For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விளக்கெண்ணெய் குடிச்சா வயிற்று சதை குறையுமா?... எந்த நேரத்தில் எவ்வளவு குடிக்கணும்?

ஆமணக்கு எண்ணெய் பல்வேறு உடல் பிரச்சினைகளை சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, எடை இழப்பு மாத்திரை அல்லது அதிக கட்டுப்பாடான உணவுகளை தவிர்த்து ஆமணக்கு எண்ணெய் எடுத்துக்கொள்ளும் பொது 2 வாரங

|

ஆமணக்கு எண்ணெய் குறிப்பாக தலைமுடி வளர்ச்சிக்கு நல்லது என்று அறியப்படுகிறது. ஆனால் ஆமணக்கு எண்ணெய் வயிறு கொழுப்பைக் குறைக்க உதவுமா? (Ricinus communis) ரிச்சினஸ் கம்யூனிஸ் என்ற செடியில் இருந்து எடுக்கப்படும் இந்த ஆமணக்கு எண்ணெய் இந்தியாவை பூர்விகமாக கொண்டது. இது கொழுப்பு உறிஞ்சுதலைத் தடுத்து, வீக்கம் ஆகியவற்றை குறைத்து, மற்றும் மலமிளக்கியாக செயல்படுவதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து அதன் மூலம் எடையை குறைக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை இழப்பு

எடை இழப்பு

பல நூற்றாண்டுகளாக, ஆமணக்கு எண்ணெய் பல்வேறு உடல் பிரச்சினைகளை சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, எடை இழப்பு மாத்திரைகள் அல்லது அதிக கட்டுப்பாடான உணவுகளை தவிர்த்து ஆமணக்கு எண்ணெய் எடுத்துக்கொள்ளும் பொது 2 வாரங்களில் 10 பவுண்டுகள் வரை எடை இழக்க வாய்ப்புண்டு! எடை இழப்புக்கான ஆமணக்கு எண்ணெய் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை கீழே காணலாம்.

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் என்பது (Ricinus communis) ரிச்சினஸ் கம்யூனிஸ் தாவரத்தின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் பிங்க் மற்றும் வெளிர் மஞ்சள் நிற எண்ணெய் ஆகும். இது ஒரு தனித்துவமான சுவை மற்றும் வாசனை மற்றும் monounsaturated கொழுப்பு அமிலம் நிறைந்து உள்ளது. இதில் வைட்டமின் ஈ மற்றும் தாதுப்பொருள்கள் போன்ற தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இது வியக்கத்தக்க அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் உணவு பதப்படுத்தும் பொருளாக மிட்டாய்களில் மற்றும் உணவு பேக்கேஜிங் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இது முடி வளர்ச்சி தூண்டுகிறது மற்றும் ஒரு மலமிளக்கியாக செயல்பட கூடியது. ஆமணக்கு எண்ணெய் பல வகையான சுகாதார நன்மைகளை வழங்குகிறது.

பயன்பாடுகள்

பயன்பாடுகள்

பல வழிகளில் அதைப் பயன்படுத்தலாம். பல மருந்து நிறுவனங்கள் இதை பூஞ்சை தொற்றுக்களை தடுக்கும் மருந்து தயாரிக்கவும் வேதிச்சிகிச்சைக்கு (chemotherapy) மருந்து செய்யவும் மேலும் பல்வேறு மருந்துகளை தயாரிப்பதற்கான ஒரு மூலப்பொருளாக பயன்படுத்துகின்றன. இது ஒப்பனை மற்றும் சோப்புகளை தயாரிப்பதற்கான ஒரு முக்கிய பொருளாகவும் பயன்படுகிறது. இந்த எண்ணெய் குறிப்பிடத்தக்க நன்மைகள் ஒன்று நாள் பட்ட தொப்பையை குறைக்க உதவவும். தங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க விரும்பினால் உணவில் ஆமணக்கு எண்ணெய் சேர்க்கலாம். இதன் மூலம் விரைவில், அவர்கள் கொழுப்பு மற்றும் உடல் எடை குறைவுடன் வைத்திருக்க உதவும் ஒரு நல்ல இரகசிய இயற்கை மூலப்பொருளாக பயன்படும்.

எடை இழப்புக்கு எவ்வாறு பயன்படுத்துவது?

எடை இழப்புக்கு எவ்வாறு பயன்படுத்துவது?

எடை இழக்க ஆமணக்கு எண்ணெய்யை 2-3 தேக்கரண்டி உணவாக எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் பசியின்மையை கொடுக்கும். மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலில் தண்ணீர் சேருவதை தடுத்து, எடை இழக்க குறைந்தபட்சம் ஒரு சில பவுண்டுகள் வரை உதவுகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த மலமிளக்கியாகும், எனவே நீண்ட காலமாக இதை பயன்படுத்தக்கூடாது. ஆமணக்கு எண்ணெய் அதிகம் எடுத்துக்கொண்டால் எலக்ட்ரோலைட் மற்றும் உடலில் திரவ ஏற்றத்தாழ்வு ஏற்படலாம். இது உங்கள் செரிமான குழாயை எரிச்சலூட்டும். எனவே, இங்கே எடை இழப்புக்கு ஆமணக்கு எண்ணெய்யை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கீழே காண்போம்.

உணவாக

உணவாக

காலை உணவுக்கு முன் இரண்டு மூன்று தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். பலருக்கு அதன் சுவை பிடிக்கவில்லை என்றால் அதனை சில பழ சாறு கலந்து சாப்பிடலாம். நுகர்வு பிறகு, உங்கள் குடல் இளகி உங்களை கழிப்பறைக்கு செல்ல தூண்டும். நீங்கள் ஒரு வாரம் இந்த முறையை தொடரலாம் மற்றும் உங்கள் எடையை அடிக்கடி சரிபார்க்கவும். ஆமணக்கு எண்ணெய் கண்டிப்பாக உடல் எடையை இழக்க உதவும். பெருங்குடல் அழற்சி மற்றும் நீண்டகால மலச்சிக்கல் போன்ற பலவீனமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால், ஆமணக்கு எண்ணெய் தொடர்ச்சியாக உட்கொள்வதை தவிக்கவும்.

உடலின் வெளிப்புறமாக

உடலின் வெளிப்புறமாக

ஆமணக்கு எண்ணெய் ஒரு தேக்கரண்டியை லேசாக சூடு செய்யவும். இதை கொண்டு எண்ணெய் சூடாக, அடிவயிற்றில் மசாஜ் செய்யவும். பரவலான பயன்பாடு தொப்பை பகுதியில் அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதன் மூலம் உங்கள் உடல் எடையயை கட்டுப்படுத்த உதவும். ஆமணக்கு எண்ணைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்தை இறுக்கமடையச் செய்ய உதவுகிறது இது பெரும்பாலும் பிரசவத்திற்கு பிறகு உங்கள் வயிற்று பாகத்தை புத்துணர்ச்சி செய்ய உதவும்.

உடல் கொழுப்பு

உடல் கொழுப்பு

இப்போது, நம்மில் பலருக்கும் வரும் பிரச்சனை கொழுப்பு வயிற்று கொழுப்பு. இது போன்ற ஒரு கவலையை கொடுக்குக்கும் பிரச்னை வேறு எதுவும் இல்லை, இது நீரிழிவு, இதய நோய்கள், முதலிய நோய்கள் மற்றும் பிற நோய்களின் மூல காரணமாக இருப்பதால் நீங்கள் அதை கட்டுப்படுத்துதல் அவசியம். இங்கே வயிற்று கொழுப்பைக் களைய எவ்வாறு ஆமணக்கு எண்ணெய் உதவும் என்பதை காணலாம்.

வயிற்று கொழுப்பை நீங்க

வயிற்று கொழுப்பை நீங்க

வயிற்றுப் பகுதியிலுள்ள கொழுப்பை எரிக்க நீங்கள் இந்த எண்ணெய்யை தடவலாம். இது கர்ப்பம், அதிக உணவு சாப்பிடுவது அல்லது உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால் ஏற்படும் கொழுப்பை மற்றும் தொப்பையை தீர்க்க உதவும். நீங்கள் கீழ்கண்ட முறைகளை பின்பற்றி வயிற்று கொழுப்பை கட்டுக்குள் வைக்கலாம்.

• 3 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்

• பிளாஸ்டிக் உறை

• சூடான தண்ணீர் பை

• உங்கள் வயிற்றை மூடிக்கொள்வதற்கு ஒரு துண்டு

• முறுக்கப்பட்ட துண்டு

எப்படி உபயோகிப்பது

எப்படி உபயோகிப்பது

1. தரையில் வசதியாக அமர்ந்து கொள்ளவும், சுருட்டப்பட்ட துண்டு கொண்டு உங்கள் முதுகை வசதியாக சாய்த்துக் கொள்ளவும்

2. உங்கள் விரல் நுனியில் ஆமணக்கு எண்ணெயை தொட்டுக்கொண்டு, ஒரு வட்ட இயக்கத்தில் உங்கள் வயிற்றில் அதை தடவிவிடவும். 10 நிமிடங்களுக்கு இது போன்று நன்றாக மசாஜ் செய்யவும்.

3. இப்போது, மற்ற துண்டு கொண்டு வயிறு பாகத்தை மூடி அதன் மேல் பிளாஸ்டிக் பை கொண்டு மூடி வைக்கவும்.

4. இறுதியாக, பிளாஸ்டிக் பையின் உள் சூடான தண்ணீர் வைத்திருங்கள்.

5. 10 நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும் பின் பை மற்றும் துண்டை நீக்கலாம் 6. விரும்பிய முடிவுகளைப் பார்க்க வழக்கமான இதை செய்யுங்கள்.

தொப்பை கொழுப்பை இழக்க

தொப்பை கொழுப்பை இழக்க

தேவையான பொருள்கள்

• 15-60 மில்லி ஆமணக்கு எண்ணெய்

• 1 கப் கார்ன்பெரி சாறு

தயாரிப்பது எப்படி

1. ஒரு கப் சாறுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்க்கவும்.

2. நன்றாக கலக்கி வெறும் வயிற்றில் குடிக்கவும்.

குறிப்புகள்

வயிறு கொழுப்பை இழக்க ஆமணக்கு எண்ணெய்யை பருகலாம்.

விளக்கெண்ணெய் & இஞ்சி தேயிலை சாறு - வயிற்று கொழுப்பை இழக்க

விளக்கெண்ணெய் & இஞ்சி தேயிலை சாறு - வயிற்று கொழுப்பை இழக்க

• அரைத்த 1 அங்குல இஞ்சி வேர்

• 1 கிரீன் தேநீர் பை

• 1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்

• 1 கப் தண்ணீர்

தயாரிப்பது எப்படி

1. ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

2. 3 நிமிடங்கள் அரைத்த இஞ்சி வேர் சேர்த்து கொதிக்க விடவும்.

3. கொதிக்க வைத்த நீரை வடி கட்டவும்.

4. பச்சை தேயிலை பையை 1 நிமிடம் வடி கட்டிய நீரில் இட்டு வைக்கவும்.

5. தேயிலை பையை பிழிந்து, ஆமணக்கு எண்ணெயை சேர்த்து நன்கு கலக்கி, பருகவும்.

இந்த முறைகளை பின்பற்றுவதன் மூலம் தொப்பை மற்றும் கொழுப்பை குறைக்கலாம். இதை தவிர ஆமணக்கு எண்ணெய்யின் மற்ற நன்மைகள் என்ன என்று காண்போம் .

மற்ற நன்மைகள்

மற்ற நன்மைகள்

உடலின் நச்சுத்தன்மையை குறைக்கும்

ஆமணக்கு எண்ணெய் நுகர்வு எடை இழப்பு தவிர உடலின் நச்சுத்தன்மையை குறைக்க உதவும். நீங்கள் ஆமணக்கு எண்ணெயை உட்கொள்ளும் பொது, கழிவு நீக்க உறுப்புகளை தூண்டி உடலில் உள்ள நச்சுகளை அகற்றி உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

ஆண்டிமைக்ரோபியல் பண்புகள்

ஆண்டிமைக்ரோபியல் பண்புகள்

உங்கள் உணவுடன் ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறிது சேர்க்கும் போது எடை குறைவதுடன், நீங்கள் அதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளை அனுபவிக்க முடியும். இது உணவு குழாயில் உள்ள பூஞ்சை நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. நீங்கள் வலி மற்றும் அரிப்பு இவற்றில் இருந்து வியக்கத்தக்க நிவாரணத்தை உணர முடியும். இந்த எண்ணெய் நிண நீர் குழாய்களில் ஏற்படும் அடைப்பு முதலியவற்றை சீராக்கும்.

முகப்பரு குறைக்க உதவுகிறது

முகப்பரு குறைக்க உதவுகிறது

ஆமணக்கு எண்ணெய் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. முகப்பரு பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படுகிறது இதனால் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சியை ஆமணக்கு எண்ணெய் தடவுவதால் குறைக்க முடியும்.

மலச்சிக்கலைத் தடுக்கிறது

மலச்சிக்கலைத் தடுக்கிறது

ஆமணக்கு எண்ணெய் ஒரு மலமிளக்கியாகும் மேலும் குடல் இயக்கத்தை மேம்படுத்தவும், நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. அடிக்கடி மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது மிகவும் நல்ல நிவாரணி. காலையில் ஆப்பிள் பழச்சாறுடன் ஆமணக்கு எண்ணெய் கலந்து பருகினால் மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

ஆமணக்கு எண்ணெய் உடலுக்கு வெளியே தடவும்போது நோயெதிர்ப்பு செல்கள் அல்லது டி -11 செல்கள் அதிகரிக்கிறது. இவை வெளி நோய்க்கிருமிகளுக்கு எதிராக போராடும் ஆன்டிபாடிகளை உருவாக்கி உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும்.

முடி இழப்பை தடுக்கிறது

முடி இழப்பை தடுக்கிறது

இந்த எண்ணெய் முடி இழப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ள, தலை பொடுகு, உச்சந்தலையில் திட்டுகள் மற்றும் உலர்ந்த தலை உச்சி போன்றவற்றை தடுக்கிறது. மேலும், ஆமணக்கு எண்ணெய் கொண்டு உச்சந்தலையை மசாஜ் செய்வது நல்ல கட்டியான மற்றும் நீண்ட முடி வளர்வதற்கு உதவுகிறது.

தோல் முதிர்ச்சியை தாமதப்படுத்தும்

தோல் முதிர்ச்சியை தாமதப்படுத்தும்

ஆமணக்கு எண்ணெய், கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தி தூண்டுகிறது. இது தோலினை ஈரப்பதமாக வைப்பதுடன், இதனால் சுருக்கங்கள் தொழில் உண்டாவது தடுக்கப்படுகிறது. ஆமணக்கு எண்ணெய் தோலினூடே ஆக்ஸிஜன் புழக்கத்தை தாராளமாக கிடைக்க செய்வதனால், இதனால் இளம் மற்றும் ஆரோக்கியமான தோலை வைத்திருக்க உதவுகிறது.

இதனால் ஆமணக்கு எண்ணெய் நமக்கு மிகவும் உதவியாக உள்ளது என்பது தெளிவு. ஆனால் மலிவான மற்றும் சுத்தமான ஆமணக்கு எண்ணெய் எங்கே கிடைக்கும்?

ஆமணக்கு எண்ணெய் எங்கே வாங்கலாம்?

ஆமணக்கு எண்ணெய் எங்கே வாங்கலாம்?

நீங்கள் ஆன்லைனில் வாங்கலாம் அல்லது உள்ளூர் ஆயுர்வேத கடைகளில் இதை வாங்கலாம். இதன் கவரின் மேற்புறத்தில் இந்த எண்ணெய் பயன்பாடு பற்றிய அறிவுரைகள் உள்ள லேபிளைச் சரிபார்க்கவும். அதில் இந்த எண்ணெய் உணவுக்கு உகந்தது இல்லை என்று கூப்பிட்டு இருந்தால் நீங்கள் அதை சாப்பிட கூடாது, ஏனென்றால், நீங்கள் சமையலுக்கு என்றால் நல்ல பிராண்ட்கள் ஆமணக்கு எண்ணெய் வாங்க வேண்டும்.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

ஆமணக்கு எண்ணெய் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகம் நுகர்வு ஆபத்தானது. அதில் என்ன என்ன ஆபத்து உள்ளதை இங்கே காண்போம்.

• வயிற்றுப்போக்கு

• தசைப்பிடிப்பு

• மயக்கம்

• குமட்டல்

• இரைப்பை எரிச்சல்

• தோல் தடிப்பு

• நச்சுத்தன்மை

பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்

• எடை இழப்புக்கு ஆமணக்கு சாப்பிடுவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.

• ஆமணக்கு எண்ணெயை உண்ணுவதற்கு, சமையல் தர ஆமணக்கு எண்ணெய் வாங்கவும்.

• 7 நாட்களுக்கு மேலாக ஆமணக்கு எண்ணெயை உபயோகிக்க கூடாது.

முடிவாக, உடல் பருமன் என்பது அரோக்கியமில்லாத உடல்நல பழக்க வழக்கங்களின் காரணமாக ஏற்படும் ஒரு விளைவு. நீங்கள் உடல் எடை இழக்க ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும், மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறந்த எடை இழப்பு முடுக்கி மற்றும் உங்கள் ஒட்டுமொத்த சுகாதாரத்தை மேம்படுத்த உதவும். எனவே, உங்கள் மருத்துவர் இன்றே அணுகி ஆலோசனை பெற்று உடலின் கொழுப்பை கட்டுப்பாட்டில் வைக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does Castor Oil Help You Loss Weight?

Castor oil is famously known for its hair growth properties. But did you know that castor oil also helps reduce belly fat?
Desktop Bottom Promotion