For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க உடம்புக்கேற்ற சரியான டயட்டை தேர்வு செய்வது எப்படி?... இது தெரிஞ்சா ஈஸியா வெயிட் குறையும்...

அனைவரும் பார்க்க அழகாக தெரியவேண்டும் என நினைப்போம். ஆனால் உலகில் உள்ள பெரும்பாலானோர் அழகாக தெரிய ஒல்லியாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர்.

By Vivek Sivanandam
|

அனைவரும் பார்க்க அழகாக தெரியவேண்டும் என நினைப்போம். ஆனால் உலகில் உள்ள பெரும்பாலானோர் அழகாக தெரிய ஒல்லியாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். நமக்கு தொல்லையாக இருப்பது எப்படி இந்த 'கச்சிதமான உடலை' பெறுவது என்பது தான். கச்சிதமாக இருப்பது என்ற ஒற்றை வரையறை, கடந்த பல ஆண்டுகளாக உத்வேகம் பெற்று, தற்போது பல மில்லியன் டாலர் சந்தையாக உருவெடுத்து நிற்கிறது. ஒல்லியாக வேண்டும் என்ற ஆர்வம் உருவாகி அதிகரிக்க அதிகரிக்க மக்கள் தீடீரென டயட் எனப்படும் பத்தியத்தை துவங்கவும் நிறுத்தவும் செய்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டயட்டை தேர்வு செய்தல்

டயட்டை தேர்வு செய்தல்

பெரும்பாலனோர் டயர் மீதான பற்று அல்லது அவர்களின் நண்பர்/உறவினர்/ சகபணியாளர் முயற்சி செய்வதால் இவர்களும் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு அந்த டயர் நல்ல பலன்களை தரும் போது உங்களுக்கும் தரும் நினைக்கிறீர்கள். ஆனால் அது நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். தீவிர ஆலோசனையின்றி நிலையான டயட்டை தொடர்ந்து கடைபிடித்தால், அது உங்களுக்கு தீங்காக முடியவும் வாய்ப்புள்ளது. எனவே தோல்வியில் முடியாதவாறு எப்படி டயட் திட்டத்தை தேர்ந்தெடுப்பது? அதற்கு முன்பு, ஏன் டயர் தோல்வியில் முடிகிறது என பார்ப்போம்.

தோல்வியில் முடியும் டயட் - காரணம் என்ன?

தோல்வியில் முடியும் டயட் - காரணம் என்ன?

கடந்த சில வருடங்களாக நாம் உருவாக்கி வரும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள் இரவு நேரங்களில் கடினமான சூழலை உருவாக்குகின்றன. டயட்டை கடனுக்கு செய்யாமல் அதிக அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். உங்கள் தொடர் உணவு பழக்க வழக்கங்களுக்கு கருத்தில் கொள்ளாமல் அதற்கு முரணாக டயட்டைத் தேர்ந்தெடுப்பது முழுமை பெறாது. அதுமட்டுமின்றி அதை தொடர்ந்து கடைபிடிப்பதிலும் சிரமங்களை சந்திக்க நேரிடும். பெரும்பாலும் மக்களின் சரியான அர்பணிப்பு இல்லாத காரணத்தால், சிறிதளவு எடை குறைந்து, உடனே அதிகரித்துவிடும்.

எப்படி கண்டுபிடிப்பது

எப்படி கண்டுபிடிப்பது

2004ல், அமெரிக்கா மேரிலாண்ட்ல் உள்ள தேசிய ஆரோக்கிய நிறுவனத்தில் மூத்த கண்காணிப்பாளராக இருக்கும் டாக்டர் கெல்வின் ஹால், 'மிகப்பெரிய தோல்வியாளர்' என்ற நிகழ்ச்சியை துவங்கினார். 130 பவுண்டு எடையுள்ள மக்கள் ஒரு குறிப்பிட்ட டயட்டை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு, ஆறே ஆண்டுகளில் ஆச்சர்யப்படும் முடிவுகள் காண்பிக்கப்பட்டது.

பெரும்பாலானோர் விருப்பப்படி அதீத எடைகுறைப்பை நிகழ்த்தனர். ஆனால் 3 ஆண்டுகள் அவர்கள் 3ல் 2 பங்கு எடையை திரும்ப பெற்றனர் என கண்டுபிடிக்கப்பட்டது. நாம் தேர்ந்தெடுக்கும் டயட், நாக்குக்கு விருந்தளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும், நாம் எதிர்பார்க்கும் முடிவுகளையும் தரவேண்டும். அது போன்ற சிறந்த டயட்டை கண்டறிவது எப்படி என இங்கே காணலாம்.

டயட் வரலாற்றை கருத்தில் கொள்ளுங்கள்

டயட் வரலாற்றை கருத்தில் கொள்ளுங்கள்

ஏற்கனவே நீங்கள் கடைபிடித்து வந்த டயட் வரலாற்றை மதிப்பீடு செய்து, ஏன் அவை தோல்வியில் முடிந்தது என காரணங்களை பட்டியலிடுங்கள்.

உங்கள் டயட்டில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்தால், கொழுப்பு அல்லது கார்போஹைட்ரேட்களை குறைப்பதற்கு பதிலாக, பகுதி கட்டுப்பாடுகளை கற்பிக்கும் டயட்டை தேர்ந்தெடுங்கள்.

கார்போஹைட்ரேட் டயட்

கார்போஹைட்ரேட் டயட்

கொழுப்பு அல்லது கார்போஹைட்ரேட்கள் நமது உடல்நலத்திற்கு மிகவும் முக்கியமானவை. குறைந்த கொழுப்பு அல்லது குறைந்த கார்போஹைட்ரேட்-ஐ பரிந்துரைக்கும் டயட் நீண்ட காலம் நீடிக்காது.

குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள ப்ரோட்டீன் டயட்கள் ஒவ்வொரு 2மணி நேரத்திற்கு ஒரு முறையும் குறைந்த அளவு விதவிதமாக உணவுகளை உண்ணலாம்.

நீங்கள் எப்போதும் பசி எடுப்பது போல உணருகிறீர்கள் என்றால், பகுதி கட்டுப்பாட்டில் அதிகம் கவனம் செலுத்தாத டயட்டை தேர்ந்தெடுங்கள். கொள்ளளவு டயட் அல்லது 5 காரணி டயட் போன்றவை, குறைந்த கலோரிகள் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்பட அதிகளவு உணவு உண்ண அனுமதிக்கிறது.

டயட்டில் மருத்துவர்கள்

டயட்டில் மருத்துவர்கள்

உங்களின் எடை குறைப்பு திட்டம் அல்லது டயட்டை துவங்கும் முன்பு மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது முக்கியம். மருத்துவர் உங்களின் மருத்துவ பிரச்சனைகளை ஆராய்ந்து, டயட் திட்டத்திற்கான சரியான வழிமுறைகளை வழங்குவார். மேலும் என்ன சாப்பிடலாம், எவ்விதமான உடற்பயிற்சி செய்யலாம் என கேட்டுக் கொள்ளலாம்.

அதிக இரத்த அழுத்தம் அல்லது நீரளிவு நோய் உள்ளவர்கள் குறைந்த உப்பு பயன்படுத்தும் டயட் திட்டத்தை தேர்வுசெய்யலாம். கீடோ டயட்கள் இது போன்ற சூழ்நிலைகளில் பரிந்துரைக்கப்படுகிறது.

குறிப்பிட்ட திட்டத்தில் சாப்பிடுதல்

குறிப்பிட்ட திட்டத்தில் சாப்பிடுதல்

எடையை குறைக்கும் விதமாக ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரிகள் சாப்பிட வேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருக்க வேண்டும். சில டயட் திட்டங்களில் எவ்வளவு கலோரிகள் உட்கொள்கிறோம் என்பது கூறப்படும். மற்றவற்றில் கலோரிகள் எடுத்துக்கொள்வதில் நெகிழ்வுத்தன்மை இருக்கும்.

ஆர்வமாக இருத்தல்

ஆர்வமாக இருத்தல்

முழுவதும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப டயட் திட்டத்தை தேர்வு செய்வது சொர்க்கத்திற்கு ஈடானது. எனவே தற்போதைக்கு அதில் அதித ஆர்வம் செலுத்தி அர்பணிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் டயட்டை ஆதரிக்கும் நபர்களுடன் இருப்பது அதிக உதவிகரமாக இருக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து அல்லது பெரும்பாலான கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் டயட்டை தேர்ந்தெடுங்கள். இதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், தமக்காக செய்கிறோம் என முயற்சி செய்து, நேர்மறையாக எதிர்கொள்ளுங்கள். ஒவ்வொரு அடியும் உங்கள் லட்சத்தியத்தை அடைய வழிவகுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Select A Diet That Will Work? 4 Tips To Help You Succeed

Everyone wants to look good, but for many people around the world this means looking wafer-thin.
Story first published: Sunday, July 29, 2018, 12:19 [IST]
Desktop Bottom Promotion