For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொப்பையும் வயிறுமா வெளில போகவே வெட்கமா இருக்கா? 2 வாரம் இத சாப்பிடுங்க...

ஆசையா வாங்கின டிரஸ் சில நாட்களிலேயே போட முடியாமல் போச்சா? தொப்பையும் வயிறுமா வெளியே செல்ல வெட்கப்படுறீங்களா? உங்கள் எடை அதிகரிப்பே உங்களுக்கு பிரச்சனையாக வந்து நிற்கிதா? கவலையை விடுங்க. இரண்டு வாரத்தி

|

ஆசையா வாங்கின டிரஸ் சில நாட்களிலேயே போட முடியாமல் போச்சா? தொப்பையும் வயிறுமா வெளியே செல்ல வெட்கப்படுறீங்களா? உங்கள் எடை அதிகரிப்பே உங்களுக்கு பிரச்சனையாக வந்து நிற்கிதா? கவலையை விடுங்க. இதுவரை எடை இழப்பிற்கு ஏதோ ஏதோ செய்ஞ்சு நொந்து போய் இருப்பீங்க.

பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் நமக்கு பிடிச்சத கூட சாப்பிட முடியாமல் பட்டினியா கூட இருந்து பார்த்திருப்பீங்க. ஒன்னும் வேலைக்காகலையா? அதுக்குத்தான் நாங்க உங்களுக்கு ஒரு புதிய டயட் முறையை பரிசாக கொடுக்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை குறைப்பு டயட்

எடை குறைப்பு டயட்

இரண்டு வாரத்தில் எடையை இழப்பது என்பது ஒரு சவாலான காரியம் தான். ஆனால் அதையும் நடத்தி காட்டுவதே இந்த டயட் முறையின் சிறப்பாகும். இதுவரை நீங்கள் மாங்கு மாங்குனு உடற்பயிற்சி, கடுமையான டயட் முறைகளை மேற்கொண்டு தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது உங்கள் கைகளுக்கு வரப்பிரசாதமாக இந்த இந்திய டயட் முறை அமையப் போகிறது. ஆமாங்க இரண்டே வாரத்தில் உங்கள் எடையை குறைத்து சும்மா சிக்கினு வலம் வரப் போகிறீர்கள். சரி வாங்க இந்த டயட் முறை உணவுப் பட்டியலைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

முதல் வார டயட்

முதல் வார டயட்

முதல் வாரத்திலேயே உங்கள் உடலை கடுமையாக கஷ்டப்படுத்தினால் உடம்பு ஏத்துக்காது. புதிதான டயட் முறைக்கு உங்கள் உடலை முதலில் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப்படுத்த வேண்டும். நீங்கள் என்ன தான் டயட் இருந்தாலும் உடம்புக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களையும் உடலுக்கு கொடுக்க வேண்டும். எனவே உங்கள் டயட் முறையை அந்த மாதிரி அமைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

காலை பானம்

காலை பானம்

நீங்கள் காலையில் எழுந்ததும் குடிப்பதற்கான ஒரு சிறந்த பானம் சூடான நீர், லெமன் ஜூஸ் மற்றும் தேன் சேர்ந்த கலவை. இந்த பானம் உங்கள் ஆற்றலை அதிகரித்து உடலின் மெட்டா பாலிசத்தை துரிதப்படுத்தி உடம்பில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. இதனுடன் 1/2 ஸ்பூன் துருவிய இஞ்சியையும் சேர்த்துக் கொண்டால் உங்கள் எடை இழப்பு ஆசை சீக்கிரம் நிறைவேறிவிடும்.

காலை ஸ்நாக்ஸ்

காலை ஸ்நாக்ஸ்

உதாரணமாக காலையில் நீங்கள் 8 மணிக்கு எழுந்திருத்தால் 9-9.30 மணிக்கு காலை உணவை எடுத்துக் கொள்ள முயன்றால் 20 நிமிடங்களுக்கு முன்னதாக காலை ஸ்நாக்ஸ்யை எடுத்துப் கொள்ளுங்கள்.

5-6 பாதாம் பருப்பு

உப்பு மற்றும் எண்ணெய்யில் பொரிக்காத உலர்ந்த திராட்சை பழங்கள்.

பாதாம் பருப்பில் உள்ள நார்ச்சத்துகள் உங்கள் பசியை போக்கும்.

காலை உணவு

காலை உணவு

பட்டர் இல்லாமல் டோஸ்ட் செய்த 2 ப்ரவுன் பிரட்

2 வேக வைத்த முட்டை

1 கிளாஸ் பால்

இந்த உணவுகள் உங்களுக்கு தேவையான ஆற்றல் மற்றும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. ஆனால் அதிகமான கலோரிகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

மதிய உணவிற்கு முன்

மதிய உணவிற்கு முன்

நீங்கள் 9 மணிக்கு காலை உணவை முடித்து விட்டால் ஒரு 11 மணிக்கு சிற்றுண்டி சாப்பிட்டு கொள்ளுங்கள். இதற்கு வாழைப்பழங்களை தவிர மற்ற பழங்களை சேர்த்து கொள்ளலாம். அதிகமான கலோரியை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்வதை விட குறைவான கலோரியாக கொஞ்சம் கொஞ்சமாக எடுப்பது நல்லது. இதனால் உங்கள் உடல் எடையும் அதிகரிக்காது.

மதிய உணவு

மதிய உணவு

மதிய உணவிற்கான சரியான நேரம் 1-1.30 மணி ஆகும். முதல் வாரத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையை பின்பற்றுங்கள்.

வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், பீட்ரூட் இவற்றுடன் ஆப்பிள் சிடார் வினிகர் தூவி அரை தட்டின் அளவிற்கு சாலட்டை தயாரித்து கொள்ளுங்கள். உப்பு அதிகமாக சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதிகமான உப்பு உங்கள் உடம்பில் நீர்த்தேக்கத்தை உருவாக்கி உங்களை குண்டாக காட்டும்.

1/2 கப் அரிசி சாதம்

1/2 கப் பருப்பு தாளிக்காமல்

1/2 பெளல் குறைவான எண்ணெய்யில் சமைத்த காய்கறிகள்

1 மீடியம் வடிவ மீன் (ஆழமான பொரித்தல் இல்லாமல்)

மாலை நேர ஸ்நாக்ஸ்

மாலை நேர ஸ்நாக்ஸ்

இதை நீங்கள் ஒரு 4-4.30 மணியளவில் எடுத்து கொள்ளலாம். 1 கப் சூடான டீ யுடன் 2 க்ரீம் பிஸ்கட் சேர்த்து சாப்பிடலாம்.

இரவு உணவிற்கு முன்

இரவு உணவிற்கு முன்

இரவு 7 மணியளவில் இரவு உணவிற்கு முன் சிற்றுண்டி எடுத்து கொள்ளுங்கள். உப்பு இல்லாத 1/2 கப் சுண்டல் மற்றும் லெமன் ஜூஸ் சேர்ந்து அல்லது 1/2 பெளல் காய்கறி சூப், மிளகு மற்றும் இஞ்சி சேர்த்து சாப்பிடவும். மிளகில் உள்ள பைப்ரைன் கொழுப்பை கரைப்பதில் சிறந்தது. எனவே இதை அதிகமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

இரவு உணவு

இரவு உணவு

உங்கள் இரவு உணவை 8.30 மணிக்குள் முடித்து கொள்ளுங்கள்.

1/2 கப் தயிர் சாதம் /1 சப்பாத்தி

1/2 பெளல் குறைந்த எண்ணெய்யில் சமைத்த காய்கறிகள்

படுக்கைக்கு முன்

படுக்கைக்கு முன்

படுக்கைக்கு முன் சில உணவுகளை எடுத்துக் கொள்வது உங்கள் உடம்பில் மெட்டா பாலிசத்தை அதிகரித்து நிறைய கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. 1/2 ஸ்பூன் கற்றாழை ஜூஸ், லெமன் ஜூஸ் மற்றும் 1/2 ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து குடிக்கலாம். இந்த உணவை நீங்கள் படுக்கைக்கு போகும் 1 மணி நேரத்திற்கு முன்னதாக பருகவும்

இரண்டாவது வாரம்

இரண்டாவது வாரம்

முதல் வாரம் தொடர்ந்த டயட் முறைக்கு உங்களது உடல் இப்பொழுது பழகி இருக்கும். எனவே இரண்டாவது வாரம் டயட் முறையை மேற்கொள்ளும் போது உங்களுக்கு அது எளிதாக இருக்கும். எனவே இந்த டயட் முறையை நம்பிக்கையுடன் பின்பற்றி பலனை அடையுங்கள்.

காலை பானம்

காலை பானம்

இந்த டயட் முறையில் காலையில் எழுந்ததும் 1/2 ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் தேன் கொஞ்சம் வெதுவெதுப்பான நீர் சேர்த்து குடிக்க வேண்டும். இது உங்களுக்கு ஆற்றலை கொடுத்து உடம்பு மெட்டா பாலிசத்தை அதிகரிக்கிறது.

காலை உணவு

காலை உணவு

காலை உணவை கொஞ்சம் பசியை தாங்கும் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

1 பெளல் ஓட்ஸை, சுண்டக் காய்ச்சிய பாலுடன் சேர்த்து சமைத்து பாதாம் பருப்பு சேர்த்து சாப்பிடலாம் அல்லது 2 சப்பாத்தி மற்றும் வீட்டிலேயே தயிர் சேர்த்து சாப்பிடுங்கள்

2 வேக வைத்த முட்டைகள்

1 மீடியம் வடிவ பழங்கள் (வாழைப்பழத்தை தவிர)

பசியை தாங்குவதோடு இந்த டயட் நல்ல எனர்ஜியை உங்களுக்கு கொடுக்கும்.

மதிய உணவிற்கு முன்

மதிய உணவிற்கு முன்

நீங்கள் 9 மணிக்கு காலை உணவை முடித்து விட்டால் ஒரு 11 மணிக்கு சிற்றுண்டி சாப்பிட்டு கொள்ளுங்கள்.

கீரைகள், சுரைக்காய், வெள்ளரிக்காய் சேர்த்து 1 கிளாஸ் காய்கறிகள் அடங்கிய ஸ்மூத்தி. இதனுடன் புளிப்பு சுவை கொண்ட அன்னாசி பழம் போன்றவற்றை கூட சேர்த்து சுவைக்கலாம். உப்பு மற்றும் சர்க்கரை எதுவும் சேர்க்காமல் ஒரு ஸ்பூன் தேன் மட்டும் சேர்த்து கொள்ளுங்கள். கொஞ்சம் மிளகு சேர்த்து கொள்ளுங்கள்.

மதிய உணவு

மதிய உணவு

மதிய உணவை ஒரு 1 மணியளவில் எடுத்துக் கொள்ளலாம்.

1/2 கப் ரவை மற்றும் காய்கறிகள் சேர்த்த கிச்சடி இதில் கொஞ்சமாக உப்பு சேர்த்து கொள்ளுங்கள்

1/2 தட்டிற்கு பழங்கள் நிறைந்த சாலட், வாழைப்பழத்தை சேர்க்க வேண்டாம். கொஞ்சம் உப்பு சேர்க்காமல் ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து கொள்ளுங்கள்.

மாலை நேர ஸ்நாக்ஸ்

மாலை நேர ஸ்நாக்ஸ்

ஒரு 4 மணியளவில் கை நிறைய வேக வைத்த கொண்டைக்கடலை அல்லது மக்காச்சோளம் சேர்த்து கொஞ்சம் லெமன் மற்றும் உப்பு சேர்க்காமல் பயன்படுத்துங்கள். ஒரு கப் டீ எடுத்து கொள்ளுங்கள்.

இரவு உணவு

இரவு உணவு

7 மணிக்கு முன்னதாகவே உங்கள் இரவு உணவை முடித்து கொள்ளுங்கள்.

பிரக்கோலி, கேரட், முட்டைகோஸ், காலி பிளவர் அடங்கிய 1 பெளல் வெஜிடபிள் சாலட், 1 வேக வைத்த முட்டை சேர்த்து சாப்பிடுங்கள்.

இரவு உணவிற்கு பின்

இரவு உணவிற்கு பின்

ஒரு 8 மணியளவில் நீங்கள் 1 கப் சூடான பால் அருந்தலாம். இதை படுக்கைக்கு போவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்து கொள்ளுங்கள்.

படுக்கைக்கு போவதற்கு முன்

படுக்கைக்கு போவதற்கு முன்

படுக்கைக்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாக 1 ஸ்பூன் கற்றாழை ஜூஸ், 1/2 ஸ்பூன் பட்டை பொடி, 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். இது உங்கள் உடல் மெட்டா பாலிசத்தை வேகப்படுத்தும்.

குறிப்பு

குறிப்பு

இந்த இரண்டு வார இந்திய டயட் முறையில் ஒவ்வொரு முதன்மை உணவிற்கும் 3 மணி நேரம் இடைவெளியும் ஒவ்வொரு சிற்றுண்டி உணவிற்கும் 1.30 மணி நேரம் இடைவெளியும் இருக்க வேண்டும். மேலும் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து போதுமான நீர் அருந்துங்கள். இதன் மூலம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் எல்லாம் எரிக்கப்பட்டு விடும்.

நீர் அருந்துங்கள்

நீர் அருந்துங்கள்

மனித உடல் 70% தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இந்த நீர் தான் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை மற்ற உடல் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்கிறது. போதுமான தண்ணீர் சத்துடன் இருப்பது உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

உணவுகள்

உணவுகள்

பழச்சாறு, எனர்ஜி ட்ரிங், காய்கறிகள் ஜூஸ் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள். ஆல்கஹால் போன்ற மதுபானங்களை தவிருங்கள்.

இதனுடன் போதுமான தண்ணீர் அருந்துங்கள். தண்ணீர் உங்கள் உடலை கச்சிதமாக ஆரோக்கியமாக வைக்க உதவும். தண்ணீர் ஓரு ஜீரோ கலோரி உணவு, கார்போஹைட்ரேட் உள்ள சோடியம் இல்லாத பொருள் என்பதால் எளிதாக உங்கள் கொழுப்புகளை வெளியேற்றி உங்கள் தொப்பையை குறைத்து கச்சென்ற இடுப்பழகை தரும். மேலும் உடம்பில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமாக வாழ உதவும்.

என்ன சாப்பிடலாம்?

என்ன சாப்பிடலாம்?

நீங்கள் உங்கள் உடம்பை கட்டுக்கோப்பாக வைக்க விரும்பினால் முதலில் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கையில் எடுக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள் உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. வெள்ளை அரிசி, சான் விட்ச் போன்றவற்றை அதிகமாக எடுக்காதீர்கள். இதற்கு பதிலாக பாதாம் பருப்பு, சியா விதைகள், தேங்காய், காலிபிளவர் உடன் கொஞ்சம் சாதம் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள். இது பசியை தாங்குவதோடு உடலுக்கும் நல்லது. சிப்ஸ் போன்ற எண்ணெய்யில் பொரித்த உணவிற்கு பதிலாக கேரட் போன்றவற்றை பொரித்து சாப்பிடுங்கள். ஆரோக்கியமான உணவே வயிற்றின் சந்தோஷம்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

30 நிமிடங்கள் வேர்வை வெளியேற்றம் உங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது. எனவே தினமும் 30 நிமிடங்கள் கார்டியோ உடற்பயிற்சி செய்யுங்கள். இது அந்த நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவும். ஒடுதல், தரையில் படுத்து பிளாங்கிங் உடற்பயிற்சி போன்றவை உங்கள் உடம்பை ஒல்லியாக வைக்க உதவும். அதிகாலையில் எழுந்து வெளியே ஜாக்கிங் போவது சுத்தமான காற்றை சுவாசிக்க இயலும், இதனால் இரத்த ஓட்டம் சீராகும், உடம்பு மெட்டா பாலிசமும் வேகப்படும்.

உங்கள் தொப்பையை குறைக்க மட்டும் போராடாதீர்கள். இதனுடன் தசைகளை வலுவாக்கும் கார்டியோ கிக் பாக்ஸிங், ஸ்பின்னிங், பூட் கேம்ப் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இந்த 30 நிமிட உடற்பயிற்சி 200-300 பவுண்ட் உடல் எடையை இழக்க உதவுகிறது.

காபி

காபி

உடற்பயிற்சிக்கு முன் ஒரு கப் காபி குடித்து கொள்ளுங்கள். இது உங்களை சுறுசுறுப்பாக்கி உடற்பயிற்சியை உற்சாகமாக மேற்கொள்ள உதவும்.

உடலுறவு

உடலுறவு

திருமண வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வழி என்றே சொல்லலாம். நீங்கள் உங்கள் துணையுடன் 30 நிமிட உடலுறவை மேற்கொள்வதால் கிட்டத்தட்ட 144 கலோரிகள் வரை எரிகிறது. இதுவும் உங்கள் உடம்பில் உள்ள ஹார்மோன் செயல்பாட்டை ஒழுங்காக்கி உடல் எடை இழப்பை சாத்தியமாக்குகிறது.

30 நிமிட தூக்கம்

30 நிமிட தூக்கம்

நீங்கள் இரவில் கொஞ்சம் 30 நிமிடம் கூடுதலாக உறங்கினால் உங்கள் உடம்பின் சர்க்கரை தேவையை சேமித்த ஆற்றல் மூலம் எடுத்துக் கொள்கிறது. இதனாலும் உங்கள் எடை குறைய வாய்ப்புள்ளது.

அவசரமாக வேலைக்கு செல்லும் சமயங்களில் நீர் போன்றவற்றை அருந்துங்கள், காபி போன்றவை உங்கள் உடல் மெட்டா பாலிசத்தை சீரா் செயல்பட உதவாது.

மீன்

மீன்

நீங்கள் தினமும் சால்மன் மீனை எடுத்து வந்தால் சீக்கிரமாக கச்சிதமான உடல் எடையை பெற இயலும். இதற்கு காரணம் சால்மனில் உள்ள ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடல் எடையை குறைத்து ஃபிட்டாக வைத்திருக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian diet plan to lose weight in 2 weeks

he Indian diet plan for weight loss in 2 weeks can be highly effective to make you lose the unwanted weight quickly when combined with the right dosage of exercises
Desktop Bottom Promotion