் மற்றும் சிக்கன் இவற்றை கொண்டு கிளாசிக் சிக்கன் சூப் கூட நாம் தயாரிக்கலாம்.

(சூப் ரெசிபியை இங்கே காணவும்)

 சிக்கன் மஸ்ரூம் ப்ரோத்

சிக்கன் மஸ்ரூம் ப்ரோத்

இந்த எளிமையான ப்ரோத் சிக்கன் சாறு, மஸ்ரூம் மற்றும் காய்கறிகள் கொண்டு செய்யப்படுகிறது. உங்கள் பசியை போக்கும் இந்த எளிமையான சுவையான சூப் அதே நேரத்தில் உங்கள் எடையையும் வேகமாக குறைக்கிறது.

(சூப் ரெசிபியை இங்கே காணவும்)

பீனங் லக்ஷா சூப்

பீனங் லக்ஷா சூப்

தென் கிழக்கு ஆசியா நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற மக்கள் இந்த பீனங் சூப்பை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த சுவையான சூப் ஒரு வித்தியாசமான சுவையையும் கொடுக்கும்.

முதலில் காரமான தேங்காய் பாலை சமைத்து ஒரு ஆடம்பர சுவையை கொடுக்கின்றன.

அப்புறம் புளி கரைசல் சேர்த்து, மீன் சாற்றை சேர்த்து ஓரு வித்தியாசமான கலோரி உணவை தருகின்றன.

(பீனங் லக்ஷா காய்கறி சூப் ரெசிபியை இங்கே காணவும்)

இஞ்சி வெஜிடபிள் சூப்

இஞ்சி வெஜிடபிள் சூப்

இஞ்சி ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியது. இந்த இஞ்சி உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றுவதால் நமது எடையை குறைக்க உதவுகிறது.

எனவே இந்த இஞ்சி வெஜிடபிள் சூப் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

சிக்கன் நூடுல்ஸ் சூப்

சிக்கன் நூடுல்ஸ் சூப்

இந்த சுவையான அசைவ சூப் எல்லார் மனதிற்கும் பிடித்தமான ஒன்றும் கூட.

சிக்கனில் உள்ள புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள நூடுல்ஸ் சேர்ந்து இந்த சூப் ஒரு சரிவிகித உணவாக அமைகிறது. எனவே உங்கள் எடையை குறைக்க மிகச் சிறந்த வழியாகும்.

 தக்காளி சூப்

தக்காளி சூப்

மற்ற சூப்களை காட்டிலும் ரெம்ப முக்கியமான சூப் தான் இந்த தக்காளி சூப்

அதிக அளவில் விட்டமின் சி அடங்கிய இந்த சூப் கலோரி குறைந்த உணவு என்பதால் உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

பிரக்கோலி மற்றும் சிப்பி செல் சூப்

பிரக்கோலி மற்றும் சிப்பி செல் சூப்

கடலில் உள்ள சிப்பியின் செல் மற்றும் பிரக்கோலி கொண்டு இந்த சூப் தயாரிக்கப்படுகிறது இந்த பொருட்கள் அதிகமான விலையுடன் காணப்படுவதால் இதை தினமும் தயாரிக்க முடியாது.

ஆனால் உங்கள் இரவு நேர உணவில் வெளியிடங்களுக்கு செல்லும் போது இந்த சூப்பை எடுத்து பயன் பெறலாம். கலோரியும் குறைவாக கிடைத்து உடல் எடையும் குறையும்.

கீரை மற்றும் க்ரீம் சூப்

கீரை மற்றும் க்ரீம் சூப்

பொதுவாக உடல் எடை குறைப்பவர்கள் க்ரீம்யை சேர்க்க பயப்படுவர். ஏனெனில் அது அதிகமான கலோரியை கொண்டு இருப்பதால் அவர்கள் அதை விரும்பமாட்டார்கள்.

ஆனால் இந்த சூப்பில் நாம் கீரையையும் க்ரீமும் சேர்த்து செய்வதால் மிகவும் நல்லது. கீரையின் ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடல் எடையை குறைக்க பெரிதும் பயன்படும். அதே சமயத்தில் க்ரீம் உங்களுக்கு ஒரு தனிச் சுவையை கொடுத்து செல்லும்.

ஆனால் உங்களுக்கு தேவையான அளவு க்ரீம் மட்டும் பயன்படுத்துவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Best Soups for Weight Loss

Top 10 Best Soups for Weight Loss
Story first published: Saturday, January 6, 2018, 17:33 [IST]
Desktop Bottom Promotion