For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எடையை வேகமாக குறைக்கும் ஸ்நேக் ஜூஸ் டயட் ... அனல்பறக்கும் ரிசல்ட்

இந்த ஸ்நேக் டயட்டின் மிக முக்கியமான அடிப்படையே, விரதத்தின் மூலம் எவ்வாறு உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தான்.

|

இந்த பரபரப்பாக, வேகமாக ஓடும் வாழ்க்கையில் முயற்சி, நம்முடைய உடல் எடையை ஃபிட்டாக வைத்துக் கொள்ள போதிய முயற்சி, டயட், உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. சில பேர் ஆரோக்கியமான வழியில் எடையைக் குறைக்க வேண்டுமென கடினமாகப் போராடுவதைப் பார்த்திருப்போம்.

health

அவர்கள் படும் கஷ்டத்தைப் பார்க்க நமக்கே பாவமாக இருக்கும். ஆனால் தேவையில்லாத என்னென்னவோ வழிகளைப் பின்பற்றுவதைவிட, சில வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால் உடல் எடையை ஆரோக்கியமாகக் குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் எடை

உடல் எடை

இருப்பதிலேயே எந்த பக்க விளைவுகளும் இல்லாத ஆரோக்கியமான விஷயமென்றால், அது தேவையில்லாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் செய்யும் சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்து கொண்டு, பேலண்ஸ்டு டயட் மூலம் குறைந்த கலோரிகள் கொண்டு உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கி, உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் கரைத்திட முடியும்.

வேகமான எடை குறைப்பு

வேகமான எடை குறைப்பு

சிலர் எவ்வளவு வேகமாக, உடல் எடையைக் குறைக்க முடியுமோ அவ்வளவு வேகமாகக் குறைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, என்னென்னவோ முயற்சி செய்து, தேவையில்லாத ரிஸ்க் எடுத்து எடையைக் குறைக்க முயற்சி செய்வார்கள். தேவையில்லாத சில விபரீத விஷயங்களையெல்லாம் முயற்சி செய்து, தோற்றுத்தான் போவார்கள்.

வேகமாக எடை குறையும் டயட்டுகள்

வேகமாக எடை குறையும் டயட்டுகள்

கொழுப்பை மிக வேகமாகக் குறைக்கும் டயட்டுகள் பல வகையுண்டு. அதில் மிக முக்கியமாக இருப்பது பீச் டயட், 5:2 டயட், 4 ஹவர் பாடி டயட், லோ கார்போஹைட்ரேட் டயட், ஸ்நேக் டயட் இப்படி பல டயட்களின் மூலம் நீங்கள் எதிர்பார்த்தது போலவே மிக வேகமாக உடல் எடையைக் குறைக்க முடியும். இதில் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று தான் ஸ்நேக் டயட். இதன்மூலம் மிக வேகமாக கிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும்.

பிரச்னைகள்

பிரச்னைகள்

பொதுவாக, அதிவேகமாக உடல் எடையைக் குறைக்கும் சில வகை டயட்டுகள் ஆரோக்கியக் கோளாறுகளை உண்டாக்கும். அந்த உணவுகளில் நம்முடைய உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் போதுமான அளவில் இருப்பதில்லை. நம்முடைய உடலுக்கு சரிவிகித ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. தற்காலிகமாக உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைத்து உடல் எடையைக் குறைக்கும். ஆனால் அதனால் ஏராளமான ஹார்மோன் பிரச்னைகள் உண்டாகும். அத்தகைய ஃபாஸ்ட் டயட்டில் மிக முக்கியமானதும் சுவாரஸ்யமானதுமாக இருக்கிற ஒரு டயட் என்றால் அது ஸ்நேக் டயட் தான். அந்த ஸ்நேக் டயட் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஸ்நேக் டயட்

ஸ்நேக் டயட்

இந்த ஸ்நேக் டயட்டின் மிக முக்கியமான அடிப்படையே, விரதத்தின் மூலம் எவ்வாறு உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தான். இந்த ஸ்நேக் டயட் மூலம் உடலின் அளவுக்கதிகமாக மிதமிஞ்சிய கொழுப்பை மிக வேகமாகக் கரையச் செய்து, உடலைச் சிக்கென வைத்துக் கொள்ளும். அந்த ஸ்நேக் டயட் பற்றித்தான் இப்போது விரிவாகப் பார்க்கிறோம். ஸ்நேக் டயட்ன்னா பாம்புக்கறி இல்லைன்னா பாம்பு ஜூஸ் ஏதாவது குடிக்கணும்னு தானே நினைக்கிறீங்க... அதுதான் இல்ல. பாம்பு மாதிரைி நிறைய சாப்பிடாம, விரதத்தின் மூலமாவே வெயிட் குறைக்கிறது தான் ஸ்நேக் டயட்.

கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்பு

இந்த ஸ்நேக் டயட்டை முதன்முதலில் கனடா நாட்டைச் சேர்ந்த அல்பெர்ட்டா மற்றும் கோல் ராபின்சன் என்ற இருவரும் இணைந்து கண்டுபிடித்தனர். ஆரம்ப காலத்தில் இந்த ஸ்நேக் டயட்டின் அற்புதம் பற்றி இவர்கள் விளக்கியபோது யாரும் நம்பவில்லை. அதன்பின், கண்கூடாக மற்றவர்களுக்கு நிரூபித்துக் காட்டியபின், இந்த ஸ்நேக் டயட் மக்கள் மத்தியில் மிகவேகமாகப் பரவி பேராதரவு பெற்றது. இவர்கள் இருவரும் ஃபிட்னஸ் ட்ரெயினர்கள். தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொருவருக்கும் உடலின் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்துவதற்காக வேறுவேறு விதமாக பயிற்சிகளும் டயட் பிளான்களும் கொடுக்க வேண்டிய கட்டாயத்தால், உதித்ததுதான் இந்த ஸ்நேக் டயட்.

பாலியல் நோய்கள்

பாலியல் நோய்கள்

ஆரம்ப காலத்தில் உடல் எடையை வேகமாகக் குறைப்பதற்காக கொடுக்கப்பட்ட இந்த ஸ்நேக் டயட் மூலம் உடல் எடை குறைந்ததோடு மட்டுமல்லாமல், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் பாலியல் தொற்றால் உண்டாகக்கூடிய ஹெர்பஸ் நோய்த்தொற்று நோயும் பரிபூரண குணமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சுயபரிசோதனை

சுயபரிசோதனை

இந்த ஸ்நேக் டயட்டை எடுத்த எடுப்பிலேயே தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ராபின்சன் பரிந்துரை செய்யவில்லை. ஏனெனில் அதன்மூலம் எந்தவித பக்க விளைவுகளோ உயிரிழப்புகளோ நேர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்தார். அதனால் தானே இதை முதலில் சோதித்துப் பார்க்க முடிவு செய்தார். தினமும் ஒருவேளை மட்டும் சில ஆண்டுகள் தொடர்ந்து உணவு சாப்பிட்டு வந்தார். மற்றபடி அன்றைய நாள் முழுவதும் வேறு எந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளாமல் வெறுமனே தண்ணீர் மற்றும் டீயை மட்டும் ஸ்நேக் ஜூஸில் சேர்த்துக் குடித்து வந்தார். என்னங்க! கேட்கவே ரொம்ப ஆர்வமா இருக்கா?... உண்மையாவே அந்த டயட்டை எப்படி ஃபாலோ பண்றதுன்னு கீழே பார்க்கலாம்.

டயட் முறை

டயட் முறை

முழுக்க முழுக்க விரதம் இருப்பது,

உடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றுவது,

ஆகியவற்றின் மூலம் உடல்எடையைக் குறைப்பதுதான் இந்த டயட் முறையாகும்.

என்ன செய்யணும்?

என்ன செய்யணும்?

இந்த டயட்டை ஆரம்பிக்கும் முன்பு, தொடக்கத்திலேயே உடலில் உள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்ற வேண்டும். அதற்காக இந்த டயட்டை ஆரம்பிப்பதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பிருந்து எந்த உணவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இடையிடையே ஸ்நேக் ஜூஸ் மட்டும் தான் குடிக்க வேண்டும். முழுக்க முழுக்க விரதத்தில் இருந்து, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதுதான் இந்த டயட்டின் அடிப்படை.

ஸ்நேக் ஜூஸ் தயாரிப்பது எப்படி?

ஸ்நேக் ஜூஸ் தயாரிப்பது எப்படி?

இந்த ஸ்நேக் ஜூஸூக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. ஸ்நேக் ஜூஸ் என்பது தண்ணீர், கடல் உப்பு மற்றும் பொட்டாசியம் குளோரைடு சேர்ந்த கலவை தான்.

தேவையான பொருள்கள்

தண்ணீர் - 2 கிளாஸ்

கடல் உப்பு - 1 ஸ்பூன்

பொட்டாசியம் குளோரைடு - 1 ஸ்பூன்

ஆப்பிள் சீடர் வினிகர் - 4 ஸ்பூன்

செய்முறை

தண்ணீரில் கடல் உப்பு மற்றும் பொட்டாசியம் குளோரைடை மேலே கொடுக்கப்பட்ட அளவில் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போது தாகம் எடுக்கிறதோ அல்லது பசிக்கிறதோ அந்த சமயத்தில் இந்த ஸ்நேக் ஜூஸில் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குடியுங்கள். ஆப்பிள் சீடர் வினிகரை முன்கூட்டியே கலந்து வைக்க வேண்டாம். ஸ்நேக் ஜூஸ் குடிக்கும்போது கலந்து கொண்டால் போதுமானது.

நன்மைகள்

நன்மைகள்

கொழுப்பை அதிவேகமாகக் குறைத்து, உடல் எடையைக் குறைக்கும்.

உடலில் உள்ள நச்சுக்கழிவுகள் வெளியேற்றப்படும்.

உடலில் எலக்ட்ரோலைட்டுகள் அதிகரிக்கச் செய்யும்.

உடலை புத்துணர்வாக வைத்துக் கொள்ளும்.

டைப் 2 நீரிழிவை கட்டுப்படுத்தும்.

பாலியல் நோய்களை (ஹெர்பஸ்) குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இவை எல்லாவற்றையும்விட, நாம் அளவுக்கதிகமாக விரும்பி உண்ணும் சர்க்கரை உணவுகள் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்.

இவ்வளவு நல்ல விஷயம் இருந்தா நாம உடனே இந்த ஸ்நேக் டயட்டுக்கு மாறித்தானே ஆகணும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Snake Diet: Can Eating Like A Snake Help You Lose Weight?

nake diet is a fasting-focused approach to losing weight through different phases, namely, removal of toxins from the body.
Story first published: Thursday, April 26, 2018, 12:48 [IST]
Desktop Bottom Promotion