For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடுத்தர வயசு தொப்பையை எப்படிதாங்க குறைக்கிறது?... அட இப்படிதாங்க...

இளம் வயதில் உடல் எடையைக் கூட்டுவதோ குறைப்பதோ மிக எளிது. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டியவுடன் எடையைக் குறைப்பதோ கூட்டுவதோ மிக மிக கடினம்.

|

நவ நாகரீக யுகம். யுவன்களும், யுவதிகளும் எதையுமே மனதுக்குள் பொருட்படுத்துவதாக இல்லை. போகிற போக்கில் அனைத்தையும் லவட்டுகிறார்கள். இதை கௌரமாக வேறு கருதுகிறார்கள். உணவு முறையில் இவ்வளவு அலட்சியமா. இதேபோல் எரிச்சல், ஏமாற்றம், மன அழுத்தங்களும் அவர்களை கவ்விக் கொள்கிறது. கால ஓட்டங்கள் அவர்களின் உடல் நிலையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. இப்போது நடுத்தர வயது.

Tips for Middle Aged Men to Lose Weight in tamil

உடலளவில் வளர்சிதை மாற்றங்கள். உடம்பெல்லாம் ஒரே வலி. பேருந்தில் ஏறினால் நிற்க முடியவில்லை. இடுப்பு அந்த அளவுக்கு அவர்களை சுருட்டிப்போடுகிறது. பொழிகாளை மாதிரி திரிந்தவனுக்கு இப்போது ஆரோக்கிய குறைபாடு. வீடும் மருத்துவமனையும் பாடாய்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நடுத்தர வயது எடை

நடுத்தர வயது எடை

பயப்பட வேண்டாம். நடுத்தர வயதில் ஏற்படுகிற இந்த உடல் எடை அதிகரிக்கும் சிக்கல்களை எளிதாக தீர்த்துக் கொள்ள முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மிகச் சரியான உணவுக் கட்டுப்பாடு முறையைத் தேர்ந்தெடுப்பது தான். தினசரி மேற்கொள்கிற சில வழக்கமான உடற்பயிற்சிகளின் மூலமாக உங்கள் நெருக்கடிகளுக்கு தீர்வு கண்டு விடலாம். அதேநேரத்தில் மனமும், உடலும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அவற்றைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

உடல் மன ஆரோக்கியம்

உடல் மன ஆரோக்கியம்

நடுத்தர வயதில் ஏற்படும் மன அழுத்தங்கள்தான் உடலில் கொழுப்புகள் சேருகின்றன. இதிலிருந்து விடுபடும் திறனற்ற ஆண்கள் பல ஆபத்துக்களை சந்திக்க நேரிடும். இதய நோய், பக்கவாதம், புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களை உருவாக்கி விடும். கலோரிகள் உடலில் அதிகம் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் மனதையும், உடலையும் வலுவாக வைத்துக்கொண்டாலே 20 கிலோ வரை எடையை குறைக்க முடியும்.

தீவிரமான உடற்பயிற்சி - விளைவு

தீவிரமான உடற்பயிற்சி - விளைவு

தீவிரமான உடற்பயிற்சி உங்களை வாழ்க்கையை மேம்படுத்தும் என்று கருதி விடக்கூடாது என்கிறது ஆய்வுகள். சுவீடன் நாட்டைச் சேர்ந்த உப்சலா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில், 3 அல்லது 4 மணிநேரத்துக்கு மேலாக உடல் உழைப்பில் ஈடுபட்டவர்கள், விளையாட்டு அணியில் பங்கேற்றவர்கள், நீச்சலில் ஈடுபட்டவர்கள் ஆகியவர்களை விட, சிவனே என்று இருந்தவர்கள் 2 ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்ததாக தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகாலம் குடும்பத்தை பிரிந்து, உறவினர்களை விட்டு விலகி, உலகமெல்லாம் நிம்மதியற்ற சுற்றித்திரிந்த நிலையில் இப்போது உங்களுக்கு என்ன தேவையாக இருக்கிறது...

உணவு கட்டுப்பாடு அவசியமா

உணவு கட்டுப்பாடு அவசியமா

கொழுப்பை குறைப்பதற்கு பல்வேறு ஆலோசனைகள் தரலாம். அவையெல்லாம் இதற்கு உதவுமா என்பது தெரியவில்லை. நிம்மதி கூட மனிதனின் உடல் எடையைக் குறைக்கும். ஆதலால் உடல் நலத்தைப் பேணுகிற வகையில் டயட்டை கடைபிடியுங்கள்.

காய்கனிகள் - நல்ல உணவுமுறை

காய்கனிகள் - நல்ல உணவுமுறை

நாள் முழுவதும் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக்கொள்ளாதீர்கள். பழங்களை அதிகமாக உட்கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.இது போன்ற உணவுக் கட்டுப்பாடுகள் எடையை குறைக்க உதவிகரமாக இருக்கும். காய் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் எடையை குறைக்க முடியும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

மருத்துவ ஆலோசனை

மருத்துவ ஆலோசனை

திட்டமிட்ட ஒரு உணவுப் பழக்க வழக்கத்தை பின்பற்றுவதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும். நீங்கள் பின்பற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடலாம். மெதுவாக உடற்பயிற்சியை தொடங்குகள். இதிலும் அவசரப்பட்டு கடினமான முறையில் பயிற்சி மேற்கொண்டால் சிக்கல் எழும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips for Middle Aged Men to Lose Weight

Following our tips for men who want to lose weight after 40 can get you back in shape in a hurry, fat-burning machine.
Story first published: Monday, July 30, 2018, 17:02 [IST]
Desktop Bottom Promotion