For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்

உடல் எடை அதிகரிப்பு என்பது இப்பொது வயதானவர்கள் முதல் பதின்ம வயதில் இருபவர்கள் வரையென அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது. குறைந்த அளவே சாப்பிட்டாலும் உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்

|

உடல் எடை அதிகரிப்பு என்பது இப்பொது வயதானவர்கள் முதல் பதின்ம வயதில் இருபவர்கள் வரையென அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் மாறிவிட்ட நமது உணவுப்பழக்கமும், அதிகரித்துவிட்ட நமது சோம்பேறித்தனமும்தான். நீண்டநேர உடலுழுழைப்பு இல்லாத வேலை, சீரற்ற உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை என பெட்ரோல் விலை போல நமது உடல் எடையும் அதிகரித்து கொண்டே செல்ல ஏராளமான காரணங்கள் உள்ளது.

உடல் எடையை குறைக்க பல முயற்சிகள் செய்தும், உணவுமுறையை பின்பற்றியும், ஜிம்மிற்கு சென்றும் பலன் கிடைக்கவில்லையென நீங்கள் சோர்ந்து போயிருக்கலாம். சாப்பிடாமல் இருந்தாலும் எடை அதிகரிக்கும் என உங்களுக்கு தெரிந்திருக்க்கும். எனவே குறைந்த அளவே சாப்பிட்டாலும் உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் வழங்கக்கூடிய பொருள் இருந்தால் உங்களுக்கு மகிழ்ச்சிதானே. அப்படி குறைந்தளவே சாப்பிட்டாலும் உடலுக்கு தேவையான புரோட்டின், வைட்டமின் என அனைத்தையும் வழங்கும் சில விதைகளைபற்றி இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆளி விதைகள்

ஆளி விதைகள்

ஆளி விதையில் அதிகளவு பைபர் மற்றும் புரோட்டின் உள்ளது, அதேசமயம் குறைந்தளவு கலோரிகள் உள்ள இது எளிதில் செரிமானம் அடையக்கூடியது. ஒமேகா 3 அமிலம் அதிகம் உள்ள இது உடலில் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. வயிற்றுக்கொழுப்பை கரைக்க உதவும் தெர்மோஜெனிசிஸ் எனும் ஹார்மோன் சுரப்பை இது அதிகரிக்கிறது. எனவே இது எடை குறைப்புக்கு மிகச்சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. முழு விதைகளை விட உடைத்த ஆளி விதைகள் அதிக ஆரோக்கியம் வாய்ந்தவை, இது குடல் பாதைகளில் எளிதாய் கடக்கக்கூடியது. எனவே இதனை அரைத்து சூப், மோர், போன்றவற்றில் கலந்து குடிக்கவும். இது சுவையையும் அதிகரிக்கும், கலோரிகளையும் குறைக்கும்.

திணை

திணை

உலகின் மிகசத்தான உணவுகளில் ஒன்றாக திணை கருதப்படுகிறது. இதனை முழுதானியமாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதில் அமினோ அமிலம், புரோட்டின், பைபர், மெக்னீசியம் மற்றும் ஜிங்க் உள்ளது. உடல் எடை குறைப்பதில் இதன் குறைவான க்ளெசமிக் அளவால் இது முக்கியப்பங்கு வகிக்கிறது. இதனை அரிசி போலவே சமைக்கலாம். இல்லையெனில் உப்புமாவாகவோ அல்லது கலவை சாதமாகவோ கூட சமைத்து சாப்பிடலாம்.

பூசணி விதைகள்

பூசணி விதைகள்

பூசணி விதைகள் எடை குறைப்பிற்கு மட்டும் உதவாமல் இதிலுள்ள ஜிங்க் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. இது இரத்தத்தின் சர்க்கரை அளவை சரிசெய்வதோடு இதிலுள்ள புரோட்டின் செரிமான மண்டலத்தை சரிசெய்து மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. குறிப்பாக இது அசிடிட்டி ஏற்படுவதை தடுக்கிறது. இதிலுள்ள மெக்னீசியம் மற்றும் கால்சியம் வீக்கங்களை குறைக்கிறது. இதனை வறுத்து சாப்பிடவேண்டும், இது சிறந்த சிற்றுண்டியாகவும் இருக்கும்.

சியா விதைகள்

சியா விதைகள்

பொதுவாக மற்ற விதைகள் ஆரோக்கியமானதாய் இருக்கும்போது, சியா விதைகள் சற்று வித்தியாசமானவையாக இருக்கிறது. இதில் ஒமேகா 3 அமிலம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இதிலுள்ள அதிகளவு பைபர் உடல் அதிக நீரை உறிஞ்சுவதற்கு பயன்படுகிறது. இது ஒரு ஜெல் போன்ற அமைப்பை உருவாக்கி நீண்ட நேரத்திற்கு பசியெடுக்காமல் பார்த்துக்கொள்கிறத மேலும் அதிக ஆற்றலையும் வழங்குகிறது. இதனை சாப்பிடுவதற்கு முன்னர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.

எள்

எள்

இது பெரும்பாலும் சுவைக்காகவும், உணவை அலங்கரிக்கவும் பயன்படுத்தப்படுகிறதே தவிர ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தபடுவதில்லை. இது பைபர், ஜிங்க், மெக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் ஈ என ஐந்து முக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. இதிலுள்ள நார்சத்து உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு மிகவும் அவசியமானது. அதுமட்டுமன்றி உணவின் சுவையையும், வாசனையையும் அதிகரிக்கக்கூடியது. இதனை சாப்பாடு, நூடுல்ஸ், தின்பண்டங்கள் என அனைத்திலும் சேர்த்து சாப்பிடலாம்.

தர்பூசணி விதைகள்

தர்பூசணி விதைகள்

தர்பூசணி விதைகள் நுண்சத்துக்களான இரும்புசத்து மற்றும் ஜிங்க் நிறைந்தது. இந்த இரண்டு சத்துக்களும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியாதது. 24 கிராம் தர்பூசணி விதைகளில் இருந்து நாம் 1 கிராம் புரோட்டினை பெறலாம். இது உடல் எடையை குறைப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதனை மிகவும் எளிமையாக சூரிய ஒளியில் காயவைத்து சாப்பிடலாம் அல்லது சட்னியாவோ, சாலடாகவோ சாப்பிடலாம்.

சணல் விதைகள்

சணல் விதைகள்

இது மனஅழுத்தத்தை குறைக்கக்கூடியவை, இதிலுள்ள ஒமேகா 3 அமிலம் உங்கள் உடல் எடையை குறைக்க மிகவும் ஏற்றது. மேலும் இது சிறந்த ஆக்சிஜனேற்றியாகவும், வீக்கத்தை கட்டுப்படுத்துவதாகவும் பயன்படுகிறது. இதனை வறுத்து சாப்பிடலாம் அல்லது சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.

முலாம் விதைகள்

முலாம் விதைகள்

இந்த பழம், கேன்டூபூப் என்று அழைக்கப்படும், இவை ஆம்பீ-லினோலெனிக் அமிலத்தின் வடிவத்தில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை வழங்குகின்றன. முலாம் பழத்தின் விதைகள் நமது நாட்டில் சாப்பிடப்படாவிட்டாலும் வெளிநாடுகளில் குறிப்பாக தெற்கு அமெரிக்காவில் மக்கள் இதனை விரும்பி உண்கின்றனர். கான்ப்ளவர் மாவுக்கு பதிலாக இதனை அரைத்து பயன்படுத்தினால் ஆரோக்கியமும் கிடைக்கும், சுவையும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health benefits of various seeds

Eating seeds can help to reduce our weight. Yes, it's true, according to studies, eating seeds, which are good sources of nutrients, can help you lose weight. Here are some seeds which can help us to reduce belly fat.
Desktop Bottom Promotion